வண்டு இறகு கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகட்டான மலர் பூத்தையல் வடிவமைப்புடன் கூடிய வெள்ளை நிற பருத்தி மெல்லிய துணி. திராட்சைக் கொடிகள் தங்கப் படலப் பட்டைகளிலும், சிறிய பூக்கள் தங்கப் பூச்சுடன் அழகு வெள்ளித்தட்டு, இலைகள் வண்டு இறக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இசுடெர்னோசெரா ஏகுயுசிக்னேட்டா แมลงทับ, தாய்லாந்தில் வண்டு அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வண்டு சிற்றினம்.
தமாமுஷி ஆலயம், ஹோரியு-ஜி, நாரா மாகாணம், சப்பான். அசுகா காலம், மரத்தில் அரக்கு மற்றும் எண்ணெய் ஓவியம், கில்ட் வெண்கலத் தகடுகள் மற்றும் நகை வண்டுகளின் (தமாமுசி ) மாறுபட்ட இறக்கைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வண்டு இறக்கை (Beetlewing) அல்லது வண்டு இறகு கலை என்பது தாய்லாந்து, மியான்மர், இந்தியா, சீனா மற்றும் சப்பான் ஆகிய நாடுகளில் பாரம்பரியமாக நடைமுறையில் இருக்கும் மாறுபட்ட வண்டு இறக்கைகளைப் பயன்படுத்தும் பண்டைய கைவினை நுட்பமாகும். சீமாட்டி கர்சனின் மயில் உடை (1903) மற்றும் நடிகை எல்லன் டெர்ரி லேடி மக்பத் என அணிந்திருந்த ஆடை ஆடை, எல்லன் டெர்ரியை லேடி மக்பத் (1889) என்ற ஓவியத்தில் சித்தரிக்கும் உடை குறிப்பிடத்தக்க வண்டுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆடைகள் ஆகும்.

பாரம்பரியம்[தொகு]

ஆசியாவின் சில பண்டைய கலாச்சாரங்களில் ஓவியங்கள், ஆடைகள் மற்றும் நகைகளுக்கு அலங்காரமாக வண்டு துண்டுகளை இணைப்பது பொதுவானது. பல்வேறு வகையான மரங்களைத் துளையிடும் உலோக நிற வண்டு இறக்கைகள் பிராந்தியத்தைப் பொறுத்துப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் பாரம்பரியமாக மிகவும் மதிப்புமிக்க பொன்வண்டு பேரினத்தினைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். இவற்றின் இறக்கைகள் இவற்றின் அழகான மற்றும் கடினமான உலோக மரகத பன்னிற பொலிவு காரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. வண்டுகளின் பளபளப்பான தோற்றம் நீண்ட காலம் நீடிக்கும் தன்மை இதனை அதிக அளவில் பயன்படுத்தக் காரணமாக உள்ளது. பொதுவான பயன்பாட்டிற்கு உட்பட்டால் இவை வியக்கத்தக்க வகையில் நெடுங்காலத்திற்கு நீடித்திருக்கும்.

தாய்லாந்தில், இசுடெர்னோசெரா (தாய் மொழி: แมลงทับ) சிற்றின மர வண்டான. இசுடெர்னோசெரா ஏகுயுசிக்னேட்டா [1] நீதிமன்ற வட்டார ஆடைகள் (சால்வைகள் மற்றும் சபாய் துணி) மற்றும் நகைகளை அலங்கரிக்க விரும்பப்பட்டது. முதிர்ந்த வண்டுகள் 3 முதல் 4 வாரங்கள் வரை குறுகிய ஆயுட்காலம் கொண்டவை. இத்தகைய வண்டுகளைக் கொல்லாமல் அவை, இயற்கையாக இறக்கும் போது மட்டுமே வண்டுகளின் இறக்கைகள் சேகரிக்கப்படுகின்றன.

19-ஆம் நூற்றாண்டில், வண்டு துகள்களைப் பயன்படுத்தி பூத்தையல் செய்யப்பட்ட துணிகளின் நேர்த்தியான தலைசிறந்த படைப்புகள் தயாரிக்கப்பட்டன. இந்த துணி பொருட்கள் காலப்போக்கில் அதன் சிறப்பை இழக்காமல் உழைத்து வருகின்றன.[2]

சில சந்தர்ப்பங்களில், வண்டு இறக்கைகள் இவற்றைச் சுற்றியுள்ள துணி சிதைந்திருந்தாலும், இவற்றின் இயற்கையான பிரகாசத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

சப்பானில் பாரம்பரியமாக அலங்கார வேலைகளில் பயன்படுத்தப்படும் வண்டு வகை கிரிசோக்ரோவா புல்கிடிசிமா ஆகும். இது தமாமுசி என்றும் அழைக்கப்படுகிறது.

இன்றைய நிலை[தொகு]

தாய்லாந்தில் இந்த பழமையான பாரம்பரியம் பெரும்பாலும் அழிந்து விட்டது. பேங்காக்கில், வண்டுகளால் செய்யப்பட்ட அரிய கைவினைப்பொருட்கள் மற்றும் நகைகள் சுலலாங்கொர்ன் (ராமா V) துசித் அரண்மனை வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது தற்போது அருங்காட்சியகமாக உள்ளது.

அரசி சிறீகித் ஊக்குவிப்பு மற்றும் ஆதரவு காரணமாக சித்ரலதா மையத்தில் இந்த பாரம்பரிய கலையை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, திறமையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கைவினைஞர்களை ஆதரித்து வருகின்றன. காதணிகள் மற்றும் படத்தொகுப்பு வேலைகள் போன்ற எளிய பொருட்களில் நவீன வண்டுகள் இறக்கை கலை பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இவை பெரும்பாலும் சுற்றுலா சார்ந்த கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்டு_இறகு_கலை&oldid=3756414" இலிருந்து மீள்விக்கப்பட்டது