உள்ளடக்கத்துக்குச் செல்

வளரி (கவிதை இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளரி
இதழாசிரியர் அருணா சுந்தரராசன்
துறை கவிதை இதழ்
வெளியீட்டு சுழற்சி மாதம்
மொழி தமிழ்
முதல் இதழ் சூன், 2009
இறுதி இதழ் தொடர்கிறது
இதழ்கள் தொகை இதுவரை
வெளியீட்டு நிறுவனம் வளரி எழுத்துக் கூடம்
நாடு இந்தியா
வலைப்பக்கம் []

வளரி மானாமதுரை, சிவகங்கை மாவட்டம், இந்தியாவிலிருந்து இருந்து 2009 ஜூன் மாதத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் மாத இதழ் ஆகும். இதன் ஆசிரியர் அருணா சுந்தரராசன். ஆரம்பத்திலிருந்து வளரி (இதழ்) அச்சிதழாகவே வெளிவருகிறது. வளரியின் சார்பில் 'வளரி எழுத்துக் கூடம்' என்னும் பதிப்பகமும் இயங்கி வருகிறது. ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் 'பூமராங்' ஆயுதத்தின் தமிழ் வடிவமே வளரி. சிவகங்கையை ஆண்ட மன்னர்கள் மருதுபாண்டியர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் பயன்படுத்திய ஆயுதம் வளரி. இவைகளைக் கருத்தில் கொண்டே வளரி என்ற பெயர் இதழுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

நோக்கமும் தோற்றமும்

[தொகு]

கவிதை மேம்பாட்டுக்காக, குறிப்பாக பெண்களிடம் தேங்கிக் கிடக்கின்ற கவிதை ஆர்வத்தை, அதிலும் குறிப்பாக திருமணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் பல்வேறு சூழல்களால் தங்களின் கவிதை ஆற்றலை தமக்குள்ளேயே ஆழப்புதைத்திருக்கின்ற பெண்களை மீண்டும் கவிதை எழுதத் தூண்டும் முயற்சியாக 2009 இல் வளரி என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதே ஆண்டு 'உலக மகளிர் நாள்' நினைவாக இல்லத்தரசிகளும், கல்லூரி மாணவியரும் பங்குபெறும் வகையில் கவிதைப்போட்டி ஒன்று மதுரையில் நடாத்தப்பட்டது. அப்போட்டிக்காக வந்து குவிந்த கவிதைகள் வளரி அமைப்பை மலைக்க வைத்தன. அடுத்த நகர்வு பற்றிச் சிந்திக்வும் தூண்டின. எப்போதாவது போட்டி நடாத்துவதை விட, இப்படியான பெண்களின் கவிதை தாகத்திற்கு நிரந்தரமாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதன் வெளிப்பாடாக சூன், 2009 இல் வளரி கவிதை இதழ் உருவானது.

கவிப்பேராசான் மீரா விருது

[தொகு]

வளரி இலக்கிய இதழ் 2013 தொடக்கம் ஒவ்வொரு மாதமும் அனைத்து இலக்கிய சிற்றிதழ்களிலுமிருந்து மூன்று கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அம்மாதத்தின் சிறந்த கவிதையாக, அமரர் கவிஞர் மீரா அவர்களின் பெயரில் “கவிப் பேராசான் மீரா விருது” வழங்குவதோடு, சான்றிதழும் அனுப்பிக் கெளரவித்து வருகிறது.

வளரி எழுத்துக்கூடம் வெளியிட்டவற்றில் சில

[தொகு]
  • பெண்பாக்கள் (2014, உலக மகளிர் நாளை முன்னிட்டு எட்டு பெண் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு. தொகுப்பாசிரியர்: அருணாசுந்தரராசன் - வளரி வெளியீடு)[1]
  • 'ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்', ராஜாஜி ராஜகோபாலனின் (கனடா) கவிதைகள்.
  • 'துயர் சுமந்த தேசத்தின் வலி' , சுதேசிகனின் (சுவிஸ்) கவிதைகள்..
  • 'நீர்த்திரை' (2015) செளந்தரி கணேசனின் (ஆஸ்திரேலியா) கவிதைகள்.
  • 'அற்றைத் திங்கள்' (2016) நக்கீரன் மகளின் (டென்மார்க்) கவிதைகள்.
  • 'சாத்தான்கள் அபகரித்த பூமி' (2018) அருணாசுந்தரராசனின் கவிதைகள்.
  • 'மகடூஉ 100' 19 நாடுகளைச் சேர்ந்த பெண்கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு

தொகுப்பாசிரியர்: அருணாசுந்தரராசன்

(செப்டம்பர், 2022) 
  • 'மனோகரப் பார்வை' சுகன்யா அ கவிதைகள் (செப்டம்பர், 2022)
  • 'நினைவுச் சிறகுகள்' சிறீவித்யா பசுபதி கவிதைகள் (செப்டம்பர், 2022)
  • 'சொல்மேல் படரும் பொருள்'

சுதா மாணிக்கம் கவிதைகள் (செப்டம்பர், 2022)

  • ' அம்மு அம்மாவுக்குச் சொன்ன'
  சாரதா பரநிருபசிங்கம் கவிதைகள்
     (செப்டம்பர், 2022)

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. http://puthu.thinnai.com/?p=28166
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளரி_(கவிதை_இதழ்)&oldid=3607664" இலிருந்து மீள்விக்கப்பட்டது