உள்ளடக்கத்துக்குச் செல்

கேண்டெலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேண்டெலா
Candela
பகல்நேர (கருப்பு), இருட்டு[1] (பச்சை) ஒளிர்வு சார்புகள்.
பொது தகவல்
அலகு முறைமைSI அடிப்படை அலகு
அலகு பயன்படும் இடம்ஒளிச்செறிவு
குறியீடுcd

கேண்டெலா (candela, /kænˈdɛlə/ அல்லது /kænˈdlə/; குறியீடு: cd, கேண்டே) என்பது ஒளியின் அடர்த்தியை அளப்பதற்கான அனைத்துலக அலகு ஆகும். இது ஒருக் குறிப்பிட்ட திசையில் வெளிவிடப்படும் ஒளியின் ஆற்றலைக் குறிக்கும் அளவாகும்.

candela என்பது இலத்தீன் மொழியில் மெழுகுவர்த்தி எனப் பொருள். ஒரு கேண்டெலா என்பது ஏறக்குறைய மெழுகுதிரி எரியும்போது வெளிப்படும் ஒளியின் அளவுக்குச் சமமாகும்.[2].

வரையறை

[தொகு]

எல்லா அனைத்துலக முறை அலகுகள் முறை அலகுகளைப் போல் இதற்கும் செயல்முறை வரையறை உள்ளது. 1979-ம் ஆண்டு நடைபெற்ற எடை மற்றும் அளவகளுக்கான பொது மாநாட்டைத் தொடர்ந்து ஒரு கேண்டெலாவிம் அளவு கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது:

ஒரு கேண்டெலா என்னும் ஒளியடர்த்தியானது, 540×1012 எர்ட்சு அதிர்வெண் கொண்ட ஒற்றை நிற ஒளி, ஒரு குறிப்பிட்டத் திசையில் 1/683 வாட்/இசுட்டெரேடியன் வீசும் கதிர்வீச்சு அடர்த்தி ஆகும். (இசுட்டெரேடியன் என்பது திண்மக் கோண ஆரையம்/ரேடியன் ஆகும்)

ஒரு கேண்டெ ஒளியை வெளிப்படுத்தும் கதிர்விளக்கை உருவாக்கும் முறையை இந்த வரையறை விளக்குகிறது. அந்தக் கதிர்விளக்கை மற்ற ஒளியளக்கும் கருவிகளை அளவுத்திருத்தப் பயனபடுத்தலாம்.

அளவை ச.அ அலகு குறி குறிப்புகள்
ஒளி ஆற்றல் லூமென் நொடி லூம்-நொ (lm⋅s) talbots என்றும் அழைக்கப்படுகிறது
ஒளிச்சக்தி லூமென் லூ (lm)
ஒளியடர்த்தி கேண்டெலா கேண்டெ (cd) ச.அ அடிப்படை அலகு
ஒளிப்பரப்படர்த்தி கேண்டெலா/சதுர மீட்டர் கேண்டெ/மீ2 (cdm−2) nits என்றும் அழைக்கப்படுகிறது
ஒளியாற்றல் அடர்த்தி லூமென்/சதுர மீட்டர் லூ/மீ2 (cdm−2) பரப்பில் விழும் ஒளிக்குப் பயன்படுத்தப்படுவது
ஒளியாற்றல் வீச்சடர்த்தி லூமென்/சதுர மீட்டர் லூ/மீ2 (cdm−2) கதிர்விளக்கு வெளிப்படுத்தும் ஒளிக்குப் பயன்படுத்தப்படுவது
ஒளி வீச்சாற்றல் லூமென்/வாட் லூ/வாட் (lmV−1) ஒளி வீச்சடர்திக்கும் வீசு ஒளியாற்றல் திறனுக்குமான விகிதம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. CIE Scotopic luminosity curve (1951)
  2. Wyzecki, G. (1982). Color Science: Concepts and Methods, Quantitative Data and Formulae (2nd ed. ed.). Wiley-Interscience. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-02106-7. {{cite book}}: |edition= has extra text (help); Unknown parameter |coauthors= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேண்டெலா&oldid=3745183" இலிருந்து மீள்விக்கப்பட்டது