உள்ளடக்கத்துக்குச் செல்

ரைன்ட் கணிதப் பப்பிரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரைன்ட் கணிதப் பாபிரஸ் தாள்
பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்
ரைன்ட் பாபிரஸ் தாளின் ஒரு பகுதி.
தேதிஎகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்
உருவான இடம்தீபை
மொழி(கள்)எகிப்தியம் (Hieratic)
அளவுநீளம்: 536 சென்டிமீட்டர்கள் (211 அங்)
அகலம்: 32 சென்டிமீட்டர்கள் (13 அங்)
பிறBM/Big no. AE 10058, Reg no. 1865,0218.3

ரைன்ட் கணிதப் பாபிரஸ் (Rhind Mathematical Papyrus) என்பது பண்டை எகிப்தியக் கணித உள்ளடக்கங்களுடன் கூடிய பாபிரஸ் தாள் ஆகும். தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் இருக்கும் இதைப் பாபிரஸ் பிரித்தானிய அருங்காட்சியகம் 10057 என்றும் குறிப்பிடுவது உண்டு. அலெக்சாண்டர் என்றி ரைன்ட் என்னும் இசுக்கொட்லாந்தைச் சேர்ந்த பழம்பொருள் சேகரிப்பாளரின் பெயரைத் தழுவியே இதற்கு இப் பெயர் ஏற்பட்டது. ரைன்ட் இதை 1858 ஆம் ஆண்டில் எகிப்தில் உள்ள லக்சோரில் விலைக்கு வாங்கினார். இது ராமேசியத்தில் அல்லது அதற்கு அருகில் சட்டத்துக்குப் புறம்பான அகழ்வாய்வில் கிடைத்ததாகக் கருதப்படுகிறது. இப்பப்பிரசு ஏறத்தாழ கிமு 1650 ஆம் ஆண்டுக் காலப் பகுதியைச் சேர்ந்தது. பெரும்பாலான பப்பிரசுகளைக் தன்னகத்தே கொண்டுள்ள பிரித்தானிய அருங்காட்சியகம் 1864 ஆம் ஆண்டில் இதையும், எகிப்தியக் கணிதத் சுருளேடுகளையும் ரைன்ட்டிடம் இருந்து வாங்கியது. இதன் ஒரு சிறிய துண்டுகள் நியூ யார்க்கில் உள்ள புரூக்லின் அருங்காட்சியகத்தில் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைன்ட்_கணிதப்_பப்பிரசு&oldid=3067353" இலிருந்து மீள்விக்கப்பட்டது