ரோக்சானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோக்சானா
பேரரசர் அலெக்சாந்தர் - ரோக்ஸானா திருமணம்
வாழ்க்கைத் துணை பேரரசர் அலெக்சாந்தர்
வாரிசு
நான்காம் அலெக்சாண்டர்
தந்தை ஆக்சியாதெஸ்
பிறப்பு கிமு 340
சோக்தியானா அல்லது பாக்திரியா
இறப்பு கிமு 310
மாசிடோனியா, பண்டைய கிரேக்கம் [
சமயம் சொராட்டிரிய நெறி

ரோக்சானா (Roxana) பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசின் நடு ஆசியப் பகுதியில் உள்ள சோக்தியானா-பாக்திரியா பகுதிகளின் ஆளுநர் ஆக்சியாதெஸ் மகள் ஆவார்.[1][2][3]

பாரசீகத்தின் இறுதி அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் தாராவை வென்ற அலெக்சாந்தர் அவரது மகளான ரோக்சானாவை மணந்தார். ரோக்சானா கிமு 310-இல் நான்காம் அலெக்சாண்டரைப் பெற்றெடுத்து இறந்தார். [2]

அலெக்சாந்தரும், ரோக்சானாவும், சித்திரம், ஆண்டு, 1756
அலெக்சாந்தர்-ரோக்சானா திருமண விழா சித்திரம்

வரலாறு[தொகு]

பாரசீக இளவரசி ரோக்சானா கிமு 340-இல் சோக்தியானா-பாக்திரியா பகுதிகளின் மாகாண ஆளுநரான ஆக்சியாதெஸ் எனும் பிரபுவிற்கு பிறந்தார்.ஆக்சியாதெஸ் பாரசீகத்தின் இறுதி அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் தாராவை கொலை செய்து கொன்று, தன்னை சோக்தியானா-பாக்திரியா பகுதிகளின் மன்னராக அறிவித்துக் கொண்டார். அலெக்சாந்தர் சோக்தியானா-பாக்திரியா பகுதிகளை வென்ற பின்னர், ரோக்சானா மீது அலெக்சாந்தர் காதல் கொண்டு, பின் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை பாரசீக மற்றும் கிரேக்கப் படைத்தலைவர்கள் முழுமனதாக ஏற்கவில்லை. எனவே ரோக்சானாவை பாபிலோன் அருகே உள்ள சூசா நகரத்தில் பத்திரமாக வைத்து காத்தார். அலெக்சாந்தர் சூசா நகரத்திற்கு திரும்பிய போது ரோக்சானாவின் சகோதரரை ஒரு குதிரைப்படைத் தலைவராக நியமித்தார். இந்தியாவை கைப்பற்றுவதற்கு ஏதுவாக ரோக்சானாவின் தந்தையான ஆக்சியாதெசை இந்து குஷ் பகுதிகளின் ஆளுநராக அலெக்சாந்தர் நியமித்தார்.

கிமு 323-இல் அலெக்சாந்தர் பாபிலோனில் நோய்வாய்ப்பட்டு திடீரென்று இறந்தார்.[4] அலெக்சாந்தரின் இறப்பிறகுப் பின் ரோக்சானா நான்காம் அலெக்சாண்டரைப் பெற்றெடுத்து இறந்தாள். பின்னர் குழந்தை நான்காம் அலெக்சாந்தரை மாசிடோனியாவுக்கு எடுத்துச் சென்று அரண்மனையில் வளர்த்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Ahmed, S. Z. (2004). Chaghatai: the Fabulous Cities and People of the Silk Road. West Conshokoken: Infinity Publishing. பக். 61. 
  - Strachan, Edward; Bolton, Roy (2008). Russia and Europe in the Nineteenth Century. London: Sphinx Fine Art. பக். 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-907200-02-1. 
  - Ramirez-Faria, Carlos (2007). Concise Encyclopedia of World History. New Delhi: Atlantic Publishers & Distributors. பக். 450. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-269-0775-4. 
 2. 2.0 2.1 Christopoulos, Lucas (August 2012). Victor H. Mair. ed. "Hellenes and Romans in Ancient China (240 BC – 1398 AD)". Sino-Platonic Papers (Chinese Academy of Social Sciences, University of Pennsylvania Department of East Asian Languages and Civilizations) (230): 4. பன்னாட்டுத் தர தொடர் எண்:2157-9687. https://www.sinoptic.ch/textes/publications/2012/201208_Christopoulos.Lucas_Hellenes.and.Romans.in.Ancient.China-en.pdf. 
 3. "Roxana". Encyclopædia Britannica. (6 November 2019). 
  - Schmitt, Rüdiger (20 July 2002). "OXYARTES". Encyclopædia Iranica.  
  - Strabo 11.11.4. 
  - Rawlinson, Hugh G. (1912). Bactria, the History of a Forgotten Empire. [page needed]
 4. அலெக்சாண்டரின் மர்ம மரணம்: இந்தியா வந்தவரை முடக்கிய நரம்பியல் குறைபாடு

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ரோக்சானா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோக்சானா&oldid=3264983" இருந்து மீள்விக்கப்பட்டது