உள்ளடக்கத்துக்குச் செல்

லீலா மிஸ்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீலா மிஸ்ரா
பியாசா (1957) படத்தில் லீலா மிஸ்ரா
பிறப்பு(1908-01-01)1 சனவரி 1908
ஜைஸ், ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய உத்தரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு17 சனவரி 1988(1988-01-17) (அகவை 80)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
மற்ற பெயர்கள்லீலா மிஸ்ரா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1936–1986
அறியப்படுவதுசோலே (1975) படத்தில் அத்தை வேடம்
வாழ்க்கைத்
துணை
இராம் பிரசாத் மிஸ்ரா

லீலா மிஸ்ரா (Leela Mishra) (1 சனவரி 1908[1] - 17 சனவரி 1988) ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஐந்து தசாப்தங்களாக 200க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில்]] குணச்சித்திர நடிகையாகப் பணியாற்றினார். மேலும் அத்தை ( சாச்சி அல்லது மௌசி ) போன்ற பங்கு கதாபாத்திரங்களில் நடித்ததற்காக இவர் நன்கு நினைவுகூரப்படுகிறார். இவர் சோலே (1975), தில் சே மைல் தில் (1978), பேடன் பேடன் மெய் (1979), ராஜேஷ் கன்னாவின் பால்கோன் கி சாவ்ன் மெய், அஞ்சல், மெஹபூபா, அமர் பிரேம், ராஜ்ஸ்ரீ புரொடக்சன்ஸின் ஹிட் கீத் காதா சால் (1975), நதியா கே பார் (1982) அபோத் (1984) போன்ற படங்களில் "அத்தை" பாத்திரத்திற்காக இவர் மிகவும் பிரபலமானவர்.[2][3][4] 1981 ஆம் ஆண்டில் வெளியான நானி மா என்ற படத்தில் இவரது சிறந்த நடிப்பிற்காக இவர் தனது 73வது வயதில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

லீலா மிஸ்ரா, ஊமைத் திரைப்படங்களில் பணியாற்றி வந்த குணச்சித்திர கலைஞரான இராம் பிரசாத் மிஸ்ராவை தனது 12 வயதில் மிகக் குறைந்த வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 17 வயதாக இருந்தபோது, இவருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். இவர் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியைச் சேர்ந்தவர், இவரும், இவரது கணவரும் ஜமீந்தார் (நில உரிமையாளர்கள்) குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.[5]

தொழில்[தொகு]

தாதா சாகெப் பால்கேயின் நாசிக் சினிடோன் நிறுவனத்துக்காக பணிபுரிந்த மாமா ஷிண்டே என்பவரால் லீலா மிஸ்ரா கண்டுபிடிக்கப்பட்டார். ஷின்டே லீலாவின் கணவரை வற்புறுத்தி திரைப்படங்களில் லீலாவை நடிக்க வைத்தார். அந்த நாட்களில் திரைப்படங்களில் பெண் நடிகர்களின் பங்களிப்பு கடுமையான பற்றாக்குறை இருந்தது. தம்பதியினர் படப்பிடிப்புக்காக நாசிக் சென்றபோது பெற்ற ஊதியத்தில் இது தெளிவாகத் தெரிந்தது. இவரது கணவருக்கு சம்பளமாக மாதம் ரூ.150ம், லீலா மிஸ்ராவுக்கு மாதம் ரூ.500ம் வழங்கப்பட்டது. இருப்பினும், இவர்கள் படம் பிடிக்கும் கருவியின் முன் மோசமாக தோற்றமளித்ததால், இவர்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன.

கோலாப்பூர் மகாராஜாவுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் தயாரித்த பிகாரின் என்ற திரைப்படத்தில் பணியாற்றுவதற்கான அடுத்த வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்தது. இருப்பினும், லீலா மிஸ்ரா இந்த வாய்ப்பையும் இழந்தார். ஏனெனில் உடன் நடிக்கும் நடிகரை தொட்டு நடிக்க வேண்டியிருந்தது. எனவே இவர் அப்பாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

ஹொன்ஹார் என்ற மற்றொரு படத்தில் பணிபுரியும் போது இவர் இதே போன்ற பிரச்சனையை எதிர்கொண்டார். இவர் சாகு மோதக் என்ற நடிகருக்கு இணையாக ஒரு கதாநாயகியாக நடித்தார். மேலும் அவரை கட்டிப்பிடித்து அணைத்துக்கொள்ள வேண்டும் என்பதால் இவர் மீண்டும் உறுதியாக இதையும் மறுத்தார். நிறுவனம் சட்டரீதியாக பலவீனமான நிலையில் இருந்ததால், அவர்களால் இவரை திரைப்படத்திலிருந்து வெளியேற்ற முடியவில்லை, இது இவருக்கு ஒரு ஆசிர்வாதமாக இருந்தது. படத்தில் அவருக்கு மோதக்கின் அம்மா வேடம் வழங்கப்பட்டது. அது உடனடியாக வெற்றி பெற்றது. இது 18 வயதிலேயே தாய் வேடங்களில் நடிப்பதற்கான கதவுகளைத் திறந்தது.[6]

இவரது பாத்திரங்கள் தாய்மார்கள், தீங்கற்ற அல்லது தீய அத்தைகள், நகைச்சுவை பாத்திரங்கள் வரை மாறுபட்டு இருந்தது.

இறப்பு[தொகு]

இவர் தனது 80 வது வயதில் 17 சனவரி 1988 அன்று மும்பையில் மாரடைப்பால் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.kino-teatr.ru/kino/acter/w/asia/83368/bio/
  2. Vishwas Kulkarni. "10 things we miss in Bollywood". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/10-things-we-miss-in-Bollywood/articleshow/5830876.cms?referral=PM.  Retrieved 10 September 2011.
  3. "A dekho at the Iconic ads over the years". http://articles.economictimes.indiatimes.com/2009-04-22/news/27660384_1_wheel-fena-ads.  Retrieved 10 September 2011.
  4. S. Brent Plate (2003). Representing religion in world cinema: filmmaking, mythmaking, culture making. Palgrave Macmillan. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4039-6051-8.
  5. "Leela Mishra interview on Cineplot.com". பார்க்கப்பட்ட நாள் 26 March 2014.
  6. "Leela Mishra interview on Cineplot.com". பார்க்கப்பட்ட நாள் 26 March 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீலா_மிஸ்ரா&oldid=3946640" இலிருந்து மீள்விக்கப்பட்டது