பன்னாட்டுக் கண்காட்சி (1867)
கண்காட்சி பாரிசு 1867 | |
---|---|
![]() சாம்ப் டி மார்சில் அமைந்த முதன்மைக் கட்டிடம் | |
மேலோட்டம் | |
பி.ஐ.இ-வகுப்பு | பன்னாட்டு கண்காட்சி |
பெயர் | Exposition universelle |
பகுதி | 68,7 எக்டேர் |
கண்டுபிடிப்பு | நீரியல் உயர்த்தி, வலிதாக்கிய காங்கிறீட்டு |
வருகையாளர் | 15,000,000 |
பங்குபற்றுவோர்(கள்) | |
நாடுகள் | 42 |
வணிகம் | 52,200 |
அமைவிடம் | |
நாடு | பிரான்சு |
நகரம் | பாரிசு |
இடம் | சாம்ப்-டி-மார்சு |
ஆள்கூறு | 48°51′21.7945″N 2°17′52.3703″E / 48.856054028°N 2.297880639°E |
காலக்கோடு | |
தொடக்கம் | ஏப்ரல் 1, 1867 |
முடிவு | அக்டோபர் 31, 1867 |
பன்னாட்டு கண்காட்சி | |
முந்தியது | 1862 பன்னாட்டுக் கண்காட்சி in இலண்டன் |
அடுத்தது | Weltausstellung 1873 Wien in வியன்னா |
பன்னாட்டுக் கண்காட்சி 1867 என்பது, 1867 ஏப்ரல் முதலாம் தேதி முதல் அதே ஆண்டு நவம்பர் 3ம் தேதிவரை பிரான்சின் பாரிசில் நடைபெற்ற கண்காட்சியைக் குறிக்கும். 42 நாடுகள் இக்காண்காட்சியில் கலந்துகொண்டன. இரண்டாம் பிரெஞ்சுப் பேரரசின் உச்சநிலையைக் குறிக்கும் முகமாக, பேரரசன் மூன்றாம் நெப்போலியனின் ஆணையைத் தொடர்ந்து 1864இலேயே ஏற்பாடுகள் தொடங்கின.
தொடக்கம்[தொகு]
1864ல் மூன்றாம் நெப்போலியன், 1867ம் ஆண்டில் பாரிசில் பன்னாட்டுக் கண்காட்சியொன்றை நடத்தும்படி ஆணை பிறப்பித்தார். இளவரசர் ஜெரோம் நெப்போலியனின் தலைமையில் இதற்கென ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு முதற்கட்ட வேலைகள் தொடங்கின. 119 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பாரிசின் இராணுவ அணிவகுப்புக்குரிய வெளியான சாம்ப் டி மார்சும், 52 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிலியன்கோர்ட் தீவும் கண்காட்சிக்கான இடமாகத் தேர்வாகியது. முதன்மைக் கட்டிடம் மூலைகள் வளைவாக அமைந்த செவ்வக வடிவம் கொண்டது. இதன் நீளம் 1608 அடிகள் (490 மீ), அகலம் 1247 அடிகள் (380 மீ). சுற்றிலும் பூங்காவும், அதைச் சுற்றிக் காட்சியரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. முதன்மைக் கட்டிடத்தை விட ஏறத்தாழ 100 சிறிய கட்டிடங்களும் கட்டப்பட்டன.
கண்காட்சியின் கட்டுமானத்துக்கும், பேணலுக்குமான நிதியில் $1,165,020 பிரான்சு அரசின் நன்கொடை, அதேயளவு தொகையைப் பரிசு நகரம் வழங்கியது, $2,000,000 பொதுமக்களிடம் இருந்தும் கிடைத்தது.
காட்சிப்பொருள்கள்[தொகு]
கண்காட்சியில் 50,226 காட்சிப்படுத்துவோர் பங்குபற்றினர். இவர்களில் 15,055 பேர் பிரான்சையும் அதன் குடியேற்ற நாடுகளையும் சேர்ந்தோர். 6176 பேர் பெரிய பிரித்தானியாவையும் அயர்லாந்தையும் சேர்ந்தோர். ஐக்கிய அமெரிக்காவிலிருந்து 703 பேர் பங்குபற்றினர். முதன் முதலாக சப்பான் தனது தேசியக் காட்சிக்கூடத்தில் கலைப்பொருட்களைக் காட்சிக்கு வைத்திருந்தது.[1] இவற்றில் பெரும்பாலானவை கியூசுவின் சட்சுமா, சாகா குலங்களைச் சேர்ந்தோருடையவை.