யுரேகா வைரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுரேகா வைரம்
Eureka Diamond
எடை10.73 காரட்டுகள் (2.146 g)[1]
நிறம்பழுப்புமஞ்சள்
வெட்டுCushion-shaped brilliant[2]
மூல நாடுகேப்காலனி
கண்டுபிடிப்பு1867
உண்மையான உடைமையாளர்எராஸ்மஸ் ஜேக்கப்ஸ்
தற்போதைய உடைமையாளர்தென்னாப்பிரிக்க மக்கள்

யுரேகா வைரம்Eureka Diamond ) என்பது தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வைரம் ஆகும்.  இது முதலில் 21.25 காரட் (4.250 கிராம்) எடை தொண்டதாக இருந்தது. பின்னர் இது 10.73 காரட் (2.146 கிராம்) எடையில் வெட்டப்பட்டு பட்டைத்தீட்டப்பட்டது.  தற்போது இது தென்னாப்பிரிக்காவின், கிம்பெர்லி நகரத்தில் உள்ள மைன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் அங்கு வைர அகழ்வுகள் பெருகி  தேசத்தின் தலையெழுத்து, பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை எல்லாமே மாறியது.

கண்டுபிடிப்பும் அடையாளம் காணுதலும்[தொகு]

பதினைந்து வயது எராமஸ் ஜேக்கப்ஸ் என்ற சிறுவன் 1867 ஆம் ஆண்டு ஹப்டவுனுக்கு அருகே வைரம் என்று தெரியாமலேயே ஆரஞ்சு ஆற்றங்கரையில் யுரேகா வைரத்தைக் கண்டுபிடித்தான். விரைவில் அதை அவனின் பக்கத்து வீட்டில் இருந்த ஸ்கால்க் வான் நைகெர்க் என்பவர் வாங்கிக்கொண்டார். அவர் அக்கல்லை ஆராய்வதற்காக ஜான் ஓ’ரெய்லி என்ற வியாபாரியிடம் கொடுத்தார். அவர் இது ஒரு வைரக்கல்லாக இருக்கக்கூடும் என்று தான் நம்புவதாக கூறி, [3] கிரஹாம்ஸ்டன் நகரத்தில் வசிக்கும் வில்லியம் அதெர்ஸ்டோன் என்ற ஆய்வாளருக்கு சாதாரண அஞ்சலில் அனுப்பி வைத்தார். இக்கல்லை ஆராய்ந்த அதெர்ஸ்டோன் இது 21.25 கேரட் (4.25 கிராம்) எடையுள்ள வைரம் என உறுதிபடுத்தினார்   (சில தரவுகள் இது 24 காரட் (4.8 கிராம்) எடை கொண்டதாக கூறுகின்றன).[4]

முதல் விற்பனையும், தற்போதைய நிலையும்[தொகு]

1867இல் நடந்த பாரிசு பன்னாட்டுக் கண்காட்சியில் யுரேகா வைரம் காட்சிக்கு வைக்கப்பட்டது. இல்லை, யுரேகா வைரத்தின் மாதிரிதான் அங்கே வைக்கப்பட்டது என்றும், உண்மையான வைரம், விக்டோரியா ராணி பரிசோதிப்பதற்காக பிரிட்டனின் வின்ட்சர் கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று சிலதரவுகள் கூறுகின்றன. தென்னாப்பிரிக்கவுக்குத் திரும்பிய யுரேகா வைரத்தை அப்போது கேப்காலனியின் ஆளுநராக இருந்த சர் பிலிப் வொட்ஹவுஸ்  £500 க்கு வாங்கினார். சர் பிலிப் அதை ஐக்கிய இராச்சியத்துக்குக் கொண்டு சென்றார். அங்கு 100 ஆண்டுகளாக அது இருந்தது, அந்த நேரத்தில் யுரேகா வைரம் அழகான வடிவில் வெட்டப்பட்டது. ஒரு கையணியில் பொருத்தப்பட்டிருந்த நிலையில் யுரேகா வைரமானது, 1947 ஏப்ரல் 16 அன்று லண்டனில் கிருஷ்டி ஏல நிறுவனத்தால் ஓர் ஏலத்தில்  £ 5,700 க்கு விற்கப்பட்டது.[5] யுரேகா கண்டெடுக்கப்பட்ட நூறாவது ஆண்டான 1967 ஆண்டில் டி பியர்ஸ் நிறுவனம் அதனை வாங்கி, தென்னாப்பிரிக்க மக்களுக்கு நன்கொடையாக அளித்தது. தற்போது  கிம்பெர்லி நகர அருங்காட்சியத்தில் யுரேகா வைரம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Harlow, George E (1904). The Nature of Diamonds. Cambridge University Press. பக். 79–80. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-62935-5. https://books.google.com/books?id=VO_dDD0mWmMC&pg=PA79. பார்த்த நாள்: 2009-09-28. 
  2. Michael O'Donoghue (2006). Gems: their sources, descriptions and identification. Butterworth-Heinemann. பக். 692. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7506-5856-8. https://books.google.com/books?id=ZwcM5H-wHNoC&pg=PA692. 
  3. Williams, Gardner Fred (1904). The diamond mines of South Africa. New York, B. F. Buck & company. பக். 117–120. https://archive.org/stream/diamondminesofso01willrich#page/123/mode/1up. பார்த்த நாள்: 2009-07-25. 
  4. "Eureka". De Beers. 2009-07-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-09-28 அன்று பார்க்கப்பட்டது.
  5. "The Eureka". London Diamond Bourse. 2009-08-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-07-25 அன்று பார்க்கப்பட்டது.
  6. SA Venues entry on the Kimberley Mine Museum
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேகா_வைரம்&oldid=3569298" இருந்து மீள்விக்கப்பட்டது