ரோகினி மோகன்
ரோகிணி மோகன் (Rohini Mohan) என்பவர் இந்தியப் பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். ரோகிணி 2019ஆம் ஆண்டில், சிறந்த பெண் ஊடகவியலாளர்களுக்கான சமேலி தேவி ஜெயின் விருதைப் பெற்றார்.[1] இவரது முதல் புத்தகம், தி சீசன்ஸ் ஆஃப் ட்ரபிள் (2014) 2015-ல் சக்தி பட் பரிசையும், டாட்டா இலக்கிய விருதினைப் (முதல் புத்தக விருது) பெற்றது.[2][3]
எழுத்துலகப் பணி
[தொகு]தி எகனாமிக் டைம்ஸ், த நியூயார்க் டைம்ஸ், அல் சஜீரா, தி கேரவேன், வைசு நியூஸ், டைம், கார்ப்பர்சு தெகல்கா, தி இந்து, அவுட்லுக், தி வயர், சுகுரோல் உள்ளிட்ட இந்திய மற்றும் பன்னாட்டு ஊடகத்தில் பணியாற்றியுள்ளார்.[4][5] இவர் தெற்காசியாவில் சுகாதாரம், மனித உரிமைகள், அரசியல் குறித்து எழுதி வருகின்றார்.[4]
மோகன் தனது எழுத்துலகப் பணிக்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவற்றில் குறிப்பிடத்தக்கன. சாமெலி தேவி ஜெயின் விருது, அசாமில் குடியுரிமைக்கெதிரான கருத்துகளை இவர் வெளியிட்டதற்காக இந்த விருது 2019-ல் வழங்கப்பட்டது. [1][6][3] கேரவான் பத்திரிக்கையில் 2012ஆம் ஆண்டு இலங்கைப் பிரச்சனைகள் குறித்து இவர் வெளியிட்ட செய்திக்காகப் பன்னாட்டுச் செஞ்சிலுவை மற்றும் இந்திய ஊடக நிறுவன விருதினையும் பெற்றார்.[7]
2014-ல், மோகன் இலங்கை மோதல் பற்றிய செய்தியினை தி சீசன்ஸ் ஆஃப் டிரபிள் (வெர்சோ புக்ஸ்) எனும் புத்தகமாக வெளியிட்டார்.[8] இந்த புத்தகம் ஆரோக்கியமான விமர்சனங்களைப் பெற்றது. திஷானி தோஷி தி இந்துவில் இது ஒரு "குறிப்பிடத்தக்கப் புத்தகம் - முழுமையான விளக்கத்தினைக் கொண்டுள்ளது" என்று தெரிவித்தார். எகனாமிஸ்ட் சிறந்த மதிப்பாய்வைச் செய்தது இதனை "பிரச்சனையினை முழுமையாக உள்வாங்கும் புத்தகம்" என்று விவரித்தது.[9][10][11] தேசிய பொது வானொலி தன் 2014-ன் சிறந்த வாசிப்புக்கான பட்டியலில் சேர்த்துள்ளது.[12] இந்த புத்தகம் இந்தியாவில் சக்தி பட் பரிசு மற்றும் டாட்டா இலக்கிய நேரலை முதல் புத்தக விருதினைப் பெற்றது.[2][3][13]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]மோகன் கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தார்.[14] மோகன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரசியல் இதழியலில் முதுகலைப் பட்டமும், ஆசிய இதழியல் கல்லூரியில் முதுகலை பட்டயப்படிப்பினையும் முடித்துள்ளார்.[1][3]
விருதுகள்
[தொகு]மோகன் தனது எழுத்துலகப் பணிக்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவற்றில் குறிப்பிடத்தக்கன. சாமெலி தேவி ஜெயின் விருது, அசாமில் குடியுரிமைக்கெதிரான கருத்துகளை இவர் வெளியிட்டதற்காக இந்த விருது 2019-ல் வழங்கப்பட்டது.[1][6][3] கேரவான் பத்திரிக்கையில் 2012ஆம் ஆண்டு இலங்கைப் பிரச்சனைகள் குறித்து இவர் வெளியிட்ட செய்திக்காகப் பன்னாட்டுச் செஞ்சிலுவை மற்றும் இந்திய ஊடக நிறுவன விருதினையும் பெற்றார்.[7]
ஆண்டு | விருது | குறிப்பு |
---|---|---|
2019 | சிறந்த பெண் ஊடகவியலாளர்களுக்கான சமேலி தேவி ஜெயின் விருது | [6] |
2015 | டாட்டா இலக்கிய நேரலை: தி சீசன் ஆப் டிரபுள் (The Seasons of Trouble) என்ற புத்தகத்திற்கு முதல் புத்தக விருது | [13] |
2014 | தி சீசன்ஸ் ஆப் டிரபிள் புத்தகத்திற்குச் சக்தி பட் பரிசு | [15] |
2014 | எழுத்தாளர்கள் சங்கம், இலண்டன் விருது | [4] |
2013 | சார்லஸ் வாலஸ் இந்திய நிறுவன எழுத்தாளர் நிதியுதவி | [4] |
2012 | பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இந்திய இதழியல் நிறுவனம் விருது | [7] |
புத்தகங்கள்
[தொகு]- தி சீசன்ஸ் ஆஃப் டிரபிள் (வெர்சோ புக்ஸ், 2014)
- மிசன் சைக்கிள் (பிரதம் புக்ஸ்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Journalists Rohini Mohan, Arfa Khanum Sherwani awarded Chameli Devi Jain award". The News Minute (in ஆங்கிலம்). 2020-03-13. பார்க்கப்பட்ட நாள் 2020-11-27.
- ↑ 2.0 2.1 "Focus On Independent Journalism As Rohini Mohan & Arfa Khanum Get 2019's Chameli Devi Jain Award". Women's Web: For Women Who Do (in ஆங்கிலம்). 2020-03-18. பார்க்கப்பட்ட நாள் 2020-11-27.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "The Wire's Arfa Khanum Sherwani, Rohini Mohan Awarded Chameli Devi Jain Award". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2020-11-27.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Sri Lanka: Beyond an Uncivil Season. With Leslie Jamison, Rohini Mohan, and more". Guernica (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-10-30. பார்க்கப்பட்ட நாள் 2020-11-27.
- ↑ "Rohini Mohan". The Rory Peck Trust (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-27.
- ↑ 6.0 6.1 6.2 Desk, NH Web (2020-03-14). "Chameli Devi Jain Award for Outstanding Woman Journalist awarded to Arfa Khanum Sherwani and Rohini Mohan". National Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-27.
- ↑ 7.0 7.1 7.2 "India: reporting beyond the frontline – ICRC". www.icrc.org (in அமெரிக்க ஆங்கிலம்). 2013-01-31. பார்க்கப்பட்ட நாள் 2020-11-27.
- ↑ "The Seasons of Trouble – Rohini Mohan". Verso Books. பார்க்கப்பட்ட நாள் 2020-11-27.
- ↑ Doshi, Tishani (2016-03-09). "Notes from teardrop island". https://www.thehindu.com/features/magazine/an-interview-with-rohini-mohan-author-of-the-seasons-of-trouble/article8331325.ece.
- ↑ "Giving voice to the voiceless". 2014-11-18. https://www.economist.com/prospero/2014/11/18/giving-voice-to-the-voiceless.
- ↑ Hammer, Joshua. "The Terrible War for Sri Lanka". https://www.nybooks.com/articles/2015/03/05/terrible-war-sri-lanka/.
- ↑ "NPR's Book Concierge – Our Guide To 2014's Great Reads". NPR. பார்க்கப்பட்ட நாள் 2020-11-27.
- ↑ 13.0 13.1 "Rohini Mohan's The Seasons of Trouble wins prestigious First Book Award". Versobooks.com. பார்க்கப்பட்ட நாள் 2020-11-27.
- ↑ cris (2016-10-22). "Documenting raw life". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-27.
- ↑ "Author, journalist Rohini Mohan wins Shakti Bhatt prize". https://economictimes.indiatimes.com/magazines/panache/author-journalist-rohini-mohan-wins-shakti-bhatt-prize/articleshow/49908557.cms.