லி மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லி மக்கள் அல்லது ஹ்லாய் மக்கள் (Li people or Hlai people) என்பவர்கள் சீனாவில் வாழ்கின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீன மக்கள் குடியரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 56 இனக்குழுக்களில் ஓர் இனக்குழுவினர் ஆவர். லி மக்கள் பெரும்பாலும் கிரா-டாய் மொழி பேசுகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சீனாவின் தெற்கு பகுதியில் ஆய்னான் தீவில் வாழ்கின்றனர். இந்த இனக்குழுவினர் ஐந்து துணைக்குழுக்களாக பிரிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு துணைக்குழுவும் தமக்கென தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை கொண்டுள்ளது.[1]

பெயர்கள்[தொகு]

லி மக்கள் சில நேரங்களில் "சாய்" அல்லது "சே" மக்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.[2] சீனாவின் சூய் வம்சத்தின் போது, அவர்களின் மூதாதையர்கள் இலியாவோ மக்கள் என்ற பெயரால் அறியப்பட்டனர். லி என்ற பெயர் முதன்முதலில் பிற்கால டாங் காலத்தில் (கி.பி 923–937) உபயோகப்படுத்தப்பட்டது.[3]

வரலாறு[தொகு]

சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு, லி மக்கள் லீசோ தீபகற்பத்தில் இருந்து ஆயினன் சலசந்தியைக் கடந்து ஆயினன் தீவுக்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது.[4] மேலும் லி மக்கள் வடக்கு வியட்நாம் மற்றும் ஆயினன் உட்பட குவாங்சோவின் மேற்கே உள்ள பகுதிகளை உள்ளடக்கிய கடற்கரை முழுவதும் பரவினர்.[5] லி என்ற வார்த்தையின் ஆரம்பகால குறிப்பு ஹான் வம்ச ஆட்சிக்காலத்தில் இருந்து வருகிறது. இது மத்திய வியட்நாமின் மலைப்பகுதிகளில் உள்ள சியுசேன் மக்களைக் குறிக்கிறது. ஹான் வம்சத்திற்குப் பிறகு, இந்த மக்கள் பெரும்பாலும் குவாங்சி மற்றும் மேற்கு குவாங்டாங்கில் குடியிருந்தனர்.[6]

மூன்றாம் நூற்றாண்டில், குவாங்சோவுக்கு தெற்கே வாழ்ந்த கொள்ளைக்காரர்களை லி என்று குறிப்பிடுகின்றனர். இவர்கள் மலைகளிலும் குறுகிய கணவாய்களிலும் சுவர்கள் இல்லாத கிராமங்களில் வசித்தனர். ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில், லியாங் வம்சம் லி மக்களின் மீது போர் தொடுத்தது. டாங் வம்ச ஆட்சியில், வடக்கு வியட்நாமின் லி மக்களுக்கு தனி நிர்வாக அந்தஸ்து வழங்கப்பட்டது.[7] பதினொன்றாம் நூற்றாண்டில், சீனாவின் முக்கிய நிலப்பரப்பில் லி மக்களை பற்றிய எந்த பதிவுகளும் குறிப்பிடப்படவில்லை.[8] 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மிங் வம்சத்தின் முடிவில், கிட்டத்தட்ட ஹைனானின் அனைத்து பகுதிகளும் ஹான் சீனர்களால் குடியேறப்பட்டன. அதே நேரத்தில் லி மக்கள் மலைப் பிரதேசங்களை ஆக்கிரமித்தனர்.[9]

ஆயினானின் சப்பானிய ஆக்கிரமிப்பின் போது (1939-45), குறிப்பாக மேற்கு ஆயினானானில்,  பொதுவுடைமை எதிர்ப்பு நடவடிக்கைகளால் லி மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கபட்டனர். கோமின்டாங் மற்றும் சப்பானிய வீரர்களால் லி மக்களின் கிராமங்கள் அடிக்கடி அழிக்கப்பட்டன. சப்பானியர்கள் பல்லாயிரக்கணக்கான லி மக்களைக் படுகொலை செய்தனர்.[10] பிறகு சீன பொதுவுடைமை கட்சியின் ஆதரவின் காரணமாக லி மக்கள் தேசியவாதிகளால் துன்புறுத்தப்பட்டார்கள். [11][12]

தேசியவாதிகளுக்கு எதிரான சீன உள்நாட்டுப் போரின் போது லி மக்கள் பொதுவுடைமை கட்சிக்கு பக்கபலமாக இருந்ததால், மக்கள் சீனக் குடியரசின் அரசாங்கத்தால் தற்போது லி மக்கள் சாதகமாக பார்க்கப்படுகின்றனர்.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chinese Nationalities (Li Minority)". பார்க்கப்பட்ட நாள் 18 February 2011.
  2. "Li people". Indigenous Peoples Literature (in ஆங்கிலம்). 2023-04-09. பார்க்கப்பட்ட நாள் 2023-12-12.
  3. "The Li People". State Ethnic Affairs Commission. 14 April 2006. பார்க்கப்பட்ட நாள் 22 March 2020.
  4. Liang, Min; Zhang, Junru (1996). Dòng tái yǔzú gàilùn. Beijing: Zhongguo shehui kexue chubanshe. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9787500416814. 
  5. Schafer, Edward (1967). The Vermillion Bird. University of California Press.. 
  6. Nola Cooke, Li Tana, and James Anderson (2011). The Tonking Gulf Through History. University of Pennsylvania Press. 
  7. Churchman, Michael (2010). "Before Chinese and Vietnamese in the Red River Plain: The Han–Tang Period.". Chinese Southern Diaspora Studies 4: 25–37. 
  8. Churchman, Catherine (2015), Where to Draw the Line? The Chinese Southern Frontier in the Fifth and Sixth Centuries
  9. Csete, Anne (2006), Ethnicity, Conflict, and the State in the Early to Mid-Qing
  10. Zhonghua min guo shi lu: Min guo yuan—san shi ba nian (1912.1.1.-1949.9.30), 1998
  11. 11.0 11.1 "An Introduction to China's Li People". 30 May 2018.
  12. Journal of South Central College for Nationalities: Philosophy and social sciences, 1989
"https://ta.wikipedia.org/w/index.php?title=லி_மக்கள்&oldid=3899215" இலிருந்து மீள்விக்கப்பட்டது