யூரியா பாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூரியா பாசுபேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பாசுபாரிக்கு அமிலம்;யூரியா
இனங்காட்டிகள்
4401-74-5
4861-19-2
ChemSpider 19748
EC number 225-464-3
InChI
  • InChI=1S/CH4N2O.H3O4P/c2-1(3)4;1-5(2,3)4/h(H4,2,3,4);(H3,1,2,3,4)
    Key: DZHMRSPXDUUJER-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 20994
SMILES
  • C(=O)(N)N.OP(=O)(O)O
UNII TJR09610O7
பண்புகள்
CH7N2O5P
வாய்ப்பாட்டு எடை 158.05 g·mol−1
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H314
P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P405, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

யூரியா பாசுபேட்டு (Urea phosphate) என்பது CH7N2O5P என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். யூரியாவும் பாசுபாரிக் அமிலமும் 1:1 என்ற விகிதத்தில் சேர்ந்து யூரியா பாசுபேட்டு உருவாகிறது. ஒர் உரமாக இது பயன்படுகிறது. 17-44-0 என்ற நைட்ரசன் பாசுபரசு பொட்டாசியம் வாய்ப்பாட்டைக் கொண்டிருக்கும் இது தண்ணீரில் கரையும். வலுவான அமிலக் கரைசலை உருவாக்கும்.

யூரியா பாசுபேட்டு உர விற்பனையாளர் பைகளில் கிடைக்கிறது. இவை பையகப்படுத்துகையில் யூபி என்ற தனிமுத்திரை இடப்பட்டு விற்கப்படுகின்றன. 15-5-15 மற்றும் 13-2-20 போன்ற நீரில் கரையக்கூடிய வாய்பாடுகளை உருவாக்க கால்சியம் நைட்ரேட்டு, மக்னீசியம் நைட்ரேட்டு மற்றும் பொட்டாசியம் நைட்ரேட்டு ஆகியவற்றைக் கொண்ட சேர்மங்களில் இது சில நேரங்களில் சேர்க்கப்படுகிறது. யூரியா பாசுபேட்டின் அமிலத்தன்மை Ca, Mg மற்றும் P ஆகியவை கரைசலில் இணைந்து இருக்க அனுமதிக்கிறது. குறைந்த அமிலத் தன்மை நிலைகளில், Ca-Mg பாசுபேட்டுகள் வீழ்படிவாக அடியில் இருக்கும். யூரியா பாசுபேட்டு பெரும்பாலும் குழாய் அமைப்புகளை சுத்தம் செய்ய சொட்டு நீர் பாசனத்தில் பயன்படுத்தப்படுகிறது.

யூரியா பாசுபேட்டு படிக அமைப்பில் உள்ள பாசுபாரிக்கு அமிலம் மற்றும் யூரியா மூலக்கூறுகள் சிக்கலான ஐதரசன் பிணைப்பு வலையமைப்பை உருவாக்குகின்றன.[1] தண்ணீரில் கரைக்கும் போது இது சுதந்திரமாக பிரிகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sundera-Rao, R. V. G.; Turley, J. W.; Pepinsky, R. (1957). "The crystal structure of urea phosphate". Acta Cryst. 10 (6): 435–436. doi:10.1107/S0365110X57001425. Bibcode: 1957AcCry..10..435S. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரியா_பாசுபேட்டு&oldid=3906533" இலிருந்து மீள்விக்கப்பட்டது