ஊதுகொம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஊதுகொம்பு
ஊதுகொம்பு
ஊதுகொம்பு
பித்தளை இசைக்கருவி
வகைப்பாடு

பித்தளை

ஓர்ன்பாஸ்டெல்-சாக்ஸ் வகை 423.233
(Valved aerophone sounded by lip movement)
வரிசை
Written range:
Range trumpet.png
தொடர்புள்ள கருவிகள்

ஊதுகொம்பு (trumpet) என்பது மேல் ஸ்தாயி ஒலியைக் கொடுக்கும் ஒரு காற்றுவகை இசைக்கருவி. இது மிகப் பழைய இசைக்கருவிகளுள் ஒன்று. கிமு 1500 களுக்கு முன்பிருந்தே இக்கருவி பயன்பாட்டில் இருந்து வருவதாக அறியப்பட்டுள்ளது. இது நீள் வளைய வடிவில் சுற்றப்பட்ட பித்தளைக் குழாயால் ஆனது. குழாயின் ஒரு முனையில் வாயால் ஊதுவதன் மூலம் உள்ளேயுள்ள வளி அதிர்ந்து ஒலி உண்டாகிறது.

ஊதுகொம்பில் பல வகைகள் உண்டு. முற்கால ஊதுகொம்புகளில் வால்வுகள் இருக்கவில்லை. தற்கால ஊதுகொம்புகள், ஆடுதண்டு வால்வுகள் அல்லது சுழல் வால்வுகளைக் கொண்டுள்ளன. இவற்றை இயக்குவதனால் குழாயின் நீளத்தைக் கூட்ட முடியும். இது உண்டாகும் ஒலியின் சுருதியைக் குறைக்கிறது.

ஊதுகொம்பு செந்நெறி இசை, ஜாஸ் போன்ற பல இசை வகைகளில் பயன்படுகின்றது. லூயிஸ் ஆம்ஸ்ட்ராங், மைல்ஸ் டேவிஸ், டிஸ்சி கில்லெஸ்பி, பிக்ஸ் பீடெர்பெக், கிளிபோர்ட் பிரவுண், லீ மோர்கன், பிரடீ ஹப்பார்ட், செட் பேக்கர், மேனார்ட் பெர்கூசன் போன்றோர் புகழ் பெற்ற ஊதுகொம்பு இசைக் கலைஞர்களுள் அடங்குவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊதுகொம்பு&oldid=2121724" இருந்து மீள்விக்கப்பட்டது