மெழுகுவர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மெழுகுவர்த்தி அல்லது மெழுகுதிரி என்பது மெழுகை எரிபொருளாகக் கொண்டு ஒளி தருவது அல்லது எரியக்கூடிய வகையில் மூன்று கிளிசரைடுகளால் ஆன விலங்குகளின் கொழுப்பிலிருந்து எடுக்கப்பட்ட திண்ம எரிபொருள் ஆகும். இது ஒளியுக் மற்றும் சில வேளைகளில் இது மணம் தரும் வாசனை பொருளாகவும் பயன்படும். இது வெப்பம் தரும் மற்றும் சில வேளைகளில் நேரம் காட்டும் கருவியாகவும் பயன்படும்.

மெழுகுவர்த்தி உருபாக்குபவர் மெழுகு வியாபாரி என்று அழைக்கப் படுவார். இந்த மெழுகு வர்த்தியை ஏந்தி நிற்க மேசையின் மீது வைக்கப்படும் எளிய மெழுகுவர்த்தி தாங்கியில் இருந்து கொத்தான விளக்கு தண்டு மற்றும் தொங்கும் சரவிளக்கு போன்ற பலவித கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

மெழுகு வர்த்தி எரிய வைக்க ஒரு தீப்பெட்டி அல்லது தீ ஏற்றியிலிருந்து நெருப்பு கெட்டி மெழுகின் நடுவே உள்ள நூல் திரி மீது பற்ற வைக்கப்படும். நெருப்பைப் பற்ற வைத்ததும் மெல்ல மெல்ல அருகில் உள்ள மெழுகு இளகி திரி எரிய ஆரம்பிக்கும்.மெழுகு ஆவியாக ஆரம்பித்த பிறகு அது வளி மண்டலத்தில் உள்ள உயிரிவாயுவோடு சேர்ந்து தொடர்ந்து சுடரோடு எரிய ஆரம்பிக்கும். இந்த சுடரானது தன் வெப்ப ஆற்றலாலே மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிய தேவையான வெப்பத்தை சங்கிலி தொடர் வினை மூலம் கொடுக்கும்; சுடரின் வெப்பம் திண்ம மெழுகின் மேல் பாகத்தின் ஒரு பகுதியை உருக்கும்; உருகிய திரவ எரிபொருள் திரி வழியாக நுண் புழை ஈர்ப்பாற்றல் மூலமாக மேலே செல்லும்; மேலே சென்ற திரவ எரி பொருள் இறுதியாக ஆவியாகி மெழுகு வர்த்தியின் சுடருடன் இணந்து எரியும்.

மெழுகு எரிந்து உருக உருக அது உயரத்தில் குறைந்து கொண்டே போகும். ஆவியாகும் எரிபொருளை வெளிப்படுத்தாத திரியின் பாகங்கள் மெழுகுவர்த்தியின் சுடரின் சூட்டில் எரிந்து விடும். எரிந்து சாம்பலாகும் திரியானது எரிவதற்கு உள்ளாகும் திரியின் அளவை ஒரு வரம்புக்குள்ளாக வைத்துக் கொள்ளும். இதனால் எரிதனால் உருவாகும் வெப்ப அளவும் எரிய உபயோகப் படுத்த படும் எரிபொருளின் அளவும் ஒரு கட்டுக்குள் வைக்கப் படுகிறது. சில வகையான திரிகளை ஒரே சீராக அவ்வப்போது ஒரு கத்திரிகோல் அல்லது அதற்கு பிரத்தியோகமாக உள்ள வெட்டுவான் மூலம் வெட்ட வேண்டும். இது மெழுகு வர்த்தி ஒரே சீராக எரிவதற்கும் புகையில்லாமல் எரிவதற்கும் உதவி புரிகிறது. இருபதாம் நூற்றாண்டில் இதற்கென்று பிரத்தியோகமான விசேச மெழுகுவர்த்தி கத்தரிப்பானும் மெழுகு வர்த்தி அணைப்பானும் மெழுகு வர்த்தியோடு கொடுக்கப் பட்டு வந்தது. தற்போது உருவாகும் மெழுகு வர்த்திகளில் காணப்படும் திரியானது சிறிது எரிந்த உடன் வளைந்து கொள்ளும் இந்நிகழ்வு திரியின் முடிவு பாகத்திற்கு உயிர்வளி கிடைப்பதை உறுதி செய்கிறது இது ஒரு தானே தன்னை முனைமழிப்பு செய்து கொள்வதாகும். fire—a self-trimming wick.[1]

A close-up image of a candle showing the wick and the various parts of the flame

இந்த மெழுகுவர்த்தி இரவு நேரங்களில் மின்சாரமில்லாத நேரங்களில் ஒளித் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. கிறித்தவ சமய வழிபாட்டில் மெழுகுவர்த்தி அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

  1. European Candle Association FAQ பரணிடப்பட்டது 2012-01-13 at the வந்தவழி இயந்திரம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெழுகுவர்த்தி&oldid=2948032" இருந்து மீள்விக்கப்பட்டது