ரூஃகூல்லா மூசவி கொமெய்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆயதுல்லாஃகு
ரூஃகூல்லா மூசவி கொமெய்னி
Portrait of Ruhollah Khomeini By Mohammad Sayyad.jpg
1வது ஈரானிய (வலியெ பகீஃகு) ஆன்மீக உச்சத் தலைவர்
பதவியில்
டிசம்பர் 3 1979 – ஜூன் 3, 1989
பின்வந்தவர் அலி காமெனெயி
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 24, 1902(1902-09-24)
கொமெய்ன், மர்க்காசி மாகாணம், பாரசீகப் பேரரசு
இறப்பு சூன் 4, 1989(1989-06-04) (அகவை 86)
தெஃகரான், ஈரான்
வாழ்க்கை துணைவர்(கள்) பதூல் சகஃபி கொமெய்னி
பிள்ளைகள் அகமத், முசுத்தஃபா, மேலும் சிலர்;

பேரக்குழந்தை: அசன், உசைன், அலி, சஃகறா

சமயம் இசீயா இசுலாம்

ஆயதுல்லாஃகு ரூஃகூல்லா மூசவி கொமெய்னி (பாரசீக மொழி: روح الله موسوی خمینی, செப்டம்பர் 24, 1902[1][2]-ஜூன் 3, 1989) ஓர் ஈரானிய அரசியல்வாதியும் அறிஞரும் இசீயா இசுலாமில் ஒரு முக்கிய நபரும் ஆவார். 1979இல் இவரால் துவங்கப்பட்ட ஈரானியப் புரட்சியில் ஈரானிய முடியாட்சி முடிவுக்கு வந்தது. புரட்சிக்கு பிறகு இறப்பு வரை இவர் ஈரானின் (வலியெ பகீஃகு) ஆன்மீக உச்சத் தலைவராக இருந்தார். 1979 ஆண்டுநபராக அமெரிக்க டைம் செய்தி இதழால் [3] தெரிந்தெடுக்கப்பட்ட கொமெய்னி, இசுலாமின் மீட்கைக்கு வழிகோலியதாக இசியா மற்றும் சுன்னி மக்களால் ஒருசேர[4] மிகவும் விரும்பப்பட்ட கவர்ச்சி வாய்ந்த தலைவர் ஆவார்[5].

மேற்கோள்கள்[தொகு]

  1. DeFronzo 2007, ப. 286. "24 செப்டம்பர், 1902பிறந்த..."
  2. Karsh 2007, ப. 220. ஓர் பக்திமிக்க சிற்றூர் குடும்பத்தில் 24 செப்டம்பர், 1902, பிறந்த கொமெய்னி..."
  3. TIME. "TIME Person of the Year 1979: Ayatullah Khomeini." 7 January 1980. Accessed 22 November 2008 at http://www.time.com/time/subscriber/personoftheyear/archive/stories/1979.html
  4. [1]
  5. Arjomand, S.A. "Khumayni." Encyclopaedia of Islam, Second Edition. Brill, 2008.