உள்ளடக்கத்துக்குச் செல்

யுரேனோபிளைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுரேனோபிளைட்டு
Uranopilite
செருமனியிலுள்ள ஓர் அருங்காட்சியகத்தில் ஒளிர்தலுடன் காணப்படும் யுரேனோபிளைட்டு
பொதுவானாவை
வகைசல்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடு(UO2)6SO4(OH)6O2•14H2O
இனங்காணல்
படிக அமைப்புமுச்சாய்வு
பிற சிறப்பியல்புகள் கதிரியக்கம்
மேற்கோள்கள்[1][2]

யுரேனோபிளைட்டு (Uranopilite) என்பது (UO2)6SO4(OH)6O2•14H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு யுரேனியத் தாதுவாகும். நீரேற்ற யுரேனைல் சல்பேட்டு ஐதராக்சைடு என்று இது வகைப்படுத்தப்படுகிறது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் யுரேனோபிளைட்டு கனிமத்தை Up[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

பல யுரேனைல் தாதுக்களைப் போலவே யுரேனோபிளைட்டும் ஒளிர்கிறது. கதிரியக்கப் பண்பையும் பெற்றுள்ள இது சாதாரண வெளிச்சத்தில் வைக்கோல் மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது. யுரேனோபிளைட்டு புற ஊதா ஒளியின் கீழ் ஒரு பிரகாசமான பச்சை நிறத்தை ஒளிரச் செய்கிறது.

ஆறு யுரேனைல் ஐங்கோண இரட்டைப்பட்டைக்கூம்புக் கொத்துகளை யுரேனோபிளைட்டு கொண்டுள்ளது. இவை மத்தியக்கோட்டின் விளைம்புகளையும் செங்குத்துகளையும் பகிர்ந்து கொள்கின்றன. கொத்துகள் செங்குத்துகளுடன் சல்பேட்டு நான்முகியைப் பகிர்ந்துகொண்டு குறுக்குப் பிணைப்பு மூலம் சங்கிலிகளாக உருவாகின்றன. யுரேனோபிளைட்டிலுள்ள சங்கிலிகள் நேரடியாக ஐதரசன் பிணைப்புகளாலும் இடைநிலையான H2O குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

யுரேனோபிளைட்ட்டு கனிமம் மற்ற யுரேனைல் தாதுக்களான சிப்பைட்டு மற்றும் யோகண்ணைட்டு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. அவற்றைப் போலவே வழக்கமாக யுரேனியம் சுரங்கங்களில் ஒரு மலர்ந்த மேலோடாகக் காணப்படுகிறது.

யுரேனோபிளைட்டு கிடைக்கும் சில முக்கியமான இடங்கள்:

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.mindat.org/min-4108.html Mindat
  2. https://www.mineralienatlas.de/lexikon/index.php/MineralData?mineral=Uranopilite Mineralienatlas
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனோபிளைட்டு&oldid=4093678" இலிருந்து மீள்விக்கப்பட்டது