வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு
Appearance
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். வவுனியா மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் வடமாகாணத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- மன்னாகுளம்,
- கனகராயன்குளம்,
- சின்னடம்பன்,
- கங்கன்குளம்,
- நயினாமடு,
- குளவிசுட்டான்,
- மரஇலுப்பை,
- நெடுங்கேணி,
- மாமடு,
- ஒலுமடு,
- பட்டிக்குடியிருப்பு,
- கற்குளம்,
- ஊஞ்சல்கட்டி,
- பரந்தன்,
- புளியங்குளம்,
- ஆனந்தன்புளியங்குளம்,
- வெடிவைத்தகல்லு,
- மருதோடை
ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கில், அநுராதபுரம் மாவட்டமும், வவுனியா பிரதேச செயலாளர் பிரிவும் உள்ளன. மேற்கு, வடக்கு, கிழக்குத் திசைகளில் இப் பிரிவு முல்லைத்தீவு மாவட்டத்தினால், சூழப்பட்டுள்ளது. கிழக்கில் இதற்குத் திருகோணமலை மாவட்டத்துடனும் ஒரு சிறிதளவு எல்லைப்பகுதி உண்டு.
இப்பிரிவு 408 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].