வசந்த தேசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசந்த தேசாய்
பிறப்பு(1912-06-09)சூன் 9, 1912
சோனாவாடே கிராமம், சிந்துதுர்க், மகாராட்டிரம், இந்தியா
இறப்புதிசம்பர் 22, 1975(1975-12-22) (அகவை 63)
மும்பை
பணிதிரைப்பட இசையமைப்பாளர்
வலைத்தளம்
www.soundsofsonawade.com

வசந்த் தேசாய் (Vasant Desai) (1912-1975) ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். வி. சாந்தாராமின் ஜனக் ஜனக் பயல் பாஜே (1955), தோ ஆங்கேன் பரா ஹாத் (1957), விஜய் பட்டின் கூஞ்ச் உத்தி ஷெஹ்னாய் (1959) , சம்பூர்ண ராமாயண் (1961), ஆஷிர்வாத் (1968) மற்றும் இருசிகேசு முகர்ஜியின் குட்டி (1971) போன்ற படங்களில் தனது இசைக்காக மிகவும் நினைவுகூரப்பட்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

தேசாய், 1912 இல் மராத்தியப் பேரரசின் போன்சலே வம்சத்தவர்கள் ஆண்ட சாவந்த்வாடி இராச்சியத்தில் சோனாவாடே கிராமத்தில் ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்தார்.[1]

தொழில்[தொகு]

பிரபலமான திரைப்படநிறுவனமான பிரபாத் பிலிம் கம்பெனி படங்களைத் தயாரிக்கத் தொடங்கியதில் இருந்து தேசாய் அதில் இருந்தார். அவர்கள் தயாரித்த தர்மாத்மா மற்றும் சந்த் ஞானேஷ்வர் போன்ற படங்களில் நடித்தார். பாடினார் மற்றும் சில சமயங்களில் பாடல்களை இயற்றினார். இசை அமைப்பில் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட பிறகு, 1940 களில் இருந்து தனியே இசையமைக்க ஆரம்பித்தார்.

தேசாயின் மறக்கமுடியாத பாடல்களாக, இந்தி திரைப்பட பக்திப் பாடல், 1957 ஆம் ஆண்டு தோ ஆங்கேன் பரா ஹாத்தின் ஏ மாலிக் தேரே பந்தே ஹம் மற்றும் பின்னணிப் பாடகி, வாணி ஜெயராமின் முதல் பாடலான, குட்டி (1971) இல் இருந்து போல் ரே பாபிஹாரா போன்றவை அமைந்தது. [2]

காஞ்சி மடத்தைச் சேர்ந்த துறவி சந்திரசேகர சரசுவதியால் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட மைத்ரீம் பஜதா என்ற பாடலை இவர் ராகமாலிகாவாக அமைத்தார். இது ஐக்கிய நாடுகள் அவையில் அக்டோபர் 23, 1966 அன்று ஐ.நா. தினத்தை முன்னிட்டு பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களால் பாடப்பட்டது.

கடைசி பதிவு[தொகு]

டிசம்பர் 22, 1975 அன்று எச்எம்வி ஸ்டுடியோவில் இந்திரா காந்தியைப் புகழ்ந்து பேசும் வகையில் உயர்தர இசைக்கலைஞர்கள் கலந்து கொண்ட சிறப்பு இசை நிகழ்ச்சியின் முழு நாள் பதிவுக்குப் பிறகு வசந்த தேசாய் வீடு திரும்பினார். இவர் தனது அடுக்குமாடி கட்டிடத்தின் மின்தூக்கியில் ஏற்பட்ட ஒரு விபத்தில் சிக்கி இவர் உயிர் துறந்தார். [3]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்த_தேசாய்&oldid=3790310" இலிருந்து மீள்விக்கப்பட்டது