உள்ளடக்கத்துக்குச் செல்

வலந்தீனா தெரெசுக்கோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வலந்தீனா தெரெசுக்கோவா
Валентина Терешкова
2017 இல் தெரெசுக்கோவா
உருசிய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 திசம்பர் 2011
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
வலந்தீனா விளதீமிரவ்னா தெரெசுக்கோவா

6 மார்ச்சு 1937 (1937-03-06) (அகவை 87)
பல்சோயே மாசுலென்னிக்கோவா, உருசியா, சோவியத் ஒன்றியம்
அரசியல் கட்சி
துணைவர்கள்
  • அந்திரியன் நிக்கொலாயெவ்
    (தி. 1963; ம.மு. 1982)
  • யூலி சப்போசுனிக்கொவ்
    (தி. 1982; இற. 1999)
பிள்ளைகள்1
வேலை
விருதுகள்லெனின் விருது
சோவியத் விண்வெளி வீரர்
Other names
வலந்தீனா நிக்கொலாயெவ்னா-தெரெசுக்கோவா
தரம்மேஜர் செனரல், உருசிய வான்படை (1962–1997)
விண்வெளி நேரம்
2 நாட்கள், 22 மணி, 50 நிமி
தெரிவு1-ஆவது பெண்கள் குழு
பயணங்கள்வஸ்தோக் 6

வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா (Valentina Vladimirovna Tereshkova; உருசியம்: Валентина Владимировна Терешкова; பிறப்பு: 6 மார்ச் 1937), என்பவர் சோவியத் ஒன்றியத்தின் ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார். இவர் வசுத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு மூன்று நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.[1]

1961ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த யூரி ககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் என்ற பெருமையைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாகப் பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத்து ஒன்றியம் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக் கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வலண்டீனா தெரெசுக்கோவா தெரிவு செய்யப்பட்டார்.

வத்தோக்கு-6 என்ற விண்கலம் வலண்டீனாவை ஏற்றிக்கொண்டு 1963 சூலை 16ஆம் நாள் வானத்தை நோக்கிப் புறப்பட்டது. இவர் பூமிப்பந்தைச் சுற்றி 48 முறைகள், 70 மணி நேரம் 50 நிமிடங்கள் விண்வெளியில் வலம் வந்தார். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும், அதிக நேரம் விண்வெளியில் தங்கியிருந்த விண்வெளி வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.[2][3][4]

சூன் 19ஆம் நாள் விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார்.[5] ‘சோவியத் ஒன்றியத்தின் வீராங்கனை’ என்ற பதக்கத்துடன் ‘இலெனின் விருது’, வேறு பல விருதுகள் எனக் குவிந்தன.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sever, Megan (June 2014). "June 16, 1963 & June 18, 1983: Valentina Tereshkova and Sally Ride Become First and Third Women in Space". Earth 59 (6): 60–61. http://www.earthmagazine.org/article/benchmarks-june-16-1963-june-18-1983-valentina-tereshkova-and-sally-ride-become-first-and. பார்த்த நாள்: 3 April 2016. 
  2. Wall, Mike (23 April 2019). "The Most Extreme Human Spaceflight Records". Space.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 June 2019.
  3. "Who was the first woman in space?". Royal Museums Greenwich (in ஆங்கிலம்). 19 February 2019. பார்க்கப்பட்ட நாள் 16 June 2019.
  4. Tereshkova, Valentina (4 January 1964). "Three days in outer space". The Saturday Evening Post 237 (1): 62–63. 
  5. "Valentina Tereshkova: First Woman in Space". space.com. 22 January 2018.
  6. "Space Woman Gets Bear Hug, Kiss from Nik". The Greenville News. Associated Press (Greenville, South Carolina): p. 1. 23 June 1963. https://www.newspapers.com/clip/32752464/the_greenville_news/. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலந்தீனா_தெரெசுக்கோவா&oldid=4032640" இலிருந்து மீள்விக்கப்பட்டது