ராபர்ட் வெஞ்சூரி
இராபர்ட் வெஞ்சூரி Robert Venturi | |
---|---|
2008 இல் வெஞ்சூரி | |
தனிப்பட்ட விவரங்கள் | |
நாட்டினம் | அமெரிக்கர் |
பிறப்பு | Robert Charles Venturi Jr. சூன் 25, 1925 பிலடெல்பியா, அமெரிக்கா |
இறப்பு | செப்டம்பர் 18, 2018 பிலடெல்பியா, அமெரிக்கா | (அகவை 93)
பாடசாலை | பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் |
பணி | |
விருதுகள் | பிறிட்ஸ்கர் பரிசு (1991) வின்சென்ட் இசுக்கலி பரிசு (2002) |
இராபர்ட் வெஞ்சூரி (Robert Venturi, சூன் 25, 1925 – செப்டம்பர் 18, 2018) பிலடெல்பியாவைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். இவர் ஒரு சிறந்த கட்டிடக்கலைஞராக மட்டுமன்றி, திறமையான எழுத்தாளராகவும், ஓவியராகவும், ஆசிரியராகவும், ஒரு தத்துவஞானியாகவும்கூட விளங்கினார். ஒரு கட்டிடக்கலைஞன் என்றவகையில், பழக்கங்களினால் வழிநடத்தப்படுவதிலும், உணர்வுபூர்வமான கடந்தகால அனுபவங்களினால் வழி நடத்தப்படுவதையே விரும்புவதாகக் குறிப்பிட்டார். கட்டிடக்கலையில் சிக்கல்தன்மையையும், முரண்பாடுகளையும் அவர் விரும்பினார். நவீன கட்டிடக்கலை அளவுக்கதிகமாக எளிமைப்படுத்தப்பட்டுவிட்டதாகக் குறைப்பட்ட அவர், பிரபல கட்டிடக்கலைஞரான மீஸ் வான் டெர் ரோவினுடைய "குறைவே நிறைவு" ( Less is more.) என்ற கூற்றுக்குப் பதிலாகக் "குறைவு சுவாரசியமற்றது" (Less is Bore) என்று கூறினர்.[1][2][3]
இவர் ஈரோ சாரினென் மற்றும் லூயிஸ் கான் ஆகிய பிரபல கட்டிடக்கலைஞர்களின் கீழ் பணிபுரிந்தார். பின்னர் ஜோன் ராவுஸ்ச் என்பவருடன் சேர்ந்து தனது தனியான நிறுவனத்தைத் தொடங்கினார். வெஞ்சூரியின் மனைவி டெனிசே ஸ்கொட் பிரவுனும் ஒரு கட்டிடக்கலைஞராவார். இவரும் 1969 ஆம் ஆண்டில் வெஞ்சூரியின் நிறுவனத்தில் பங்காளராக இணைந்தார். 1991 ஆம் ஆண்டுக்கான பிறிட்ஸ்கர் பரிசை வெஞ்சூரிக்கு வழங்கப்பட்டது. இவர் ஒரு பின்நவீனத்துவம் எனக் கருதப்படினும், இவரை இவ்வாறு வகைப்படுத்த முடியாது என்று சிலர் கருதுகிறார்கள். தனது தாயாருக்காக பிலடெல்பியாவில் இவர் வடிவமைத்த வீடு மூலம் கட்டிடக்கலைஞர் மத்தியில் இவரது திறமை முதலில் வெளிப்பட்டது.
இவரது நிறுவனத்தின் முக்கிய வேலைகள்:
- கில்ட் ஹவுஸ், பிலடெல்பியா, பென்சில்வேனியா
- புத்தகம்: Learning from Las Vegas
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pogrebin, Robin (14 June 2013). "No Pritzker Prize for Denise Scott Brown". The New York Times. http://artsbeat.blogs.nytimes.com/2013/06/14/no-pritzker-prize-for-denise-scott-brown/?_r=0.
- ↑ Catriona Davies (29 May 2013). "Denise Scott Brown: Architecture favors 'lone male genius' over women". CNN. http://edition.cnn.com/2013/05/01/business/denise-scott-brown-pritzker-prize.
- ↑ Goldberger, Paul (14 April 1991). "ARCHITECTURE VIEW; Robert Venturi, Gentle Subverter of Modernism". The New York Times. https://query.nytimes.com/gst/fullpage.html?res=9D0CEEDD1338F937A25757C0A967958260.
வெளி இணைப்புகள்
[தொகு]- Venturi, Scott Brown and Associates, Inc. firm web site
- Online profile of Venturi, Scott Brown and Associates, Inc.
- Stories of Houses: The Vanna Venturi House in Philadelphia, by Robert Venturi
- Design Strategies of Robert Venturi and Denise Scott Brown பரணிடப்பட்டது 2009-06-17 at the வந்தவழி இயந்திரம்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ராபர்ட் வெஞ்சூரி
- ராபர்ட் வெஞ்சூரி இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)
- Robert Venturi interview