வன்கலவியின் சமூகவியல் கோட்பாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வன்கலவியின் சமூகவியல் கோட்பாடுகள் (Sociobiological theories of rape) படிவளர்ச்சிக் கொள்கை கற்பழிப்பாளர்களின் உளவியலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராய்கிறது. இத்தகைய கோட்பாடுகள் மிகவும் சர்ச்சைக்குரியவையாக உள்ளான. ஏனெனில், பாரம்பரிய கோட்பாடுகள் பொதுவாக வன்கலவியினை ஒரு நடத்தை இணக்கமாக கருதுவதில்லை. சிலர் இத்தகைய கோட்பாடுகளை நெறிமுறை, மத, அரசியல் அல்லது அறிவியல் அடிப்படையில் எதிர்க்கின்றனர். மற்றவர்கள் வன்கலவி காரணங்களைப் பற்றிய சரியான அறிவு பயனுள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்கு அவசியம் என்று வாதிடுகின்றனர்.

வன்கலவியின் இயற்கையான வரலாறு[தொகு]

வன்கலவி சில சூழ்நிலைகளில் மரபணு ரீதியாக சாதகமான நடத்தை இணக்கத்தினால் உருவானது என்ற கருத்தை உயிரியலாளர் ராண்டி தோர்ன்ஹில் மற்றும் மானுடவியலாளர் கிரேக் டி. பால்மர் அவர்களின் எ நேச்சுரல் ஹிடரி ஆஃப் ரேப் (2000) புத்தகத்தில் கூறியுள்ளனர்.

விலங்கு கட்டாய பாலியல்[தொகு]

அனாடிடாய் , போத்தல் மூக்கு ஓங்கில், [1] மற்றும் சிம்பன்சிகள் உட்பட விலங்கு சமூகத்தில் மனிதர்களின் வன்கலவியினை ஒத்த நடத்தையை நாம் காணலாம்[சான்று தேவை], . [2] இத்தகைய 'கட்டாய இணைப்புகள்' விலங்குகளை அணுகுவது மற்றும் பாலியல் ரீதியாக ஊடுருவி போராடும்போது அல்லது தப்பிக்க முயற்சிக்கிறது. விலங்குகளில் கட்டாய பாலினத்தின் அவதானிப்புகள் சர்ச்சைக்குரியவை அல்ல; ஆனால் இந்த அவதானிப்புகளின் விளக்கம் மற்றும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடுகளை மனிதர்களுக்கு விரிவாக்குவது சர்ச்சைக்குரியதாக உள்ளது. ஸ்கார்பியன் ஃபிளைசின் பாலியல் நடத்தையை விவரிப்பதன் மூலம் தோர்ன்ஹில் இந்த கோட்பாட்டை அறிமுகப்படுத்துகிறார்.[3] 

மனித கற்பழிப்பு[தொகு]

தோர்ன்ஹில் மற்றும் பால்மர் "சுருக்கமாக, ஒரு ஆண் தனக்கு நிறைய சிரமங்கள் இல்லாமல், பல குழந்தைகளைப் பெற முடியும்; ஒரு பெண் மிகுந்த சிரமங்களுடன் சில குழந்தைகளை மட்டுமே பெற்றெடுக்க முடியும்."வன்கலவி என்பது ஆண்களின் இனப்பெருக்க உத்தியாக இருக்கலாம். வன்கலவி ஒரு இனப்பெருக்க உத்தியாக இருக்கலாம் என்பதைக் குறிக்கும் பல காரணிகளை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பெரும்பாலான பாலியல் பலாத்காரங்கள் குழந்தை பிறக்கும் ஆண்டுகளில் நிகழ்கின்றன. கற்பழிப்பாளர்கள் வழக்கமாக அடிபணிவதற்கு தேவையானதை விட அதிக சக்தியைப் பயன்படுத்துவதில்லை, ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களை உடல் ரீதியாக காயப்படுத்துவது இனப்பெருக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும், "பல கலாச்சாரங்களில் வன்கலவி பாதிக்கப்பட்டவரின் கணவருக்கு எதிரான குற்றமாகவே கருதப்படுகிறது." [4]

மானுடவியலாளர் எட்வர்ட் எச். ஹேகன் தனது பரிணாம உளவியலின் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதில், 2002 ல் இருந்து வன்கலவி தகவமைப்பு என்ற கருதுகோளுக்கு தெளிவான ஆதாரம் இல்லை என்று நம்புகிறார். "மனித இனத்தில் ஆண்களுக்கு கற்பழிப்புக்கான உளவியல் இணக்கம் உள்ளதா என்பதனை, அறிவாற்றல் நிபுணத்துவத்திற்கான ஆதாரங்களைத் தேடும் ஆய்வுகள் மூலம் மட்டுமே பதில் அளிக்க முடியும் எனக் கூறுகிறார்.

பெண்களின் பாதுகாப்பு[தொகு]

வன்கலவியைத் தவிர்ப்பதற்காக பெண்கள் பல பாதுகாப்பு உத்திகளை உருவாக்கியிருக்கலாம். அதில் தங்களுக்கு விருப்பமான ஆண்களை துணையாக ஆக்குதல் , திறமையான ஆண்களை பாதுகாவலாரக நியமனம் செய்தல் ஆகியன அடங்கும்.

2003 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் , வன்கலவி அல்லாத உடலுறவில் கர்ப்பத்தை விட கர்ப்பத்தின் அதிர்வெண் கணிசமாக அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தது, மேலும் ஆண் கற்பழிப்பாளர்கள் கருவுறுதலின் உயிரியல் அறிகுறிகளை வெளிப்படுத்தும் பெண்களை அதிக அளவில் குறிவைக்கிறார்கள் என்ற கருதுகோளையும் முன்வைத்தனர். [5]

சான்றுகள்[தொகு]

  1. Connor, Richard and Vollmer, Nicole (ed. Buss, David). 2005. Sexual Coercion in Dolphin Consortships: A comparison with Chimpanzees, pp 218.
  2. Akiko Matsumoto-Oda, Miya Hamai, Hitosige Hayaki, Kazuhiko Hosaka, Kevin D. Hunt, Eiiti Kasuya, Kenji Kawanaka, John C. Mitani, Hiroyuki Takasaki, and Yukio Takahata. 2007. Estrus Cycle Asynchrony in Wild Female Chimpanzees, Pan troglodytes schweinfurthii.
  3. Wilson, Glenn. The Science of Sex: Glenn Wilson on Rape. The Great Sex Divide, pp. 128–131. http://www.heretical.com/wilson/rape.html
  4. Thornhill, Randy; Palmer, Craig T. (2000). "Why Men Rape". www.csus.edu. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
  5. Gottschall, Jonathan A.; Gottschall, Tiffani A. (2003). "Are per-incident rape-pregnancy rates higher than per-incident consensual pregnancy rates?". Human Nature 14 (1): 1–20. doi:10.1007/s12110-003-1014-0. பப்மெட்:26189986.