உள்ளடக்கத்துக்குச் செல்

லாலாய் சிங் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாலாய் சிங் யாதவ்
பிறப்பு1 செப்டம்பர் 1911
கத்ரா, கான்பூர் தேகத் மாவட்டம், உத்தரப்பிரதேசம், இந்தியா
இறப்பு7 பிப்ரவரி 1993
மொழிஇந்தி
தேசியம்இந்தியர்

லாலாய் சிங் யாதவ் (Lalai Singh Yadav)(1911-1993) என்பவர் காவல்துறை அலுவலர், சமூக ஆர்வலர், மற்றும் நாடக எழுத்தாளராகவும் ஆவார். ஷம்புக் வாத் போன்ற நாடகங்களை எழுதியுள்ளார். இவர் பெரியார் ஈ. வெ. இராமசாமியின் தி கீ டு அண்டர்ஸ்டாண்டிங் ட்ரூ ராமாயணத்தைத் தமிழிலிருந்து இந்திக்கு சச்சி ராமாயண் கி சாபி என்று மொழிபெயர்த்தார்.[1] 1962-ல், இவர் பாமன் வாதி ராஜ்ய மே ஷோஷிதோ பர் ராஜ்நைடிக் டகைதி என்ற புத்தகத்தை எழுதினார். இவர் தனது புத்தகத் தடைக்கு உ.பி அரசுக்கு எதிராகப் பேச்சுரிமை வழக்கை எதிர்த்துப் போராடினார்.[2][3]

இராமாயணத்தை மொழிபெயர்ப்பது மட்டுமின்றி, அங்குலிமாலா, சம்புகன், ஏகலைவன் உள்ளிட்ட 5 நாடகங்களையும் எழுதினார்.[4]

புத்த மதத்திற்கு மாறுதல்

[தொகு]

லாலாய் சிங் யாதவ் ஓர் அம்பேத்கரிய பௌத்தர் ஆவார்.[5]

1967-ல் இந்து மதத்தைத் துறந்து பௌத்தத்தைத் தழுவினார். புத்த மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, இவர் தனது பெயரிலிருந்த யாதவ் என்ற பெயரை நீக்கினார். யாதவ் என்ற சொல்லை நீக்கியதற்குப் பின்னால் அவருடைய ஆழ்ந்த ஜாதி எதிர்ப்பு உணர்வு காரணமாக அமைந்தது.[6][7]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "UP Oppn wants Periyar Ramayan banned, but not a copy to buy in state - Indian Express". archive.indianexpress.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-07-11.
  2. thckr (2004-04-13). "Legality of book-banning". தி இந்து. Archived from the original on 2015-02-27. பார்க்கப்பட்ட நாள் 2018-05-20.
  3. दलित दस्तक (2017-09-05), Periyar E.V Ramasami and Lalai singh story, பார்க்கப்பட்ட நாள் 2018-05-20
  4. "पेरियार ललई सिंह यादव को याद करते हुए - Velivada - Educate, Agitate, Organize". Velivada (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-09-01. பார்க்கப்பட்ட நாள் 2023-08-01.
  5. "आयोजन:बुद्ध, डॉ. भीमराव आंबेडकर व लोहिया के विचार वाहक थे ललई सिंह यादव". பார்க்கப்பட்ட நாள் 2023-08-01.
  6. "Lalai Singh Yadav: Fiery hero of rebel consciousness". 24 September 2016.
  7. "सच्ची रामायण छापने वाले ललई यादव क्यों बन गये बौद्ध?". 7 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாலாய்_சிங்_யாதவ்&oldid=3798992" இலிருந்து மீள்விக்கப்பட்டது