வயல் கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வயல் கதிர்க்குருவி
கொல்கத்தாவில்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
Phylum: முதுகுநாணி
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: அக்ரோசெபாலிடே
பேரினம்: அக்ரோசெபாலசு
இனம்: A. agricola
இருசொற் பெயரீடு
Acrocephalus agricola
ஜெர்டான், 1845
Subspecies
  • A. a. agricola - (Jerdon, 1845)
  • A. a. septimus - Gavrilenko, 1954

வயல் கதிர்க்குருவி [Paddyfield warbler (Acrocephalus agricola)] என்பது தென்கிழக்கு ஐரோப்பாவிலும் மைய யுரேசியாவிலும் இனப்பெருக்கம் செய்து தெற்காசியப் பகுதிகளுக்கு வலசை போகும்[2] கதிர்க்குருவி ஆகும்.

உடலமைப்பும் கள அடையாளங்களும்[தொகு]

அளவில் சிட்டுக்குருவியை விடச் சிறியது (12 முதல் 14 cm நீளம்). தெளிவான வெண்புருவம் கண்ணிற்குப் பின் வரை செல்லும்; புருவத்தின் இருமருங்கிலும், அதாவது, புருவத்திற்கு மேலே தெளிவற்ற கருங்கோடும் கீழே அடர் கருங்கீற்றும் காணப்படும். கழுத்துப் பகுதி வெண்மையாகவும் மேல்பகுதி செம்பழுப்பாகவும் (வலசை வரும் காலங்களில் சற்று பசுமை கலந்த நிறமுடனும்) இருக்கும்.

வலசை[தொகு]

இந்தியாவிற்கு வலசை வரும் வயல் கதிர்குருவிகள் அதன் பல பகுதிகளிலும் பரவலாக, ஆனால் அரிதாகவே தென்படுகின்றன. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, தஞ்சாவூரை ஒட்டிய பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Acrocephalus agricola (amended version of 2016 assessment)". IUCN Red List of Threatened Species 2017: e.T22714714A111077678. https://www.iucnredlist.org/species/22714714/111077678. பார்த்த நாள்: 4 March 2020. 
  2. Shirihai, H. & Svensson, L. (2018). Handbook of Western Palearctic Birds – Vol I. p. 443
  3. "ebird - distribution map". https://ebird.org/map/padwar1?neg=true&env.minX=43.285339315732585&env.minY=-3.913574627034825&env.maxX=140.84393306573259&env.maxY=37.120910060082295&zh=true&gp=false&ev=Z&mr=on&bmo=12&emo=2&yr=all&byr=1900&eyr=2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயல்_கதிர்க்குருவி&oldid=3187974" இருந்து மீள்விக்கப்பட்டது