சம்புகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சம்புகனைக் கொல்லும் இராமன்

சம்புகன் (Shambuka) வால்மீகி இராமாயணக் கதைமாந்தருள் ஒருவன். தவம் இயற்றிய சூத்திரன் என்ற காரணத்தால் இராமனால் கொல்லப்பட்டவன்.

வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையிலான பகுதியில் சம்புக வதம் விவரிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பிராமணன் ஒருவனின் மகன் திடீரென இறந்து விடுகிறான், மகனை இழந்த பிராமணன் இராமனிடம் நீதி கேட்டு வருகிறான். அந்நேரத்தில் அங்கு வரும் நாரதமுனி, சூத்திரன் ஒருவன் உனது நாட்டில் தவம் இயற்றிக் கொண்டிருப்பதாலேயே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்கிறார். சம்புகனைத் தேடிச் சென்ற இராமன் அவன் தவமியற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு அங்கேயே அவனைத் தனது வாளால் தலை வேறு முண்டம் வேறாக்கிக் கொல்கிறான்.[1]


பெரியார் போன்றோர் சம்புக வதத்தைக் காரணம் காட்டி இராமன் கருணையுடைய அரசன் அல்லன் என்று குற்றஞ்சாட்டினர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Ramayana of Valmiki Trans. Hari Prasad Shastri 3:579-85
  2. Countercurrents, "Periyar's movement" (June 28, 2003).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்புகன்&oldid=3000366" இருந்து மீள்விக்கப்பட்டது