உள்ளடக்கத்துக்குச் செல்

லேடி மக்பத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேக்ஸ்பியர் எழுதிய 'மக்பெத்' என்ற நாடகத்தின் கதாநாயகி லேடி மேக்பத். இவள் மக்பத் என்ற ஸ்காட் படைதளபதியின் மனைவி ஆவாள். ஸ்காட் அரசன் டங்கன் ஐ கொலை செய்ய கண்வனை தூண்டி அதன்மூலம் ஸ்காட்லாண்டின் மஹாராணி ஆகிறாள். ஆனால் தவறை உண்ர்ந்த அவள் குற்ற உணர்வுமிகுதியால் தூக்கதில் நடக்கும் வியாதியால் பீடிக்கப்படுகிறாள். இறுதியில் அவள் இறந்துவிட்டதாக தகவல்; இறப்பு தற்கொலையால் தான் நிகழ்ந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

லேடி மக்பத்தும் டங்கனின் மனைவியும் உடன்பிறந்தவர்கள் அல்லது உறவினர்கள். டங்கனுக்கு பின் டங்கனின் மனைவிக்கு தான் அரச சிம்மாசனம் என்பது லேடி மக்பத்துக்கு தெரிந்திருந்தது தான் பொறாமைக்கு காரணமாக கூறப்படுகிறது. ஹோலின்ஷெட்டின் நாளாகமம் என்ற வரலாற்று தொகுப்பிலிருந்து லேடி மேக்பத், மேக்பத் மற்றும் டங்கனின் வாழ்கை வரலாற்றை அறியமுடிகிறது. சேக்ஸ்பியர் எழுதிய அனேக நாடகங்கள் ஹோலின்ஷெட்டின் நாளாகமத்தை தழுவி எழுதப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  • Holinshed's Chronicles, Volume V: Scotland, page 269
  • Macbeth, Act 5, Scene 8, Line 71.
  • Macbeth, Act 5, Scene 1.
  • A.C. Bradley. Shakespearean Tragedy. Palgrave Macmillan; 4th edition, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லேடி_மக்பத்&oldid=3602161" இலிருந்து மீள்விக்கப்பட்டது