உள்ளடக்கத்துக்குச் செல்

வங்கடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Megalaspis|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
வங்கடை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Megalaspis
இனம்:
இருசொற் பெயரீடு
Megalaspis cordyla
(லின்னேயஸ், 1758)
Approximate range of the torpedo scad
வேறு பெயர்கள் [2]
  • Scomber cordyla Linnaeus, 1758
  • Scomber rottleri Bloch, 1793
  • Caranx rottleri (Bloch, 1793)
  • Citula plumbea Quoy & Gaimard, 1825

வங்கடை அல்லது வங்கடைப் பாறை (Torpedo scad) என்பது ஒரு கடல் மீன் இனமாகும். இது ஜாக் மற்றும் பாரை குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. வங்கடை மீன்களானது வெப்பமண்டல இந்தோ பசிபிக் பகுதி முழுவதும் பரவி உள்ளது. மேற்கில் தென்னாப்பிரிக்காவிலிருந்து கிழக்கில் தொங்கா வரையும், வடக்கில் யப்பான் மற்றும் தெற்கில் ஆஸ்திரேலியா வரை பரவியுள்ளது. இது பாறை மீன்களின் கூட்டத்தோடு சேர்ந்து திரியும். இதன் செவுல் மூடியில் உள்ள கருப்புத் திட்டும், நீண்டு வளைந்த பக்கத் துடுப்பும் இவற்றை எளிதில் அடையாளம் காணப் பயன்படுகின்றன. இதில் பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய மீன் 80 செமீ நீளம் மற்றும் 4 கிலோ எடையுள்ளது. இருப்பினும் இது 40 செமீக்கும் குறைவான நீளத்திலேயே பொதுவாக காணப்படுகிறது. இது ஒரு இரைகௌவல் இனமாகும். இது பலவகையான மீன்களையும், தலைக்காலிகளையும், ஓட்டுடைய கணுக்காலிகளையும் உணவாக கொள்கிறது. இந்த இனம் வளரவளர உணவில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. வங்கடை மீன்களில் பெண் மீன்கள் 22 செமீ அளவு, ஆண் மீன்கள் 26.4 செமீ அளவு அடையும்போது பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. இந்தியாவில் மார்ச் மற்றும் சூலை மாதங்களுக்கு இடையில் முட்டையிடுகின்றன, அங்கு குடம்பி வளர்ச்சி மற்றும் மார்போமெட்ரிக்ஸ் பற்றிய குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா உட்பட இந்தோ-பசிபிக் முழுவதும் மீன்வளத்தில் வங்கடை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. புள்ளிவிவரங்களின் படி (இந்தியாவை தவிர்த்து) இந்த இனங்களின் வருடாந்திர மீன் பிடிப்பு 1997 இல் 70,000 டன்னிலிருந்து 2007 இல் 107,000 டன்னாக உயர்ந்துள்ளது. இந்த தரவுகளிலிருந்து இந்த மீன்களின் முக்கிய பயனர்களாக இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகியவை உள்ளன.

விளக்கம்[தொகு]

வங்கடை மீனின் செவுல் மூடியில் உள்ள கருப்புப் பொட்டும், நீண்டு வளைந்த பக்கத் துடுப்பும் இவற்றை எளிதில் அடையாளம் காணப் பயன்படுகின்றன. வங்கடையின் இருபுறங்களிலும் முன்பறமிருந்து பின்புறம் வரை கடினமான கூரிய செதில் வரிசைகள் உள்ளன. வால் நோக்கி செல்லச் செல்ல இந்த செதில்கள் கரடுமுரடாக, தடிமனாக இருக்கும்.

குறிப்புகள்[தொகு]

  1. Smith-Vaniz, W.F.; Williams, I. (2017). "Megalaspis cordyla". IUCN Red List of Threatened Species 2016: e.T20432158A115380392. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T20432158A46664104.en. https://www.iucnredlist.org/species/20432158/115380392. 
  2. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2019). "Megalaspis cordyla" in FishBase. August 2019 version.

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்கடை&oldid=3293981" இலிருந்து மீள்விக்கப்பட்டது