ரூஃபிகலால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரூஃபிகலால்
Skeletal formula of rufigallol
Ball-and-stick model of rufigallol
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2,3,5,6,7-Hexahydroxyanthracene-9,10-dione
வேறு பெயர்கள்
Rufigallic acid; 1,2,3,5,6,7-Hexahydroxy-9,10-anthraquinone; 1,2,3,5,6,7-Hexahydroxyanthracene-9,10-dione
இனங்காட்டிகள்
82-12-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 65737
SMILES
  • C1=C2C(=C(C(=C1O)O)O)C(=O)C3=CC(=C(C(=C3C2=O)O)O)O
பண்புகள்
C14H8O8
வாய்ப்பாட்டு எடை 304.21 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

ரூஃவிகாலோல் (ரூஃபிகலால், Rufigallol) என்பது ஒரு கரிமவேதிப் பொருள். இது 1,2,3,5,6,7-எக்சாஐதராக்ஃசி-9,10-ஆந்த்ராகுயினோன் ( 1,2,3,5,6,7-hexahydroxy-9,10-anthraquinone) துல்லியமாய் குறிப்பிடப்பெறும் வேதிப்பொருள். இதன் வேதியியல் வாய்பாடு C
14
O
8
H
8
; இதனை ஆந்த்ராகுயினோனின் ஆறு ஐதரச அணுக்களை, ஐதராக்சைல் ( OH) வேதிக்குழுமத்தால் மாற்றியமைத்தால் உருவானதாகக் கொள்ளலாம்.

இச் சேர்மம் டையாக்ஃசேன் (dioxabe) என்னும் நிறமிலி நீர்மத்தில் கரைந்து, பின் இதிலிருந்து சிவப்பு ஊசிபோன்ற படிகவடிவில் உருவாகும். இது 365 °செ இல் உருகா ஆவியாகும் (sublime) (பசுபம் ஆகும்)[1]. காலிக் காடியை அடர்ந்த கந்தக்காடியுடன் வினையுறச்செய்து பின் சோடியம் ஐதராக்சைடு -ஓடு வினையுறச் செய்தால் இப்பொருள் கிட்டும்.[1]

ரூஃவிகாலோல் மலேரியா நோயூட்டி உயிரி பிளாசுமோடியம் ஃவால்சிப்பாரம் (Plasmodium falciparum) என்பதற்கு நச்சுப்பொருளாய் இயங்கும். இது மலேரியா எதிர்ப்பு மருந்தாகிய எக்ஃசிஃவோன் (exifone) என்னும் மருத்தோடு ஒத்தியங்கும் தன்மையும் கொண்டது, இம்மருந்து ரூஃவிகாலோலுடன் ஒத்த கட்டமைப்பு கொண்டது.[2]

பெரிலியம், அலுமினியம், தோரியம், சிர்க்கோனியம், ஆஃவினியம் ஆகியவற்றோடு ரூஃவிகாலோல் சேர்ந்து அடர்சிவப்பு நிறம் கொண்ட கூட்டுப்பொருள்கள் உண்டாக்குகின்றன. இந்த வேதிவினையைக் கொண்டு மிகச்சிறிதளவு பெரிலியம் இருந்தால் ஒளிமாலையளவியால் கண்டுபிடிக்கப்படுகின்றது.[1]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. 1.0 1.1 1.2 M. A. Azim and A. A. Ayaz (1969), Spectrophotometric determination of beryllium. Microchimica Acta Volume 57, Number 1, pages 153-159 எஆசு:10.1007/BF01216677
  2. R. W. WINTER, KENNETH A. CORNELL, LINDA L. JOHNSON, MARINA IGNATUSHCHENKO,DAVID J. HINRICHS and MICHAEL K. RISCOE (1996), Potentiation of the Antimalarial Agent Rufigallol. ANTIMICROBIAL AGENTS AND CHEMOTHERAPY, Vol. 40, No. 6, pages 1408–1411. Online version பரணிடப்பட்டது 2011-06-11 at the வந்தவழி இயந்திரம் accessed on 2010-02-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூஃபிகலால்&oldid=3410386" இலிருந்து மீள்விக்கப்பட்டது