உள்ளடக்கத்துக்குச் செல்

ரவிதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரவிதாசர், ரவிதாசன் (கதைமாந்தர்) ஆகியவை மற்றவர்களை குறிக்கின்றன.

ரவிதாசன், ஆதித்த கரிகாலனைக் கொன்ற துரோகி என்று உடையார்குடிக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள்[தொகு]

ரவிதாசன், சோமன், பரமேஸ்வரன் ஆகிய மூவரும் சகோதரர்கள். இவர்களே வீரபாண்டியனை ஆதித்த கரிகாலன் கொன்றமைக்காக பழிவாங்கும் பொருட்டு திட்டமிட்டு ஆதித்த கரிகாலனைக் கொன்றார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் மூவருடன் இவர்களின் சொந்தங்கள் அனைவரையும் நாட்டினை விட்டு இராஜராஜ சோழன் வெளியேற்றியதாக கல்வெட்டில் குறிப்புள்ளது. [1]

கொலைக்கான தண்டனை[தொகு]

ஆதித்த கரிகானைக் கொன்றவர்களை உத்தம சோழன் காலத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை. இராஜராஜன் அரசுரிமையை ஏற்ற பின்பு கொலைகாரர்களின் சொத்துகளும், உறவினர்களின் சொத்துகளும் விற்பனை செய்யப்பட்டு, கருவூலத்தில் சேர்க்கப்பட்டன. கொலை செய்தவர்களை இராஜராஜன் நாடுகடத்தினான் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

நூல்கள்[தொகு]

ரவிதாசனை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

சோழர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவிதாசன்&oldid=3598152" இலிருந்து மீள்விக்கப்பட்டது