ராணி நாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராணி நாரா (Ranee Narah பிறப்பு: அக்டோபர் 31, 1965) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் அசாம் மாநிலங்களவை உறுப்பினர் ஆவார்.இவர் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக உள்ளார்.

பின்னணி[தொகு]

இவர் குவகாத்தி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் ஆவார். [1] இவர் அசாம் மாநில அணியின் தலைவராக தொழில்முறை துடுப்படடம் விளையாடினார். [2] [3] இவர் பாரத் நாராவை மணந்தார். [4]

2006 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைக்கும் வரை நாரா இந்திய மகளிர்துடுப்பாட்ட சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். [5] இவர் பி.சி.சி.ஐ மகளிர் குழுவில் உறுப்பினராக இருந்தார். நாரா, அசாம் கால்பந்து சங்கம் மற்றும் அசாம் துடுப்பாட்ட சங்கத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். [6] [7]

அரசியல் வாழ்க்கை[தொகு]

நாரா, தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசுடன் 1995 இல் தொடங்கினார். இவர் பொதுச் செயலாளர், துணைத் தலைவர் மற்றும் அசாம் பிரதேச இளைஞர் காங்கிரசின் தலைவர் ஆகிய பதவிகளை அடுத்தடுத்து வகித்தார்.[8] 1998 ல் அசாமில் உள்ள லக்கிம்பூர் தொகுதியின் மக்களவை பிரதிநிதியாக நாரா இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] பின்னர் இவர் மக்களவை உறுப்பினராக மூன்று முறை பணியாற்றியுள்ளார். [9] நாரா 2003 இல் இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [10] இவர் 2009 இல் மக்களவையில் இந்திய தேசிய காங்கிரஸின் துணை தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டார். [11]

நாரா 2012 ஆம் ஆண்டில் இந்திய மத்திய அமைச்சரவையில் பழங்குடியினர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டார். [12]

21 மார்ச் 2016 அன்று, நாரா 85 ல் 47 வாக்குகளைப் பெற்று (குறைந்தபட்ச தேவை 38) மாநிலங்களவைக்குத் தேர்வானார்.[13]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Smt. Ranee Narah". Government of India. பார்க்கப்பட்ட நாள் 28 October 2012.
  2. 2.0 2.1 Rajamani 2000.
  3. "Ex-cricketer clean bowls dissidence". Hindustan Times. 26 March 2009. Archived from the original on 20 July 2012. பார்க்கப்பட்ட நாள் 28 October 2012.
  4. "Hereditary politics: Political families of India". இந்தியா டுடே. 12 April 2004. Archived from the original on 27 October 2012. பார்க்கப்பட்ட நாள் 28 October 2012.
  5. "WCAI to be disbanded shortly". ESPN Cricinfo. 13 November 2006. Archived from the original on 20 July 2012. பார்க்கப்பட்ட நாள் 28 October 2012.
  6. "Women footballers honoured". The Assam Tribune. 10 November 2008. Archived from the original on 28 October 2012. பார்க்கப்பட்ட நாள் 28 October 2012.
  7. "Dynamo Triumph". Yahoo. 6 August 2012. Archived from the original on 28 October 2012. பார்க்கப்பட்ட நாள் 28 October 2012.
  8. "Smt. Ranee Narah". Government of India. பார்க்கப்பட்ட நாள் 27 October 2012.
  9. "Smt. Ranee Narah". Government of India. பார்க்கப்பட்ட நாள் 27 October 2012.
  10. "Tribune News Service". The Tribune India. 17 July 2003. Archived from the original on 28 October 2012. பார்க்கப்பட்ட நாள் 28 October 2012.
  11. "Ranee deputy whip of LS". The Assam Tribune. 25 November 2009. Archived from the original on 27 October 2012. பார்க்கப்பட்ட நாள் 28 October 2012.
  12. "Sportsperson-turned-politician Narah gets ministerial berth". Zee News. 28 October 2012. Archived from the original on 29 October 2012. பார்க்கப்பட்ட நாள் 29 October 2012.
  13. http://indianexpress.com/article/india/india-news-india/assem-ahead-of-assembly-polls-congress-wins-both-rajya-sabha-seats-in-cross-voting/

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணி_நாரா&oldid=3316916" இலிருந்து மீள்விக்கப்பட்டது