சோனாக்சி சின்கா
சோனாக்சி சின்கா (Sonakshi Sinha) (பிறப்பு: 2 ஜூன் 1987) ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் சத்ருகன் சின்கா மற்றும் பூனம் சின்கா ஆகியோரின் மகளாவார். முதலில் ஆடை வடிவமைப்பாளராக இருந்த இவர் பின்னர் தபாங் எனும் திரைப்படத்தில் 2010 ஆம் ஆண்டில் நடித்தார். இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததால் அவருக்கு ப்லிம் ஃபேர் விருது உள்ளிட்ட சில விருதுகள் வழங்கப்பட்டன.[1]
இளமைப் பருவம்
[தொகு]பீகார் மாநிலத்தின் பாட்னா நகரில் பீகாரி சத்ரிய குடும்பத்தில் இவர் பிறந்தார். இவரது பெற்றோர்களும் திரைப்படத் துறையினைச் சார்ந்தவர்கள் ஆவார். பெற்றோரின் மூன்று குழந்தைகளில் இவர் கடைசிக் குழைந்தையாவார். இவரது தந்தையார் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர் ஆவார். ஆர்யா வித்யா மந்திர் பள்ளியில் தனது தொடக்கக் கல்வியையும் பின்னர் ஆடை வடிவமைப்பாளர் கல்வியை ப்ரேம்லீலா விதல்தாஸ் (Premlila Vithaldas Polytechnic) பட்டயக் கல்லூரியிலும் முடித்தார்.
திரைப்படத்துறை
[தொகு]2005 ஆம் ஆண்டில் மேரா தில் லேகே தேக்கோ (Mera Dil Leke Dekho) திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். பின்னர் 2010 ஆம் ஆண்டில் தபாங் திரைப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடிப்பதற்காக தனது எடையில் 30 கிலோகிராம்களை இழந்தார். அத்திரைப்படத்தில் நடித்ததன் மூலம் விருதினையும், பரவலாக கவனத்தினை அடைந்தார். 2011 ஆம் ஆண்டில் எந்தவித திரைபப்டத்திலும் நடிக்கவில்லை. பின்னர் 2012 ஆம் ஆண்டில் பிரபுதேவாவின் இயக்கத்தில் ரவுடி ரத்தோர் திரைப்படம் உள்ளிட்ட நான்கு திரைப்படங்களில் நடித்தார். ரவுடி ரத்தோர் திரைப்படம் வெளியான அன்றே 15 கோடி வசூலாகியது. இவர் நடித்த மூன்றாவது திரைப்படமான சன் ஆஃப் சர்தார் (Son of Sardar) அஸ்வினி திர் தயாரிப்பில் உருவானது. இதில் அஜய் தேவ்கானுடன் இணைந்து நடித்திருந்தார். இத்திரைப்படம் வெற்றிபெறாவிட்டாலும் விமர்சகர்களின் கவனத்தினை ஈர்ந்தது. மேலும் வணிகரீதியிலான வெற்றியையும் அடைந்தது. மேலும் ரைஸ் ஆஃப் த கார்டியன்ஸ் (Rise of the Guardians) திரைப்படத்தின் மொழிமாற்றுப் பணியில் இவர் குரல் கொடுத்திருந்தார். மேலும் இவர் மிலன் லூத்ரியா (Milan Luthria) இயக்கத்தில் அக்ஸய் குமாருடன் இணைந்து நடித்த ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் மும்பை தோபாரா! (Once Upon a Time in Mumbai Dobaara!) திரைப்படம் வணிக ரீதியில் தோல்வியடைந்தது. மற்றுமொரு திரைப்படமான புல்லட் ராஜா (Bullett Raja) திரைப்படமும் வணிக ரீதியில் தோல்வியடைந்தது. இத்திரைப்படத்தில் சைஃப் அலி கானுடன் இணைந்து நடித்திருந்தார். பின்னர் சாகித் கபூருடன் இணைந்து நடித்த பிரபுதேவா இயக்கிய ஆர்...ராஜ்குமார் (R... Rajkumar) திரைப்படம் ஓரளவிற்கு வணிரீதியிலான வெற்றியை ஈட்டியது. 2014 ஆம் ஆண்டில் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆங்கிலத் திரைப்படமான ரியோ 2 திரைப்படத்திற்கு குரல் ஒத்துழைப்பு வழங்கியிருந்தார். மேலும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய ஹாலிடே: எ சோல்ஜர் இஸ் நெவர் ஆஃப் டியூட்டி (Holiday: A Soldier Is Never Off Duty) எனும் திரைப்படத்தில் அக்ஷய் குமாருடன் நடித்திருந்தார்.
தமிழ் மொழியில்
[தொகு]இந்தி மொழித் திரைப்படங்களில் நடிகையான போதும் தமிழ்த் திரைப்படத்திலும் இவர் நடித்தார். 2014 ஆம் ஆண்டும் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படத்தில் இவர் நடித்தார். இது இவரது முதல் தமிழ் திரைப்படம் ஆகும்.
விலங்குகள் நல ஆர்வலர்
[தொகு]சோனாக்சி சின்கா விலங்குகள் நல ஆர்வல அமைப்பான பீட்டாவுடன் இணைந்து செயல்படுபவர் ஆவார். பீட்டா அமைப்பு தயாரித்த நாய்களையும் பூனைகளையும் தத்தெடுக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில் தோன்றினார்.
தொலைக்காட்சி நடிகை
[தொகு]இவர் பங்களித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:
வருடம் | நிகழ்ச்சி | தொலைக்காட்சி நிறுவனம் | வேடம் |
---|---|---|---|
2015 | இந்தியன் ஐடோல் | சோனி தொலைக்காட்சி | |
2015 | ஜூனியர் இந்தியன் ஐடோல் | ||
2017 | நச் பெய்லே(Nach baliye(Reality dance show) | ஸ்டார் ப்ளஸ் | |
2017 | ஓம் ஷாந்தி ஓம் | ஸ்டார் பாரத் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gaurav Dubey. "Salman Khan hosts an impromptu birthday bash for Sonakshi Sinha". Mid Day. http://www.mid-day.com/articles/salman-hosts-an-impromptu-birthday-bash-for-sonakshi-sinha/16260195. பார்த்த நாள்: 12 October 2017.