லூயிசு ஆம்சுட்ராங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லூயிசு ஆம்சுட்ராங்
தனது 50களில் ஆம்சுட்ராங் ஊதுகொம்பு இசைக்கும் படம்
ஆம்சுட்ராங்கின் மேடைத்தோற்றம் அவரது கவர்ச்சியான ஊதுகொம்பு இசைத்தலுக்குப் பொருத்தமாக இருந்தது.
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர் லூயிசு டானியேல் ஆம்சுட்ராங்
பிறப்பு ஆகஸ்ட் 4, 1901
நியூ ஆர்லியன்சு, லூசியானா, U.S.
இறப்பு சூலை 6, 1971(1971-07-06) (அகவை 69)
கொரோனா, குயீன்சு, நியூ யார்க் நகரம், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள் ஜாசு, Dixieland, Swing, மரபார்ந்த மக்கள் இசை
தொழில்(கள்) இசைக்கலைஞர்
இசைக்கருவி(கள்) ஊதுகொம்பு, சிற்றூதுகொம்பு, வாய்ப்பாட்டு
இசைத்துறையில் c. 1914–1971
இணைந்த செயற்பாடுகள் ஜோ "கிங்" ஆலிவர், எல்லா பிட்சுசெரால்ட், கிட் ஓரி


லூயிசு ஆம்சுட்ராங் (ஆகஸ்ட் 4, 1901[2] – சூலை 6, 1971), எனப் பரவலாக அறியப்படும் லூயிசு டானியேல் ஆம்சுட்ராங் ஒரு அமெரிக்கப் பாடகரும் ஜாசு ஊதுகொம்பு இசைக் கலைஞரும் ஆவார். லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்சைச் சேர்ந்த இவரை சாச்மோ, பாப்சு போன்ற பட்டப் பெயர்களாலும் அழைப்பதுண்டு.

1920களில் ஒரு சிற்றூதுகொம்பு, ஊதுகொம்பு இசைக் கலைஞராக முன்னணிக்கு வந்த ஆம்சுட்ராங் ஜாசு இசை மீது தணியாத ஆர்வம் கொண்டிருந்தார். இவர் இவ்விசை வகையின் போக்கை திட்டமுறையற்ற குழுமுறையில் இருந்து ஒருவர் நிகழ்ச்சிகள் பக்கமும் திருப்பினார். தனித்துவமான குரல் வளம் கொண்ட இவர் மிகவும் செல்வாக்குள்ள பாடகராகவும் விளங்கினார். வெளிப்பாட்டுத் தேவைகளுக்காக பாடலின் சொற்களிலும், இசையிலும் சூழலுக்கு ஏற்ப உடனுக்குடன் மாற்றம் செய்யும் திறமை கொண்டவராகவும் இவர் இருந்தார். பாடல் வரிகளுக்குப் பதில் அசைகளைப் பயன்படுத்திப் பாடுவதிலும் இவர் வல்லவர்.

ஊதுகொம்பு இசைத்தலோடு, மேடைக்கேற்ற கவர்ச்சித் தோற்றத்துக்கும், உடனடியாகவே அடையாளம் காணத்தக்க அவரது ஆழமான குரலுக்கும் ஆம்சுட்ராங் பெயர் பெற்றிருந்தார். 60களில் இவரது இசை வாழ்வின் இறுதிக் காலத்தில் இவரது செல்வாக்கு ஜாசு இசையையும் தாண்டிப் பொதுவான மக்கள் இசைமீது தாக்கம் கொண்டதாக இருந்தது. திறனாய்வாளர் இசுட்டீவ் லெக்கெட் என்பார், 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியத்துவம் கொண்ட இசைக் கலைஞர் ஆம்சுட்ராங்காக இருக்கலாம் என்று கூறியிருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயிசு_ஆம்சுட்ராங்&oldid=2292265" இருந்து மீள்விக்கப்பட்டது