உள்ளடக்கத்துக்குச் செல்

வஸ்தோக் 4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வஸ்தோக் 4
திட்டச் சின்னம்
திட்ட விபரம்
திட்டப்பெயர்: வஸ்தோக் 4
அழைப்புக்குறி:Беркут (Berkut - "Golden Eagle")
பயணக்குழு அளவு:1
ஏவுதல்: ஆகஸ்ட் 12, 1962
08:02:33 UTC
Gagarin's Start
இறக்கம்: ஆகஸ்ட் 15, 1962
06:59 UTC
48°9′N 71°51′E / 48.150°N 71.850°E / 48.150; 71.850
கால அளவு: 2d/22:56
சுற்றுக்களின் எண்ணிக்கை:48
சேய்மைப்புள்ளி:211 கிமீ
அண்மைப்புள்ளி:159 கிமீ
காலம்:88.2 நிமிடங்கள்
சுற்றுப்பாதை சாய்வு:65.0°
திணிவு:4728 கிகி
தொடர்புள்ள திட்டங்கள்
முந்திய திட்டம்அடுத்த திட்டம்
வஸ்தோக் 3வஸ்தோக் 5

வஸ்தோக் 4 என்பது சோவியத் விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். வஸ்தோக் 3 ஏவப்பட்ட ஒரு நாளில் இதுவும் ஏவப்பட்டது. இதன்மூலம், ஒரே நேரத்தில் இரு மனிதரை ஏற்றிய விண்கலங்கள் சுற்றுப்பாதையில் இருந்த முதல் நிகழ்வு ஏற்பட்டது. இக் கலத்தில் விண்வெளிவீரர் பவெல் பொப்போவிச் பயணம் செய்தார். இரு விண்கலங்களும் பூமியைச் சுற்றியபோது இரு கலங்களும் 5 கிலோ மீட்டர் இடைவெளிக்குள் நெருங்கி வந்ததுடன், இரு கலங்களுக்கும் இடையில் வானொலித் தொடர்பும் நடைபெற்றது.


இத் திட்டம் பெரும்பாலும் திட்டமிட்டபடியே நடைபெற்றாலும், வஸ்தோக் 4 இன் உயிர்காப்பு முறைமை சரியாக இயங்காததால் வெப்பநிலை 10 °ச வரை இறங்கியது. பொப்போவிச் கொடுத்த சமிக்ஞை ஒன்றை, அவர் விரைவாகக் கலத்தைப் பூமிக்குக் கொண்டு வருமாறு கேட்டதாகப் பிழையாகப் புரிந்து கொண்ட தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தினர், வஸ்தோக் 4 இன் பறப்பைத் திட்டமிட்டதற்கு முன்னதாகவே முடிவுக்குக் கொண்டுவந்தனர். இத் திட்டத்தின் மீள்கலம் மாஸ்கோவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. எனினும் இது வஸ்ஹோத் 2 கலத்தைப் போன்ற வடிவில் மாற்றப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வஸ்தோக்_4&oldid=2503705" இலிருந்து மீள்விக்கப்பட்டது