வருண் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வருண் குமார்
Varun Kumar
தனித் தகவல்
பிறப்பு25 சூலை 1995 (1995-07-25) (அகவை 28)
பஞ்சாப்
உயரம்1.72 மீ[1]
விளையாடுமிடம்தடுப்பாட்டக்காரர்
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
2014–பஞ்சாப் வாரியர்கள்
தேசிய அணி
2014–2016இந்தியா 21 வயதுக்கு கீழ்
2017–இந்தியா63(11)
பதக்க சாதனை
Men's வளைதடிப் பந்தாட்டம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 யாகர்த்தா அணி
ஆசியக் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 டாக்கா
வெற்றியாளர் கோப்பை
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 பிரெதா
ஆசிய வெற்றியாளர் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 மசுக்கட்டு
உலகக் கூட்டிணைவு
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016–17 புவனேசுவர் அணி
இளையோர் உலகக் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 லக்னோ
இளையோர் உலகக் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2015 குவாண்டன்
Last updated on: 1 மார்ச்சு 2019

வருண் குமார் (Varun Kumar) இந்தியாவைச் சேர்ந்த வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரராவார். 1995 ஆம் ஆண்டு சூலை மாதம் 25 அன்று குமார் பிறந்தார். வளைகோல் பந்தாட்ட தொழில்முறை வீரரான இவர் அணியில் ஒரு தடுப்பாட்டக்காரராக விளையாடுகிறார். வளைகோல் பந்தாட்ட கூட்டினைவுப் போட்டியிலும், இந்திய தேசிய அணியிலும் இவர் தடுப்பாட்ட வீரராகவே விளையாடினார். தற்பொழுது டோக்கியோ கோடை கால ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் விளையாட இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தொழில்[தொகு]

பஞ்சாபில் பிறந்த குமார் முதலில் பள்ளியில் படிக்கும் போது வளைகோல் பந்தாட்டம் விளையாடத் தொடங்கினார். [2] 2012 ஆம் ஆண்டில் இளையோர் தேசிய வெற்றியாளர் போட்டியில் தனது சொந்த மாநிலமான பஞ்சாபைப் பிரதிநிதித்துவப்படுத்தி மிகச் சிறப்பாக விளையாடினார். இதனால் தேசிய இளையோர் அணிக்கு விளையாட அழைக்கப்பட்டார். [2] 2014 ஆம் ஆண்டு இளையோர் தேசிய வெற்றியாளர் போட்டிகளில் குமார் மிகச் சிறப்பாக செயல்படுவதற்கும், இளையோர் தேசிய அணிக்கு மீண்டும் அழைக்கப்படுவதற்கும் முன்பாக இரண்டு வருடங்கள் காயம் காரணமாக விளையாடாமல் அமைதியாக இருந்தார்.

குமார் விரைவில் இந்திய வளைகோல் பந்தாட்ட கூட்டிணைவு போட்டியில் பஞ்சாப் வாரியர்சு அணியில் விளையாட கையெழுத்திட முடிந்தது. இவர் 2014 பருவப் போட்டிகளுக்காகத் தக்கவைக்கப்பட்டார். [3] இதன் பிறகும் கூட்டிணைவின் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான அணிக்காகவும் குமார் மேலும் இரண்டு வருட காலத்திற்கு தக்கவைக்கப்பட்டார். [4]

அனைத்துலகப் போட்டி[தொகு]

குமார் இந்தியா இளையோர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இளையோர் உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு முன்னர் எசுப்பானியாவில் நடந்த நான்கு நாடுகளின் அழைப்பிதழ் போட்டியின் போது குமார் அதிக புள்ளிகள் ஈட்டிய வீரராக உருவெடுத்தார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "KUMAR Varun". www.worldcup2018.hockey. International Hockey Federation. Archived from the original on 2 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 1 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "SANTA SINGH,VARUN KUMAR PLAN TO SPICE UP CONTESTS IN WORLD CUP". Bangalore Mirror. 20 November 2016. http://bangaloremirror.indiatimes.com/sports/others/Santa-SinghVarun-Kumar-plan-to-spice-up-contests-in-World-Cup/articleshow/55516771.cms. 
  3. "Six Teams after Closed Bid for Hockey India League 2015". The Fans of Hockey. 15 November 2014. http://thefansofhockey.com/2014/11/17/six-teams-closed-bid-hockey-india-league-2015/id-14499.html#.WEukOaIrLBI. 
  4. "Punjab warriors retain six players for next two seasons of HILs". Hindustan Times. 22 September 2015. http://www.hindustantimes.com/chandigarh/punjab-warriors-retain-six-players-for-next-two-seasons-of-hils/story-wHtXrMySkhVRXZhCkCmQMP.html. 
  5. "‘Versatile’ team picked for Junior Hockey World Cup". Asian Age. 19 November 2016. http://www.asianage.com/sports/in-other-sports/191116/versatile-team-picked-for-junior-hockey-world-cup.html. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வருண்_குமார்&oldid=3634117" இலிருந்து மீள்விக்கப்பட்டது