இசுப்புட்னிக் 6
Appearance
(ஸ்புட்னிக் 6 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இசுப்புட்னிக் 6 1960 இல் ஏவப்பட்ட ஒரு ரஷ்ய விண்கலமாகும். இது டிசம்பர் 1, 1960 இல் பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து எவப்பட்டதாகும். இதில் ப்ச்யோல்கா மற்றும் முஷ்கா என்னும் இரு நாய்களை அனுப்பினர். இவ்விண்கலம் தனது சுற்றுப்பாதையில் ஒரு நாள் இருந்தது, ஆனால் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்தது இறக்கப்பட்டது. மேலும் இது பூமிக்கு மீண்டும் திரும்பும் பொழுது முற்றிலுமாக எரிந்து சாம்பல் ஆனது.