லாக்காய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாக்காய்
လောက်ကိုင်မြို့
Laukkai
Laukkai
லாக்காய் is located in Myanmar
லாக்காய்
லாக்காய்
Location in Burma
ஆள்கூறுகள்: 23°35′N 98°30′E / 23.583°N 98.500°E / 23.583; 98.500
நாடு மியான்மர்
பிரிவுஷான் மாநிலம்
மாவட்டம்கோகாங் சுயாட்சி மண்டலம்
நகராட்சிலாக்காங் நகராட்சி
ஏற்றம்3,200 ft (1,000 m)
மக்கள்தொகை
 • மதங்கள்பெளத்தம்
நேர வலயம்MST (ஒசநே+6.30)

லாக்காய் மியான்மரின் கோகாங் சுயாட்சி பகுதியில் இருக்கும் ஒரு நகரம். இந்நகரம் லாஒகாய் அல்லது லாக்காங் என்றும் அறியப்படுகிறது. கோகாங் சிறப்பு பிரதேசத்தின் தலைநகரமாக லாக்காய் இருக்கிறது. [1][2] இந்த கோகாங் சுயாட்சிப் பிரதேசம் மியான்மரின் ஷான் மாநிலத்தில் வடக்குப் பகுதியில் உள்ளது.

புவியியல்[தொகு]

லாக்காய் சால்வின் ஆற்றின் அருகில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் தான் பர்மாவின் எல்லை முடிந்து அருகில் சீனாவின் எல்லை ஆரம்பமாகிறது. இதன் பகுதி சீனாவின் மக்கள் குடியரசு படைகளால் பாதுகாக்கப்படுகிறது. லாக்காய்யின் எல்லையில் இருந்து பத்து (10) மைல் தொலைவில் தான் சீனாவின் நான்சான் நகரம் இருக்கிறது. [3] தென்மேற்கு மான்டரின் மாவட்டத்தில் சீன மொழியின் எழுத்துக்களில் தான் பெரும்பாலும் எழுதப்படுகிறது. [4] லாக்காய் கோகாங் சுயாட்சிப் பிரிவில் லாக்காங் நகராட்சியில் அமைந்திருக்கும் முக்கிய நகரமாகும். இந்நகரம் லாசியோ நகரத்தில் இருந்து 117 மைல்கள் தொலைவிலும் கோங்யான் நகரத்தில் இருந்து 42 மைல்கள் தொலைவிலும் அமைந்திருக்கிறது.

இதன் ஓர் ஆண்டில் மழையின் அளவு 40 அங்குலமாக இருக்கிறது. [5]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாக்காய்&oldid=3588076" இருந்து மீள்விக்கப்பட்டது