லிவர்பூல் கால்பந்துக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லிவர்பூல் எஃப்.சி.
The words "Liverpool Football Club" are in the centre of a pennant, with flames either side. The words "You'll Never Walk Alone" adorn the top of the emblem in a green design, "EST 1892" is at the bottom.
முழுப்பெயர் லிவர்பூல் கால்பந்து கழகம்
அடைமொழி தி ரெட்ஸ்
தோற்றம் 3 சூன் 1892
(125 ஆண்டுகள் முன்னர்)
 (1892-06-03)[1]
ஆட்டக்களம் அன்ஃபீல்ட்
ஆட்டக்கள கொள்ளளவு 54,074[2]
உரிமையாளர் பென்வே ஸ்பாட் குழு
அவைத்தலைவர் டாம் வெர்னர்
மேலாளர் யொர்கன் க்ளாப்
கூட்டமைப்பு பிரீமியர் லீக்
2016-17 பிரீமியர் லீக், 4 ஆவது
இணையதளம் கழக முகப்புப் பக்கம்
Current season

லிவர்பூல் எஃப்.சி. அல்லது லிவர்பூல் கால்பந்து அணி (Liverpool Football Club) என்பது ஒரு இங்கிலாந்தின் கால்பந்து அணியாகும். இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் இரண்டாவது மிகச் சிறந்த காற்பந்துக் கழகமாக இது திகழ்கிறது. இக்கழகம் இங்கிலாந்து கூட்டிணைவை 18 முறை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த அணி 7 முறை எஃப் ஏ கோப்பையையும், 5 முறை யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவையும், 3 முறை யூஈஎஃப்ஏ கோப்பையையும், 3 முறை யு.இ.எப்.எ சூப்பர் கிண்ணத்தையும், 8 முறை கூட்டிணைவு கோப்பையையும் வென்றிருக்கிறது.

இந்த அணி 1892 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1893-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து லீக் காற்பந்து போட்டியில் பங்கேற்று வருகிறது. 1964 ஆம் ஆண்டு முதல் தாயக மைதானத்தில் சிகப்பு நிற உடை அணிந்து விளையாடி வருகிறார்கள்.1970 மற்றும் 80-களில், உள்நாட்டில் மற்றும் ஐரோப்பாவில் பல விருதுகளை வென்று ஜாம்பவானாக இருந்தது.

அணியின் ஆதரவாளர்கள் இரண்டு முறை மிகபெரிய துன்பமான சம்பவங்களை சந்தித்துள்ளார்கள். 1985 ஆம் ஆண்டில் பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரில் ஹெய்செல் மைதானத்தில் நடந்த ஐரோப்பிய கோப்பை இறுதிப் போட்டியின் போது அரங்கின் மேல்தளங்களில் நடந்த கலவரத்தால் 39 பார்வையாளர்கள் மரணமடைந்தனர். நான்கு ஆண்டுகள் கழித்து, 96 லிவர்பூல் ரசிகர்கள் ஷெஃபீல்டில் ஹில்ஸ்பரோ மைதானத்தில் நடந்த எஃப்.ஏ கோப்பை அரையிறுதிப் போட்டியில் நெரிசலில் நசுங்கி இறந்தனர்.

எவர்ட்டன் மற்றும் மன்செஸ்டர் யுனைட்டேட் அணிகளுக்கு இடையில் நடக்கும் ஆட்டம் பரம எதிரிகளுக்கு இடையில் நடக்கும் ஆட்டமாக பார்க்கப்படுகிறது. லிவர்பூல் கால்பந்து கிளப் அணியின் கீதம் "யூ வில் நெவர் வாக் அலோன்" ஆகும். , அன்பீல்டு மைதானத்தில் தவறாமல் ஒவ்வொரு விளையாட்டு தொடங்குவதற்கு முன் ஒலிக்கப்படும். இந்த வார்த்தைகள், ஆன்ஃபீல்டு கிளப்பின் முகடு மற்றும் பில் ஷேங்க்லி கேட்டில் பொறிக்கப்பட்டுள்ளது..

அன்பீல்டு மைதானம்[தொகு]

ஆன்ஃபீல்டு, லிவர்பூல் எஃப்.சி.யின் தாயகம்

அன்பீல்டு மைதானம் இதன் தாயக அரங்கு விளையாட்டு அரங்காகும். முன்னதாக அது எவர்ட்டன் அணியின் மைதானமாக இருந்தது. இங்கிலாந்துக் கால்பந்தில் 1962 முதல் லிவர்பூல் தொடர்ந்து தலைமை இடங்களில் இருந்து வருகிறது. பில் ஷேங்க்லி, பாப் பைஸ்லி, ஜோ ஃபேகன், கென்னி டால்க்லிஷ் (இவர் இந்த அணிக்காக விளையாடவும் செய்தார். கொஞ்ச காலத்திற்கு வீரர் மற்றும் மேலாளராய் இருந்தார்), கெரார்ட் ஹவ்லியர் மற்றும் அவர்களது நடப்பு மேலாளரான ரபேல் பெனிடெஸ் ஆகியோர் இதன் மேலாளர்களாய் இருந்து வந்திருக்கின்றனர். பில்லி லிடெல், இயன் செயிண்ட் ஜான், ரோஜர் ஹண்ட், ரோன் யீட்ஸ், எம்லின் ஹுக்ஸ், கெவின் கீகன், இயன் ரஷ், கிரீமி சௌனஸ், ராபி ஃபவுலர் மற்றும் ஸ்டீவன் கெரார்டு ஆகியோர் பிரபல லிவர்பூல் வீரர்களில் சிலர்.

1985 ஆம் ஆண்டில் பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரில் ஹெய்செல் மைதானத்தில் நடந்த ஐரோப்பிய கோப்பை இறுதிப் போட்டியின் போது அரங்கின் மேல்தளங்களில் நடந்த கலவரத்தால் 39 பார்வையாளர்கள் மரணமடைந்தனர். இதனையடுத்து அனைத்து இங்கிலாந்து அணிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐரோப்பிய போட்டிகளில் பங்கெடுக்க முடியாதபடி தடைசெய்யப்பட்டது. அனைத்துப் பிற ஆங்கிலேய அணிகளுக்கும் மறு அனுமதி கிட்டிய பின்னரும் லிவர்பூல் ஒரு ஆண்டு கூடுதலாய் தண்டனை பெற்றது. நான்கு ஆண்டுகள் கழித்து, 96 லிவர்பூல் ரசிகர்கள் ஷெஃபீல்டில் ஹில்ஸ்பரோ மைதானத்தில் நடந்த எஃப்.ஏ கோப்பை அரையிறுதிப் போட்டியில் நெரிசலில் நசுங்கி இறந்தனர். இதனை விசாரிக்க நியமிக்கப்பட்ட டெய்லர் அறிக்கையின் படி அனைத்து உயர் பிரிவு மைதானங்களிலும் நிற்கும் வசதி 1990களின் நடுப்பகுதி வரை தடை செய்யப்பட்டது.

வரலாறு[தொகு]

1892 ஆம் ஆண்டில் எவர்ட்டன் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் அன்பீல்டு நில உரிமையாளர் ஜான் ஹௌல்டிங்கிற்கு இடையே நடந்த சர்ச்சையை தொடர்ந்து எவர்ட்டன் அணி குடிஸன் பார்க் மைதானத்திற்கு இடம்பெயர்ந்தது. அன்பீல்டு மைதானத்தில் ஆடுவதற்காக ஜான் ஹௌல்டிங் "எவர்ட்டன் எஃப் சி அண்டு அத்லெடிக் கிரௌண்ட்ஸ் லிமிடெட்" என்ற பெயரில் புது கால்பந்து அணியை கால்பந்து சங்கத்தில் பதிவு செய்ய முயன்றார். ஏற்கனவே எவர்ட்டன் என்ற பெயரில் அணி இருப்பதால் கால்பந்து சங்கம் அனுமதி மறுத்தது. இதனையடுத்து லிவர்பூல் கால்பந்து அணி என்ற பெயர் பதிவு செய்யப்பட்டது.

முதல் சீசனில் லங்காஷயர் லீக் வென்றதையடுத்து, கால்பந்து லீக் இரண்டாம் பிரிவுக்கு முன்னேறியது. 1895-96 ஆம் அண்டு இரண்டாம் பிரிவிலிருந்து முன்னேறி முதல் பிரிவில் ஆடும் தகுதியை பெற்றது. முதல் பிரிவு லீக் சாம்பியன்ஷிப்களை 1901 மற்றும் 1906 ஆண்டுகளில் வென்றது. 1914 ஆம் ஆண்டு முதன் முறையாக எப்.எ. கோப்பை இறுதி போட்டிவரை முன்னேறி 0-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 1922 மற்றும் 1923 ல் தொடர்ச்சியாக முதல் பிரிவு லீக் சாம்பியன்ஷிப்களை வென்றது. 1946-47-ல் ஐந்தாவது லீக் சாம்பியன்ஷிப்பை வென்றது.1953-54 பருவத்தில் முதல் பிரிவில் ஆடும் தகுதியை தக்க வைத்து கொள்ளும் அளவிற்கு புள்ளிகளை பெறாததால் இரண்டாம் பிரிவுக்கு தள்ளப்பட்டது. 1958-59-ல் எப்.எ. கோப்பையில் லீக் அல்லாத வர்செஸ்டர் நகர அணியிடம் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து அணியின் புது மேனேஜராக பில் ஷாங்லி நியமிக்கப்பட்டார். பயிற்சியாளர்கள் ஸ்ட்ராட்டஜி பற்றி விவாதிக்க அறை வேண்டும் என்று கருதிய ஷாங்லி பூட்கள் வைக்கும் அறையை மாற்றியமைத்து பின்னாளில் மிகவும் போற்றப்பற்ற "பூட் ரூம்"-ஐ நிறுவினார். ஜோ பகான், ரூபன் பென்னெட், மற்றும் பாப் பைஸ்லீ ஆகியோரை பயிற்சியாளர்களாக நியமித்தார். மாற்றங்களின் முதற் கட்டமாக 24 வீரர்களை அணியிலிருந்து விடுவித்தார்.

1961-62 பருவத்தில் இரண்டாம் பிரிவில் முதலிடத்தை பிடித்து மீண்டும் முதல் பிரிவுக்கு பதவி உயர்வு பெற்றது. 1963-64 பருவத்தில் ஆறாவது லீக் சாம்பியன்ஷிப்பை வென்றது.1965-ல் முதன் முறையாக எப்.எ. கோப்பையையும், 1965-66 பருவத்தில் ஏழாவது லீக் சாம்பியன்ஷிப்பையும் வென்றது. ஐரோப்பிய கப் வின்னர்ஸ் கப் இறுதி போட்டியில் போருஸ்யா டோர்ட்மண்டு அணியிடம் 1966-ல் தோற்றது. 1972-73 பருவத்தில் முதன் முறையாக இரண்டு கோப்பைகளை வென்றது. எட்டாவது லீக் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றிய அணி, தன்னுடைய முதலாவது யு.இ.எப்.எ கோப்பையை வென்றது. 1973-74 பருவத்தில் இரண்டாம் எப்.எ. கோப்பையை வென்ற ஷாங்லி மேனேஜர் பதவியில் இருந்து விலகி, பொறுப்பை தனது உதவியாளரான பாப் பைஸ்லீ-யிடம் ஒப்படைத்தார். 1975-76 பருவத்தில் ஒன்பதாவது லீக் சாம்பியன்ஷிப்பையும்,இரண்டாம் யு.இ.எப்.எ கோப்பையையும் வென்றது. 1976-77 பருவத்தில் பத்தாவது லீக் சாம்பியன்ஷிப்பையும், ஐரோப்பா கோப்பையை முதன் முறையாக கைப்பற்றியது. ஆனால் எப்.எ. கோப்பை இறுதி போட்டியில் இரண்டாவது முறையாக தோல்வியை தழுவியது. 1977-78 பருவத்தில் ஐரோப்பா கோப்பையை இரண்டாம் வென்று தக்கவைத்துகொண்டனர். 1978–79 மற்றும் 1979–80 பருவங்களில் முறையே 11-வது மற்றும் 12-வது லீக் சாம்பியன்ஷிப்புகளை கைப்பற்றியது. 1980-81 பருவத்தில் மூன்றாவது ஐரோப்பா கோப்பையை வென்ற லிவர்பூல், முதன் முறையாக லீக் கோப்பையை கைப்பற்றியது.

வீரர்கள்[தொகு]

தற்போதைய அணி வீரர்களின் பெயர் பட்டியல் கீழ் வரும்மாறு:-

சட்டை எண் பெயர் பங்களிப்பு
1 செருமனியின் கொடி லோரிஸ் காரியஸ் கோல் காவலர்
2 இங்கிலாந்தின் கொடி கிலாய்ன் டிபெண்டர் (ரைட் பேக்)
3 பிரான்சின் கொடி மமுடௌ சாகோ டிபெண்டர் (சென்டர் பேக்)
5 நெதர்லாந்து கொடி வில்னாடம் மத்திய திடல் ஆட்டக்காரர்
6 குரோவாசியாவின் கொடி ளோரன் டிபெண்டர் (சென்டர் பேக்)
7 இங்கிலாந்தின் கொடி ஜெம்ஸ் மில்னெர் (துணை கெப்டன்) டிபெண்டர் (லெப்டு பேக்)
9 பிரேசிலின் கொடி ரொபெர்தோ ஃபிர்மினோ தாகுதல் ஆட்டகாரர்
10 பிரேசிலின் கொடி பிலிபே கௌதின்ஹோ மத்திய திடல் ஆட்டக்காரர்
11 எகிப்தின் கொடி முகமது சாலாக் தாகுதல் ஆட்டகாரர்
14 இங்கிலாந்தின் கொடி ஜோர்டான் ஹென்டர்சன் (கெப்டன்) மத்திய திடல் ஆட்டக்காரர்
15 இங்கிலாந்தின் கொடி டேனில் தூரேச் தாகுதல் ஆட்டகாரர்
16 செர்பியாவின் கொடி மார்கோ குரிச் மத்திய திடல் ஆட்டக்காரர்
17 எஸ்தோனியாவின் கொடி கிலாவன் டிபெண்டர் (சென்டர் பேக்)
18 எசுப்பானியாவின் கொடி அல்பெர்தோ மொரெனோ டிபெண்டர் (லெப்டு பேக்)
19 செனிகல் கொடி சாடியோ மானே தாகுதல் ஆட்டகாரர்
20 இங்கிலாந்தின் கொடி ஆடம் லலானா மத்திய திடல் ஆட்டக்காரர்
21 பிரேசிலின் கொடி லுகாஸ் லெய்வா மத்திய திடல் ஆட்டக்காரர்
22 பெல்ஜியத்தின் கொடி சிமோன் மினோலெட் கோல் காவலர்
23 செருமனியின் கொடி எமர் சான் மிட்பீல்டர்
27 பெல்ஜியத்தின் கொடி டிவோக் ஒரிஜி தாகுதல் ஆட்டகாரர்
28 இங்கிலாந்தின் கொடி டெனி இங்ஸ் தாகுதல் ஆட்டகாரர்
32 கமரூனின் கொடி ஜொஇல் மதிப் டிபெண்டர் (சென்டர் பேக்)
34 இங்கிலாந்தின் கொடி மார்ட்டின் கெல்லி டிபெண்டர் (ரைட் பேக்)
35 இங்கிலாந்தின் கொடி கோனோர் கோடி மிட்பீல்டர்
36 இங்கிலாந்தின் கொடி நாதன் எக்லெஸ்டன் ஸ்ட்ரைக்கர்
37 சிலவாக்கியாவின் கொடி மார்ட்டின் ஸ்கர்ட்டில் டிபெண்டர் (சென்டர் பேக்)
38 இங்கிலாந்தின் கொடி ஜான் பிளானகன் டிபெண்டர் (ரைட் பேக்)
39 வேல்சின் கொடி கிரேக் பெல்லாமி ஸ்ட்ரைக்கர்
42 டென்மார்க்கின் கொடி பீட்டர் குலாக்சி கோல் காவலர்
47 இங்கிலாந்தின் கொடி ஆண்ட்ரே விஸ்டம் டிபெண்டர் (சென்டர் பேக்)
49 இங்கிலாந்தின் கொடி ஜாக் ராபின்சன் லெப்டு பேக்

பிற அணிகளுக்கு ஆட அனுப்பபட்டுள்ள வீரர்கள் பட்டியல் கீழ் வரும்மாறு:-

## பெயர் பங்களிப்பு
1 இசுக்காட்லாந்தின் கொடி டேனி வில்சன் டிபெண்டர் (சென்டர் பேக்)
2 இங்கிலாந்தின் கொடி டேவிட் அம்மூ மிட்பீல்டர்
3 இத்தாலியின் கொடி ஆல்பர்ட்டோ அக்குலானி மிட்பீல்டர்
4 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி வில்யன் பிஜ்யேவ் ஸ்ட்ரைக்கர்
5 இங்கிலாந்தின் கொடி ஜோ கோல் மிட்பீல்டர்
6 இங்கிலாந்தின் கொடி ஸ்டீபன் டார்பி டிபெண்டர் (ரைட் பேக்)
7 எசுப்பானியாவின் கொடி டேனியல் பச்சேக்கோ ஸ்ட்ரைக்கர்
8 போர்த்துகலின் கொடி டோனி சில்வா மிட்பீல்டர்

வெற்றிகள்[தொகு]

லீக்[தொகு]

 • முதல் பிரிவு லீக்
  • 1900–01, 1905–06, 1921–22, 1922–23, 1946–47, 1963–64, 1965–66, 1972–73, 1975–76, 1976–77, 1978–79, 1979–80, 1981–82, 1982–83, 1983–84, 1985–86, 1987–88, 1989–90
 • இரண்டாம் பிரிவு லீக்
  • 1893–94, 1895–96, 1904–05, 1961–62
 • லேன்கேசியர் லீக்
  • 1892–93

கோப்பை[தொகு]

 • எப்.எ கோப்பை: 7
  • 1965, 1974, 1986, 1989, 1992, 2001, 2006
 • லீக் கோப்பை: 7
  • 1981, 1982, 1983, 1984, 1995, 2001, 2003, 2012
 • எப்.எ கொமுனிதி சீல்ட்: 15
  • 1964*, 1965*, 1966, 1974, 1976, 1977*, 1979, 1980, 1982, 1986*, 1988, 1989, 1990*, 2001, 2006 (* பகிர்ந்தல்)

ஐரோப்ப[தொகு]

 • ஐரோப்பிய வெற்றியாள்ளர் கின்னம்: 5
  • 1977, 1978, 1981, 1984, 2005
 • யுஇஎப்எ ஐரோப்பிய லீக்: 3
  • 1973, 1976, 2001
 • யுஇஎப்எ சூப்பர் கோப்பை: 3
  • 1977, 2001, 2005

மேற்கோள்கள்[தொகு]

 1. "Happy birthday LFC? Not quite yet...". Liverpool F.C. பார்த்த நாள் 15 March 2014. "Liverpool F.C. was born on 3 June 1892. It was at John Houlding's house in Anfield Road that he and his closest friends left from Everton FC, formed a new club."
 2. Liverpool. "New Anfield capacity confirmed as 54,074". பார்த்த நாள் 9 September 2016.