உள்ளடக்கத்துக்குச் செல்

ரூமா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரூமா தேவி
பிறப்பு16 நவம்பர் 1988 (1988-11-16) (அகவை 35)
இராவத்சர், பார்மேர் மாவட்டம், இராசத்தான், இந்தியா
கல்வி8வது வரை (இடையில் நின்றவர்)
பணிஅலங்காராப் பொருட்கள் வடிவமைப்பாளர்
வாழ்க்கைத்
துணை
திக்கு ராம் (தி. 2005)
விருதுகள்
வலைத்தளம்
www.rumadevi.com

ரூமா தேவி (Ruma Devi) ஓர் இந்திய சமூக சேவகரும், அலங்காராப் பொருட்கள் வடிவமைப்பாளரும் இராசத்தானின் பார்மரை சேர்ந்த பாரம்பரியக் கைத்தொழில் கலைஞருமாவார்.[1] இந்தியப் பெண்களுக்கான மிக உயர்ந்த குடிமகன் விருதான நாரி சக்தி விருது (2018) பெற்ற இவர் 30,000 க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்களுக்கு வாழ்வாதாரத்திற்கான பயிற்சி அளித்து அவர்களை ஒரு வலையமைப்பில் இணைத்தார்.[2].

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

ரூமா தேவி 1988 இல் பிறந்து, ராஜஸ்தானின் பார்மரில் உள்ள இராவத்சரில் வளர்ந்தார். 8 ஆம் வகுப்பு படிக்கும் போது பள்ளியை விட்டு வெளியேறினார். தனது குழந்தைப் பருவத்தில் தனது பாட்டியிடம் பூத்தையல் கற்றுக்கொண்டார். 17 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட இவருக்கு முதல் மகன் பிறந்து 48 மணி நேரத்திலேயே இறந்து போனது.[3]

தொழில்

[தொகு]

வருமானத்திற்காக சில வேலைகளைச் செய்ய ஆரம்பித்த இவர் 2006 ஆம் ஆண்டு தனது கிராமத்தைச் சேர்ந்த சுமார் 10 பெண்களை ஒருங்கிணைத்து சுய உதவிக் குழுவைத் தொடங்கி உபயோகித்த தையல் இயந்திரம் மூலம் துணி, நூல் பைகள் தயாரிப்பதற்கான பணியைத் தொடங்கினார்.[4]

பின்னர் பார்மரில் உள்ள கிராமின் விகாஸ் ஏவம் சேத்னா சன்ஸ்தான் என்ற அரசு சாரா அமைப்பில் 2008இல் உறுப்பினராக சேர்ந்து [5] 2010 இல் அதன் தலைவரானார் [6] தனது முதல் கண்காட்சியை 2010 இல் தில்லியில் நடத்தினார். பின்னர் 2016 இல் இராஜஸ்தான் பாரம்பரியத் திருவிழாவில் தனது முதல் கண்காட்சியை நடத்தினார். இப்போது இந்தியா முழுவதும் உள்ள பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் சிறுபான்மையினரின் கைவினைப்பொருளை ஊக்குவிப்பதற்காக உழைத்து வருகிறார்.[7]

விருதுகளும் கௌரவங்களும்

[தொகு]
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நாரி சக்தி விருதை (2018) வழங்கினார்.
  • பிரபலமான இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியான "கோன் பனேகா குரோர்பதி"யில்(20 செப்டம்பர் 2019) அமிதாப் பச்சன் மற்றும் சோனாக்சி சின்காவுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார்.[8][9]
  • அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ஆர்வர்டு பல்கலைக்கழகம் தனது 17வது அகில இந்திய மாநாட்டில் (15-16 பிப்ரவரி 2020) குழு உறுப்பினராக இவரை அழைத்தது.[10]
  • துபாயின் கலீஜ் டைம்ஸ் என்ற இதழில் இடம்பெற்றார்.[11] ]
  • மகளிர் தினத்தின் சிறப்பு நிகழ்ச்சியான 'இந்தியன் ஐடல்' (10 ஜூலை 2021) என்ற நிகழ்ச்சியில் இடம்பெற்றார்.[12]
  • '2019 ஆம் ஆண்டின் TFI வடிவமைப்பாளர்' என்ற பட்டத்தை வென்றார்.[13][14]
  • இந்தியா டுடே இதழின் அட்டைப் பக்கத்தில் 2018 இல் 'தி நியூ பாரத்' என்ற தலைப்பில் அதன் ஆண்டுப் பதிப்பில் இடம்பெற்றார்.[15]
  • பழங்குடியினர் இந்தியாவின் நல்லெண்ண தூதர் மற்றும் தலைமை வடிவமைப்பாளர்.[16]
  • இராசத்தானின் ராஜீவிகா என்ற அமைப்பின் மாநில நல்லெண்ண தூதர்.[17] [1]
  • ஜெய்ப்பூரில் உள்ள மகாத்மா ஜோதிராவ் புலே பல்கலைக்கழகத்தால் கலை மற்றும் துணித் துறையில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
  • கைவினைப் பொருட்களை மேம்படுத்துதலுக்காக இலங்கை அரசாங்கத்தால் சில்ப அபிமானி விருது:
  • நெதர்லாந்தின் "பெண்களின் சிறகுகள்" என்ற அமைப்பினால் கௌரவிக்கப்பட்டார்.

சான்றுகள்

[தொகு]
  1. "Ruma Devi | WEF | Women Economic Forum". WEF (in அமெரிக்க ஆங்கிலம்). 5 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-02-15.
  2. Raja, Vidya (2022-07-25). "Harvard Invited This School Dropout From Barmer for Empowering 30,000 Women". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-10.
  3. . 30 August 2019. 
  4. Khan, Shoeb (February 26, 2019). "Ruma Devi: From school dropout to changing fortunes of 22,000 women". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.
  5. "A Stitch in Time | The Social Warriors". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-10.
  6. "Rajasthan: Married off at 17, Ruma Devi is now guardian angel for over 20,000 women". ANI News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.
  7. "ruma devi Hindi News and Today's Trending Topics with ruma devi Latest Photos and Videos". Dainik Bhaskar (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.
  8. "Amitabh Bachchan bemused at Sonakshi Sinha over 'KBC' gaffe" (in en-IN). 2019-09-21. https://www.thehindu.com/entertainment/movies/big-bs-dig-at-sonakshi-sinha-over-kbc-gaffe/article29476411.ece. 
  9. "केबीसी 11: आर्थिक तंगी से हुई थी बच्चे की मौत, बाद में ऐसे बदल दी 22 हजार महिलाओं की किस्मत". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.
  10. "February 13, 2020". Office for Student Affairs (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-12. பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.
  11. [https://www.khaleejtimes.com/fashion/meet-ruma-devi-a-barmer-based-artisan-whose-craftsmanship-is-now-globally-recognised {Khaleej Times}
  12. "Indian Idol 12: अरुणिता कांजीलाल को नारी शक्ति पुरस्कार से सम्मानित रूमा देवी ने दिया खास तोहफा". 10 July 2021.
  13. Sheikh, Sajid (2019-07-18). "फैशन के सतरंगी रैंप पर बाड़मेर की रूमा का ब्लैक एंड व्हाइट कलेक्शन छाया, जीता डिजाइनर ऑफ दी ईयर अवाॅर्ड". Dainik Bhaskar (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.
  14. "Sustainable fashion forward". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.
  15. Parihar, Rohit (December 23, 2018). "A Stitch in Time | The Social Warriors". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.
  16. "आदि महोत्सव में छाया बाड़मेर की रूमा देवी का कलेक्शन, ट्राइब्स इंडिया ने बनाया 'गुड विल एंबेसडर'". Zee News Hindi. 2019-11-26. பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.
  17. https://www.thehindu.com/news/national/other-states/2400-crore-shot-in-the-arm-for-womens-shgs/article37981873.ece {The Hindu}
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூமா_தேவி&oldid=3944656" இலிருந்து மீள்விக்கப்பட்டது