வத்தித்திறன்
வத்தித் திறன் (Candle Power) என்பது ஒளியின் ஒளிர்வுச் செறிவை அளவிடப் பயன்படும் திட்ட அளவு ஆகும்.
வரலாறு[தொகு]
குறிப்பிட்ட வகை மெழுகினால் 7/8 அங்குலம் தடிப்பில் தயாரித்த பிரித்தானிய திட்ட மெழுகுவர்த்தி கிடையாகச் செலுத்தும் ஒளிர்வே ஆதியில் இந்த அளவாக இருந்தது. பிறகு ஹார்க்கோர்ட் பென்டேன் (Harcourt Pentane Lamp) விளக்கின் ஒளிர்வில் 1/10 பாகம் ஒளிவீசும் பன்னாட்டு வத்தி திருத்தமான அளவாகக் கொள்ளப்பட்டது.
நவீன முறை[தொகு]
நவீன முறையில் ‘காண்டலா’ (Candala'cd') என்பது ஒளியின் ஒளிர்வு அலகாகக் கொள்ளப்படுகிறது. இது உருகுநிலை (2042 K) யிலுள்ள பிளாட்டினம் உலோகம் சதுரமீட்டர் துளை வழியாக வெளிவிடும் ஒளிர்வின் 1/600000 ஆகும்.
மேற்கோள்கள்[தொகு]
- "குழந்தைகள் கலைக் களஞ்சியம்", 1993, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.
- http://m-w.com/dictionary/candlepower