உள்ளடக்கத்துக்குச் செல்

வசந்தி தேவி (கல்வியாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. வசந்தி தேவி (Vasanthi Devi) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வியாளர் ஆவார். 1938 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கான சங்கத்தின் தலைவராகவும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறங்காவலராகவும் உள்ளார். 1992-1998 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார் [1]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

வசந்தி தேவி 1938 ஆம் ஆண்டில் தமிழகத்தின் திண்டுக்கல் நகரத்தில் சென்னை மாகாண நகராட்சித் தலைவராக இருந்த பி.வி.தாசுக்கு மகளாகப் பிறந்தார். 15 ஆவது வயதில், இவர் சென்னை நகருக்கு குடிபெயர்ந்தார். மேல்நிலைக் கல்வியை முடிக்க சென்னை ராணி மேரி கல்லூரியில் சேர்ந்தார்.[2] சென்னை மாநிலக் கல்லூரியில் வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்றார்.[3] பின்னர், இவர் 1970 ஆம் ஆண்டுகளில் உள்நாட்டு அரசியல் குழுக்கள் மற்றும் இயக்கவியலில் முனைவர் பட்டத்திற்காக பிலிப்பைன்சு நாட்டுக்குச் சென்றார். 1980 ஆம் ஆண்டு பிலிப்பைன்சு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[3][4]

இராணி மேரி கல்லூரியில் பேராசிரியையான இவர், 1987 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் என்பது தக்கது.[5][6] 1988 மற்றும் 1990 ஆண்டுகளுக்கு இடையில் கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார் [2] 1992 மற்றும் 1998 ஆண்டுகளுக்கு இடையில், அவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தமிழ்நாட்டின் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார்.[1]

அரசியல் செயல்பாடு

[தொகு]

வசந்தி தேவி 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஜெ. ஜெயலலிதாவை எதிர்த்து டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கட்சி சார்பில் போட்டியிட்டார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Radhakrishnan, R. K. (13 May 2016). "An unusual contestant". Frontline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-21.
  2. 2.0 2.1 Das, Monalisa (2016-04-21). "PWF's candidate against Jayalalithaa is a respected academic, and she wants to put up a tough fight". The News Minute (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-21.Das, Monalisa (21 April 2016). "PWF's candidate against Jayalalithaa is a respected academic, and she wants to put up a tough fight". The News Minute. Retrieved 21 November 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. 3.0 3.1 "Vasanthi Devi". myneta.info. Association for Democratic Reforms.
  4. Srinivasan, Meera (11 May 2016). "Tamil Nadu Elections: A Professor's Big Fight Against Jayalalithaa". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2020-11-21.
  5. Kumar, Divya (2010-05-18). "Memories of Madras – Lessons by the beach" (in en-IN). https://www.thehindu.com/features/metroplus/memories-of-madras-lessons-by-the-beach/article432894.ece. 
  6. Janardhanan, Arun (2016-04-21). "Educationist and former ministers' kin line up against Jayalalithaa". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-21.
  7. "வசந்திதேவியும் ராமச்சந்திரனும்". 2016-04-25. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தி_தேவி_(கல்வியாளர்)&oldid=4038205" இலிருந்து மீள்விக்கப்பட்டது