உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜகோபாலன் வாசுதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜகோபாலன் வாசுதேவன்
பிறப்பு
தமிழ்நாடு
வதிவுஇந்தியா
தேசியம்இந்தியன்
துறைவேதியியல்
நிறுவனம்தியாகராஜர் பொறியியல் கல்லூரி
Alma materசென்னைப் பல்கலைக்கழகம்
அறியப்பட்டதுகழிவு மேலாண்மை
நெகிழி சாலை
பரிசுகள்பத்மஸ்ரீ

ராஜகோபாலன் வாசுதேவன், (Rajagopalan Vasudevan) முக்கியமாக மேலாண்மை குறித்த அறிவியல் ஆராய்ச்சியாளர் ஆவர். இவர் தற்பொழுது மதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.[1] சிறந்த, அதிக நீடித்த மற்றும் மிகவும் செலவு குறைந்த சாலைகளை உருவாக்க நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி மூலம் பயன்படுத்தும் புதுமையான முறையை இவர் உருவாக்கினார். நெகிழிக் கழிவுகளைத் துண்டாக்குதல், பிற்றுமின் கலத்தல் மற்றும் சாலை கட்டுமானத்தில் பாலிமரைஸ் செய்யப்பட்ட கலவையைப் பயன்படுத்துதல் போன்ற யோசனைகளை இவர் முன்னெடுத்தார். இந்த முறையில் சாலைகளை மிக விரைவாக உருவாக்குவதோடு ஆபத்தான நெகிழிக் கழிவுகளிலிருந்து சுற்றுச்சூழலையும் நாம் காப்பாற்றலாம். ஏப்ரல் 15, 2008 அன்று மகாத்மா பள்ளிகளையும் பார்வையிட்டார். பலத்த மழையால் ஏற்படும் சேதங்களுக்கு எதிராக இந்த நெகிழிச் சாலைகள் பாதுகாப்பாக உள்ளன.[2] [3] [4] [5] இவரது சாலை கட்டுமான முறை இப்போது கிராமப்புற இந்தியாவில் சாலைகள் கட்டமைப்பில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.[6] இவருக்கு 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த பொதுவாழ்வில் சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது . [7]

தொழில்

[தொகு]

1965 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முறையே இளநிலை அறிவியல் மற்றும் எம்.எஸ்சி பட்டம் பெற்றார். 1974ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் 1975ல், தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார், 1998ல் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். [8]

ஆராய்ச்சி

[தொகு]

இவரது ஆராய்ச்சி முக்கியமாகக் கழிவு மேலாண்மை, குறிப்பாகச் சாலை மற்றும் கட்டிடக் கட்டுமானங்களுக்கு நெகிழிக் கழிவுகளைப் பயன்படுத்துவது குறித்ததாகும்.[9][10][11]

மேற்கோள்கள்

[தொகு]
 1. Akash Kapur. "India's 'Plastic Man' Chemist Turns Litter Into Paved Roads – Businessweek". Businessweek.com. https://www.bloomberg.com/bw/articles/2014-07-10/indias-plastic-man-chemist-turns-litter-into-paved-roads. 
 2. "Solution to plastic pollution". The Hindu. 10 March 2011. பார்க்கப்பட்ட நாள் 29 September 2015.
 3. "India's 'Plastic Man' and His Incredible Innovation". Logical Indian. 17 July 2015. பார்க்கப்பட்ட நாள் 29 September 2015.
 4. "Why India forgot its 'plastic man' and his incredible innovation?". Planet Custodian. 14 July 2015. பார்க்கப்பட்ட நாள் 29 September 2015.
 5. "Chennai professor R Vasudevan invents plastic monoblock technology?". The Economic Times. 3 January 2012. பார்க்கப்பட்ட நாள் 29 September 2015.
 6. "Plastic Waste in Rural Roads Construction". PMGSY. Archived from the original on 26 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 7. "6 Padma awardees are pride and joy of Tamil Nadu". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 26 January 2018. பார்க்கப்பட்ட நாள் 26 January 2018.
 8. "R Vasudevan". Thiagarajar College of Engineering. பார்க்கப்பட்ட நாள் 29 September 2015.
 9. Subramanian, Sribala (30 June 2016). "Plastic roads: India's radical plan to bury its garbage beneath the streets". the Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-21.
 10. Thiagarajan, Kamala (9 July 2018). "The man who paves India's roads with old plastic". the Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-21.
 11. Annamalai, S. (2012-02-04). "'Plastone' blocks have many advantages" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-propertyplus/plastone-blocks-have-many-advantages/article2859036.ece. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜகோபாலன்_வாசுதேவன்&oldid=3569716" இலிருந்து மீள்விக்கப்பட்டது