லூகா பசியோலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லூகா பசியோலி

பிரா லூகா பார்டோலோமியோ டி பசியோலி (Fra Luca Bartolomeo de Pacioli) சுருக்கமாக லூகா பசியோலி (1445 - 1517) இத்தாலிய நாட்டினைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளர்,மற்றும் பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த துறவியுமாவார். அத்துடன் இவர் லியனார்டோ டா வின்சியுடனும் சேர்ந்தும் பணியாற்றியிருக்கின்றார். கணக்கியல் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பின் காரணமாக கணக்கியலின் தந்தை என அழைக்கப்படுகின்றார்.

வாழ்க்கை[தொகு]

வெனிஸ் மற்றும் ரோம் நகரில் கல்வி கற்ற லூகா பசியோலி 1470 ம் ஆண்டில் துறவியானார்.1497 ம் ஆண்டு மிலன் நகரிற்குப் புலம் பெயரும் வரைக்கும்கணிதத்துறை ஆசிரியராக பணியாற்றினார். மிலன் நகரத்திலே அவர் டாவின்சியுடன் சேர்ந்து பணியாற்றியதுடன் டாவின்சிக்குப் கணிதம் போதிப்பவராகவும் விளங்கினார். 1517 ம் ஆண்டில் இறந்தார்.

ஆக்கங்கள்[தொகு]

லூகா பசியோலி கணிதவியல் சார்ந்து பலவித ஆக்கங்களை வெளியீட்டுள்ளார் அவற்றில் சில:

  • Summa de arithmetica, geometrica, proportioni et proportionalita (வெனிஸ் 1494),அவரது காலத்தினில் காணப்பட்ட கணிதவியல் சார் அறிவின் கூட்டுமொத்தமான தொகுப்பினை உள்ளடக்கிய ஒர் நூலாக்கும்.மேலும் இந்நூல் கணக்குபதிவியல் முறையான இரட்டை பதிவுமுறைமை பற்றிய காலத்திற்கு முந்திய விளக்கத்திற்காகவும் புகழ்பெற்றது.இத்தகைய பதிவுமுறை மறுமலர்சிக்கால வெனிஸ் நகர வியாபாரிகளிடத்தே ஏற்கனவே காணப்பட்டாலும் அதனை லூகா பசியோலி செம்மைப்படுத்தினார். இதன் காரணமாகவே அவர் "கணக்கியலின் தந்தை" எனப்படுகின்றார்.
  • De viribus quantitatis (Ms. Università degli Studi di Bologna, 1496–1508), கணிதவியல் ஆய்வுக்கட்டுரைகள்.
  • Geometry (1509), a Latin translation of Euclid.
  • De divina proportione (மிலனில் எழுதப்பட்டது 1496–98, 1509ம் ஆண்டில் வெனிசில் வெளியீடப்பட்டது).

மேற்கோள்[தொகு]

a person should not go to sleep at night until the debits equalled the credits!
வரவுகளும் செலவுகளும் சமப்படாவிடின் ஒருவன் நித்திரைக்குச் செல்லக் கூடாது

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூகா_பசியோலி&oldid=3227520" இருந்து மீள்விக்கப்பட்டது