உள்ளடக்கத்துக்குச் செல்

ரா. ரா. முனுசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரா. ரா. முனுசாமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1967–1971
தொகுதிமேல்மலையனூர்
பதவியில்
1971–1976
பின்னவர்பொ. தங்கவேலு கவுண்டர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1933-04-04)4 ஏப்ரல் 1933
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்விவசாயி

ரா. ரா. முனுசாமி (R. R. Munusami)(பிறப்பு 04 ஏப்ரல், 1933) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஈயக்குணம் பகுதியினைச் சார்ந்தவர். இவர் ஈயக்குணம் ஊராட்சிப் பள்ளியிலும் தேசூர் கழக உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வியினைப் பயின்றுள்ளார். முனுசாமி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1967[1] மற்றும் 1971ஆம்[2] ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக மேல்மலையனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[3]

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1967 மேல்மலையனூர் திமுக 33115 50.68
1971 மேல்மலையனூர் திமுக 31166 53.54[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  3. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. Madras: Tamil Nadu Legislative Assembly Department. 1971. p. 452.
  4. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 218-219.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரா._ரா._முனுசாமி&oldid=4325459" இலிருந்து மீள்விக்கப்பட்டது