உள்ளடக்கத்துக்குச் செல்

இசுப்புட்னிக் 4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்புட்னிக் 4
இயக்குபவர்சோவியத் ஒன்றியம்
முதன்மை ஒப்பந்தக்காரர்OKB-1
திட்ட வகைபுவியியல் அறிவியல்
செயற்கைக்கோள்பூமி
சுற்றுப்பாதைகள்~13,000
ஏவப்பட்ட நாள்மே 15, 1960 at 00:00:00 UTC
திட்டக் காலம்2 ஆண்டுகள் 113 நாட்கள்
தே.வி.அ.த.மை எண்1960-005A
நிறை1,477 கிகி (1,120 இறா.)
சுற்றுப்பாதை உறுப்புகள்
சாய்வு65.02°
சுற்றுக்காலம்92.25 நிமிடங்கள்


இசுப்புட்னிக் 4 என்பது சோவியத் ஒன்றியத்தின் விண்வெளித் திட்டத்தின் கீழ் ஏவப்பட்ட ஒரு செய்மதி ஆகும். ஸ்புட்னிக் திட்டத்தின் ஒரு பகுதியான இது, பின்னர் வஸ்தோக் திட்டத்தின் கீழ் உத்தேசிக்கப்பட்டிருந்த மனித வெண்வெளிப் பறப்புக்கு ஒரு சோதனைப் பறப்பாக அமைந்தது. 1960 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் இச் செய்மதி ஏவப்பட்டது. இதன் வழிகாட்டு முறைமையில் ஏற்பட்ட ஒரு கோளாறு செய்மதியை பிழையான திசையில் வழிகாட்டியது. இதனால், வளிமண்டலத்துள் இறங்குவதற்குப் பதிலாக இது இன்னும் உயரச் சென்று பூமியைச் சுற்றியது. பின்னர் 1962 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் நாள் புவியின் வளிமண்டலத்துக்குள் வந்தது.


மனிதரை ஏற்றிய விண்வெளிப் பறப்புக்களை நிகழ்த்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட தொடர் விண்கலங்களுள் இதுவே முதலாவதாகும். இது பல அறிவியற் கருவிகள், ஒரு தொலைக்காட்சித் தொகுதி, ஒரு பொம்மை மனிதனைக் கொண்ட உயிர் வாழ்வுக்கான வசதிகளைக் கொண்ட ஒரு சிற்றறை என்பவற்றைக் கொண்டிருந்தது. உயிர் வாழ்வதற்கான வசதிகளை வழங்கும் முறைமைகளின் இயக்கம் மற்றும் பறப்பில் ஏற்படக்கூடிய நிலைமைகளையும் ஆராயும் நோக்குடனேயே இக்கலம் வடிவமைக்கப்பட்டது. விண்கலம் ஏராளமான தொலை அளவீட்டுத் தகவல்களையும், முன்னரே பதிவு செய்யப்பட்ட குரலையும் வானலை மூலம் அனுப்பியது. நான்பு நாள் பறப்புக்குப் பின்னர், மீள்கலம், சேவைக் கலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, புவிக்குத் திரும்புவதற்கான ராக்கெட்டுகள் இயக்கப்பட்டன. இக்கட்டத்திலேயே வழிகாட்டு முறைமை சரியாக இயங்காமல் திட்டமிட்டபடி கலம் பூமியை நோக்கித் திரும்பவில்லை.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுப்புட்னிக்_4&oldid=1384504" இலிருந்து மீள்விக்கப்பட்டது