லியு யங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியு யங்
தேசியம்Chinese
பிறப்பு6 அக்டோபர் 1978 (1978-10-06) (அகவை 45)
செங்சவு, ஹெய்நான், China
முந்தைய பணி
PLAAF transport pilot
தரம்Major
விண்வெளி நேரம்
13 days
தெரிவுChinese Group 2[1]
பயணங்கள்சென்சூ 9

மேஜர் லியு யங் (Major Liu Yang, சீனம்: 刘洋பின்யின்: Liú Yáng; பிறப்பு அக்டோபர் 1978), சீனாவைச் சேர்ந்த விமானியும் விண்வெளி வீரரும் ஆவார். சூன் 16. 2012 அன்று சென்சூ விண்வெளித் திட்டத்தின் ஒன்பதாவது விண் பயணத்தில் பயணித்த முதல் சீனப் பெண் என்ற பெருமை பெற்றவர்.[2] பெண் விண்வெளிவீரர்கள் திருமணமானவர்களாக இருக்க வேண்டும் என்ற சீனச் சட்டத்திற்கேற்ப மணம் புரிந்தவர்.[3]

பணிவாழ்வு[தொகு]

சீன மக்கள் விடுதலைப் படையின் வான்படையில் வான்பயண அலகொன்றின் துணைத்தலைவராக உள்ள லியு வான்படை மேஜர் தகுநிலை பெற்றவர். 1680 மணிகள் பறந்த பட்டறிவுள்ள இவர் இரண்டாண்டுகள் பயிற்சிக்குப் பின்னர் சோதனைகளில் தேறி மற்றுமொரு பெண் வாங் யாபிங்குடன் விண்வெளி வீரர் படைக்குத் தேர்வானார். [4]

சீன விண்வெளி நிலையம் டியாங்காங் 1 செல்ல திட்டமிடப்பட்ட முதல் மனிதர் இயக்கும் விண்வெளித் திட்டமான சென் சூ 9 பயணத்தில் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணோடிகளில் ஒருவராக விளங்கினார். இவருடன் ஜியங் ஹைபிங்கும் லியு வாங்கும் சென்றனர். விண்வெளிக்குப் பயணித்த முதல் பெண்மணியான வலன்டீனா டெரெஷ்கோவா சென்ற அதே நாளில் 49 ஆண்டுகள் கழித்து சூன் 16, 2012 ன்று விண்வெளிக்கு ஏறி சாதனை படைத்தார்.[3]

திருமணமான லியுவிற்கு குழந்தைகள் இல்லை. இவர் சீனப் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராவார்.[5]

மேற்கோள்களும் குறிப்புக்களும்[தொகு]

  1. Xinhua (2011-10-31). "China mulls over sending female "taikonauts" into space". Xinhua. http://news.xinhuanet.com/english2010/china/2011-10/31/c_131222216.htm. 
  2. "China readies three taikonauts for station visit". Planetary Society. Archived from the original on 2012-10-03. Retrieved 2012-06-16.
  3. 3.0 3.1 Space.com, "China Unveils Astronaut Crew, 1st Female Spaceflyer, for Saturday Launch", 15 June 2012, Clara Moskowitz
  4. "China prepares for launch, names female astronaut". CNN News. 15 June 2012. http://edition.cnn.com/2012/06/15/world/asia/china-space-launch/index.html?hpt=hp_t3. பார்த்த நாள்: 2012-06-16. 
  5. Amos, Jonathan (16 June 2012). "China launches space mission with first woman astronaut". BBC. Retrieved 16 June 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லியு_யங்&oldid=3712748" இலிருந்து மீள்விக்கப்பட்டது