ராஜஸ்ரீ வாரியர்
ராஜஸ்ரீ வாரியர் | |
---|---|
பிறப்பு | 31 சனவரி 1974 (அகவை 49) திருவனந்தபுரம் |
ராஜஸ்ரீ வாரியர் ஒரு பாரத நாட்டிய நடனக் கலைஞர் [1], கல்வியாளர் மற்றும் ஊடக நபர் ஆவார். இவர் மலையாள மொழி எழுத்தாளர் மற்றும் பாடகராக உள்ளார். இவர், இசைத் துறையில் மேற்கொள்ளப்பட்ட வர்ணங்களின் இரட்டை படிவங்கள் (தானா வர்ணங்கள் மற்றும் பாத வர்ணங்கள்) குறித்த ஆராய்சிக்காக, முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பரத நாட்டியம், கர்நாடக இசை மற்றும் சோதனை திரையரங்கு போன்றவற்றில் அதிக முக்கியத்துவம் செலுத்தும் 'உத்தரிகா - கலைகளின் பயிற்சி மையம்' என்ற அமைப்பின் நிறுவனர் ஆவார். மேலும், இவர் ஏப்ரல் 2016 முதல் கேரள சங்கீத நாடக அகாதமியின் நிர்வாக உறுப்பினராக உள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]
ராஜஸ்ரீ வாரியர் இந்தியாவின் கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தார். இவர், வி. மைதிலி மற்றும் ஜெயந்தி சுப்பிரமணியம் ஆகியோரிடம் பரதநாட்டியம் கற்றுக்கொண்டார். இவர் முல்லமுடு ஹரிஹர ஐயர், பெரும்பாவூர் ஜி. ரவீந்திரநாத், பராசல பொன்னம்மாள் மற்றும் பி சசிகுமார் ஆகியோரிடம் கர்நாடக இசை பயிற்சி பெற்றார். ராஜஸ்ரீ வாரியர் பத்திரிகைத் துறையில் முதுகலை பட்டயப்படிப்பை பெற்றுள்ளார். [2]
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
ராஜஸ்ரீ அனில் எஸ் நாயர் என்பவரை மணந்தார். இவருக்கு, லாவண்யா என்கிற ஒரு மகள் உள்ளார்.

தொழில்[தொகு]
பரதநாட்டிய நடனம்[தொகு]
ராஜஸ்ரீ, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல முக்கிய இடங்களில் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இவரது நடன தயாரிப்புகள் மூலமாக, இவருக்கு நடனத்தில் இருக்கும் ஆழமான அறிவு மற்றும் படைப்பு திறனைக் காண முடிகிறது. [3]

ஊடகம்[தொகு]
பிரபலமான மலையாள தொலைக்காட்சி ஏசியாநெட்டில் காலை நிகழ்ச்சியான 'சுப்ரபாதம்' என்னும் நிகழ்ச்சியை நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து தொகுத்து வழங்கினார். இதனால், கேரளாவில், வாரியர் என்பது வீட்டுப் பெயரானது. இந்த நிகழ்ச்சி மூலமாக கேரளாவில் மிகவும் பிரபலமடைந்தார். மேலும், இவர், தூர்தர்ஷன் கேரளா, அமிர்தா டிவி மற்றும் ஏசியானெட் ஆகியவற்றில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து, திரைக்கதை எழுதி தயாரித்துள்ளார். [4]
வெளியீடுகள்[தொகு]
வாரியர், இரண்டு நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய 'நர்த்தகி' என்னும் நூலை 2013 இல் டி.சி. புக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. 'நிருத்தகலா' 2011 இல் சிந்தா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. [5]
குறிப்புகள்[தொகு]
- ↑ https://www.thehindu.com/society/multifaceted-artiste-rajashree-warrier-talks-about-her-creative-space/article19888753.ece
- ↑ https://www.deccanchronicle.com/entertainment/mollywood/310318/no-yakshi-performance-rajashree-warrier.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2019-03-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190323124216/https://www.mathrubhumi.com/topics/Person/Rajashree%2520Warrier.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2019-02-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190203201917/http://keralaliteraturefestival.com/speakers_more.aspx?id=NDIx.
- ↑ https://www.manoramaonline.com/women/interviews/2019/02/03/rajasree-warrier-talks-about-her-life-and-career.html