உள்ளடக்கத்துக்குச் செல்

வரமின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரமின் (Varamin) (/værɑːˈmɪn/; பாரசீக மொழி: ورامين‎, வெரமின் என்றும் அழைக்கப்படுகிறது; முன்பு ஒரு காலத்தில் வர்னா என்றும், வரெனா என்றும் அழைக்கப்பட்டது) ஈரானின் தெஹ்ரான் மாகாணம், வரமின் கவுண்டியின் நகரம் மற்றும் தலைநகரம் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதன் மக்கள் தொகை 218,991, மற்றும் 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 53,639 குடும்பங்களில் அதன் மக்கள் தொகை 208,569 ஆக இருந்தது.

மக்கள் தொகை வரலாறு
ஆண்டும.தொ.±%
19565,205—    
196611,183+114.9%
197625,892+131.5%
198658,311+125.2%
199672,331+24.0%
20062,08,569+188.4%
20112,18,991+5.0%
[1]

வரலாறு

[தொகு]
நான்கு மூலைகள் கொண்ட கோட்டை

அவெஸ்தாவில், இந்த வரமின் நகரமானது, வரேனா என்ற பண்டைய நகரமாகக் கருதப் பட்டதற்கான குறிப்புகள் இருப்பதால், அந்த நகரமாகவே நம்பப்படுகிறது.உள்ளூர் நகர மக்கள், இந்நகருக்கு அருகிலுள்ள நான்கு மூலைகள் கொண்ட கோட்டையை, ஈராஜின் சிட்டாடல் என்று அழைக்கின்றனர். திரேடோனாவின் மகனாக இருந்த ஈராஜ் ஆவான். இவனே பண்டைய வரேனாவுடனான நகரத்தின் உறவை மேம்படுத்தியதாக எண்ணப் படுகிறது.[2][3] வராமின் நகருக்கென விரிவான வரலாறுச் சுவடுகள் உண்டு. ரே மீது தாக்குதல் நடத்தப்பட்டது, மங்கோலியர்களின் படையெடுப்பும், மற்றும் திமுரிட்சு படையெடுப்பும் நடைபெற்ற இந்த பகுதிக்கு, அக்காலத்தில் மக்களின் இடம்பெயர்வு ஏற்பட்டது. வராமின் நகரத்தில் குறிப்பிட்டத்தக்கக் கணிசமான தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இமாம்சாடே யக்யா சமாதி, இல்கானேடு நிலப்பகுதியைச் சார்ந்த அபு சயீத் காலத்தில் உருவான யாமே மசூதி என்பவை வராமினின் வரலாற்றுச் சுவடுகள் ஆகும்.

நினைவுச்சின்னங்கள்

[தொகு]

வராமினில் அருகிலுள்ள நினைவுச் சின்னங்களின் புகைப்படங்கள் கீழே பிளிக்கர் தளத்தின் இணைப்புகளுடன் உள்ளன.

மஸ்ஜெத்-இ ஜமீஹ் வராமின் வெளிப்புறத்தின் ஒரு பகுதி: (1) .
மஸ்ஜெட்-இ ஜமேஹ் வராமின் உட்புறப் பகுதிகள் (1), (2), (3), (4), (5), (6) .
— வராமின் அருகே மில் ஹில் ( டப்பே-யே மில் ): (1), (2) .
— தென் வராமின் நகரில் உள்ள ஷா அப்பாஸி பிரயாணக் என்பதன் வெளிப்புறங்கள் : (1) - (5) .
ஷா-அப்பாஸி கேரவன்சேரையின் உட்புறம்: (1) .
— வராமினில் உள்ள கைவிடப்பட்ட பாரம்பரிய வீட்டின் காட்சிகள்: (1), (2), (3), (4) .

காட்சியகம்

[தொகு]

தொழில்கள்

[தொகு]

சர்க்கரைச் சுத்திகரிப்பு தொழிற்சாலை

[தொகு]
வராமின் சர்க்கரைச் சுத்திகரிப்பு தொழிற்சாலை

1934-1935 ஆம் ஆண்டில் நிகோலாய் மார்கோவ் என்பவரால் கட்டப்பட்ட வராமின் சர்க்கரை சுத்திகரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையே, ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கட்டப்பட்ட முதல் சர்க்கரைச் சுத்திகரிப்பு தொழிற்சாலைஆகும். கடந்த சில ஆண்டுகளில், இந்த தொழிற்சாலைக்கான மூலப் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக, அதன் உற்பத்திக் குறைக்கப் பட்டுள்ளன.[4][5]

எண்ணெய் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை

[தொகு]

1938-1939 இல் கட்டப்பட்ட, வராமின் எண்ணெய் பிரித்தெடுக்கும் தொழிற்சாலையானது, ஈரானில் கட்டப்பட்ட முதல் காய்கறி எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆகும்.[6]

கைவேலைப்பாடுகள்

[தொகு]

வராமின் தரைவிரிப்புகள் மற்றும் விரிப்புகள் உலகின் மிகவும் பிரபலமான தரைவிரிப்புகளில் ஒன்றாகும். பல கம்பளி மற்றும் தரைவிரிப்பு வல்லுநர்கள் வராமின் தரை விரிப்புகளை தூய பாரசீக கம்பளங்களாகப் பார்க்கிறார்கள்.[7] அவை மீண்டும் மீண்டும் வடிவியல் அழகுக்கான, வடிவங்களைப் பெற்று தொடர்ந்து பலமுறை பதக்கங்களைப் பெற்றுள்ளன. அவை வராமினில் வசிக்கும் அல்லது வழிப்போக்கு பழங்குடி மக்களால் உருவாக்கப்படுகின்றன.

கல்வி

[தொகு]

வராமின்-இசுலாமிய ஆசாத் பல்கலைக்கழகமானது, பிஷ்வா(Pishva) கிளையாக, 1985 இல் நிறுவப்பட்டது. இந்த கிளையில் 86 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பாடத்திட்டங்களில் 15000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலுகின்றனர்.[8]

குறிப்புகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-10-21. பார்க்கப்பட்ட நாள் 2019-11-20.
  2. http://www.chnpress.com/news/?section=1&id=1613
  3. Peterson, Joseph H. "AVESTA: VENDIDAD (English): Fargard 1". www.Avesta.org. பார்க்கப்பட்ட நாள் 17 August 2017.
  4. http://www.parsine.com/fa/news/57078/قديمي-ترين-کارخانه-قند-ايران-تعطيل-شد - fa|script-title=fa:قديمي ترين کارخانه قند ايران تعطيل شد.}}
  5. http://www.tebyan.net/Social/SevenContinents/IranTour_Geographical_/2010/7/8/130041.html-[தொடர்பிழந்த இணைப்பு] www.Tebyan.net|language=fa|script-title=fa:یادگارهای جناب نیکلای
  6. "Archived copy" روغنکشی شماره ی یک ورامین. www.Khoec.com (in பெர்ஷியன்). Archived from the original on 2012-11-20. பார்க்கப்பட்ட நாள் 2012-04-08.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  7. "Varamin carpets in Little Persia". www.little-persia.com.
  8. "iauvaramin.ac.ir". Archived from the original on 2019-08-31. பார்க்கப்பட்ட நாள் 2019-11-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரமின்&oldid=3578670" இலிருந்து மீள்விக்கப்பட்டது