ரூத் பாட்ரிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரூத் பாட்ரிக்
Ruth Patrick 1976.JPG
ரூத் பாட்ரிக் 1976 இல்
பிறப்புநவம்பர் 26, 1907(1907-11-26)
டோப்கா, கன்சாஸ்
இறப்புசெப்டம்பர் 23, 2013(2013-09-23) (அகவை 105)
லஃபேயெட் ஹில், பென்சில்வேனியா
தேசியம்அமெரிக்கர்
துறைதாவரவியல் and நன்னீரியலாளர்
பணியிடங்கள்இயற்கை அறிவியல் அகாடமி
கல்வி கற்ற இடங்கள்வர்ஜீனியா பல்கலைக்கழகம்
விருதுகள்தேசிய அறிவியல் பதக்கம்
பிராங்க்ளின் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் விருது (1970)

ரூத் மிர்ட்லி பாட்ரிக் (Ruth Myrtle Patrick,நவம்பர் 26, 1907 - செப்டம்பர் 23, 2013) ஒரு அமெரிக்கத் தாவரவியலாளர் மற்றும் நன்னீரியலாளரும் நன்னீர் சூழலியல் மண்டல ஆய்வாளரும் ஆவார். குறிப்பாக நுண்பாசிகளின் சூழியலமைப்புக்கள் ஆகியவை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.இதற்கான ஆய்வு வசதிகள் பலவற்றை நிறுவினார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ரூத் பாட்ரிக் ஒரு வங்கியாளர் மற்றும் வழக்கறிஞரான பிராங்க் பேட்ரிக் என்பவரின் மகளாவார். பிராங்க் நியு யார்க்கின் இத்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்திலிருந்து தாவரவியல் துறையில் ஒரு பட்டம் பெற்றவர். மேலும் ஒரு ஆர்வமுள்ள விஞ்ஞானியும் ஆவார். அவர் பெரும்பாலான நேரங்ங்களில் ரூத் மற்றும் அவளுடைய சகோதரியை அழைத்துக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் நீரோடைகளில் கிடைக்கும் நுண்பாசிகளின் மாதிரிகள் சேகரித்து வந்தார். இது நுண்பாசிகளின் மீதும் சுற்றுச்சூழலிலும் வாழ்நாள் முழுவதும் ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது. ரூத் பாட்ரிக் இது குறித்து கீழ்க்கண்டவாறு நினைவுபடுத்துகிறார். "எல்லாவற்றையும் சேகரித்தேன்: புழுக்கள், காளான்கள், செடிகள், பாறைகள். என அனைத்தையும் சேகரித்தேன். எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது , என் தந்தை நூலகத்தில் தனது பெரிய மேசை யின் மேற்புறத்தை இழுத்து , அதிலிருந்த நுண்ணோக்கியை இழுத்து மேசையில் வைத்தபொழுது எனக்கு கிடைத்த உணர்வை நான் நினைவில் வைத்துக் கொள்கிறேன் ... இது அற்புதமானது, முழு உலகத்தையும் ஒரு சாளரத்தின் வழியே பார்க்கும். உணர்வு அது"[1] ரூத், மிசௌரியில், கன்சாஸ் நகரில் உள்ள சன்செட் மலை பள்ளியில் பயின்றார். 1925 இல் பட்டம் பெற்றார். பாட்ரிக் தென் கரோலினாவின் , ஹார்ட்ஸ்வில்லில் இருந்த பெண்கள் கல்லூரியில் இணைய விரும்பினார் ஆனால் அவரது தாயார் கோக்கர் கல்லூரியில் இணையச் சொல்லி வலியுறுத்தினார், ஆனால் கோக்கர் கல்லூரியில் திருப்திகரமான கல்வியை வழங்குவதில்லை என்ற கோபத்தில், அவளுடைய தந்தை கோடைக்காலப் படிப்புகளுக்கு ஏற்பாடு செய்தார். அவர் 1929 இல் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், 1931 இல் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பின் 1934 இல் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rachel, Swaby (2015). Headstrong : 52 women who changed science-- and the world (First ). New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780553446791. இணையக் கணினி நூலக மையம்:886483944. 
  2. Dicke, William (September 23, 2013), "Ruth Patrick, 105, a Pioneer in Science And Pollution Control Efforts, Is Dead", த நியூயார்க் டைம்ஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூத்_பாட்ரிக்&oldid=2907325" இருந்து மீள்விக்கப்பட்டது