யாதகிரி லெட்சுமி நரசிம்மர் கோவில்

ஆள்கூறுகள்: 17°35′21″N 78°56′41″E / 17.5892°N 78.9446°E / 17.5892; 78.9446
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாதகிரி லெட்சுமி நரசிம்மர் கோவில்
யாதகிரி லெட்சுமி நரசிம்மர் கோவில்
யாதகிரி லெட்சுமி நரசிம்மர் கோவில் is located in தெலங்காணா
யாதகிரி லெட்சுமி நரசிம்மர் கோவில்
யாதகிரி லெட்சுமி நரசிம்மர் கோவில்
தெலுங்கானாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்:17°35′21″N 78°56′41″E / 17.5892°N 78.9446°E / 17.5892; 78.9446
பெயர்
பெயர்:யாதகிரிகுட்டா
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தெலுங்கானா
மாவட்டம்:புவன யாதகிரி
அமைவு:போங்கிர்
கோயில் தகவல்கள்
மூலவர்:நரசிம்மர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை


யாதகிரி நரசிம்மர் கோவில் (Yadagirigutta Temple) தெலுங்கானாவில் உள்ள விஷ்ணுவின் நான்காம் அவதாரமான நரசிம்மர் கோவில் ஆகும்.இந்த கோவில் இந்தியாவில் தெலுங்கானா மாநிலதில் புவனா யாததிரி மாவட்டதில் உள்ள யாதகிரிகுட்டா எனும் சிறு நகரதில் உள்ள சிறுகுன்றில் உள்ளது[1]. இந்த கோவில் ஐதராபாத் இருந்து 52 கி.மீ துரத்தில் உள்ளது.அதிக அளவு பக்தர்கள் கூட்டம் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் வருவது உண்டு.

வரலாறு[தொகு]

புராண யாதகிரி நரசிம்மர் கோவில் புதிய யாதகிரி நரசிம்மர் கோவில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. புராண யாதகிரி நரசிம்மர் கோவிலில் இரண்டு அதிசயங்கள் உள்ளன, ஒன்று ஹனுமானின் கால் அடி தடம் மற்றொன்று அங்கு உள்ள தெப்பகுளம். ஹனுமானின் கால் அடி தடம் ஹனுமான் இங்கிருந்து கிஷரா என்னும் இடத்தில் தாவிய போது வந்த தடம். இப்போதும் மாற்றம் அடையாது இருப்பது. அதே மாதிரி இங்கு உள்ள தெப்பத்தில் தண்ணீர் வற்றாமல் இருப்பது.

திரேதா யுகம் நடக்கும் போது யாத ரிஷி என்னும் முனிவர் வாழ்ந்து வந்தார். இவர் அனுமானின் அருள் பெற்று நரசிம்மரை நினைத்து தவம் செய்து வந்தார். இவரது தவத்தால் மகிழ்ந்த நரசிம்மர் இவர் முன் ஐந்து வடிவில் தோன்றினார். ஐந்து வடிவானது ஜ்வால நரசிம்மர், யோக நரசிம்மர், நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லெட்சுமி நரசிம்மர் ஆகும். இதனால் பிற்காலங்களில் பஞ்ச நரசிம்ம கோவில் என பெயர் பெற்றது. பதினெட்டு புராணங்களில் ஒன்றான ஸகந்த புராணத்தில் இந்த கோயிலை பற்றிய தகவல்கள் உள்ளது[சான்று தேவை].

இன்னொரு புராணக்கதையின்படி நாராயணர் யாத ரிஷியின் தவத்தால் மகிழ்ந்து ஹனுமனை அனுப்பி முனிவருக்கு புனித இடத்தை காட்டியதாகவும் அங்கு இறைவன் லட்சுமி நரசிம்மர் வடிவில் முனிவர் முன் தோன்றியதாகவும் உள்ளது. அந்த இடம் இப்போதுள்ள கோவில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கு முனிவர் பல காலங்கள் இறைவனை வழி பட்டுள்ளார். முனிவரின் முக்திக்கு பிறகு அங்குள்ள மக்கள் இறைவனைப் பற்றி அறிந்து அவரை வழிபட்டனர். ஆனால் மக்களின் முறையற்ற வழிபாட்டின் காரணமாக லட்சுமி நரசிம்மர் மலைக்குள் சென்று விட்டார். மக்கள் பல நாட்கள் இறைவனை தேடினார்கள். பல ஆண்டுகள் கழித்து ஒரு பக்தையின் கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தை காட்டினார். அங்கு அவர்கள் சென்ற போது இறைவன் அவரின் ஐந்து உயரிய அவதாரங்களால் காட்சியளித்தார்.

அமைப்பும் வழிபாடும்[தொகு]

இந்த குடவரைக் கோவிலிலுள்ள கருவறை உச்சத்தில் உள்ள விமானம் விஷ்ணுவின் கையில் உள்ள தங்க சுதர்ஸன சக்கரம் ஆகும் (3 அடி X 3அடி ). கோவில் அலங்காரங்களும் பொருட்களும் 6 கி.மீ தொலைவில் இருந்தே அறியலாம். பல வருடங்களுக்கு முன் சக்கரம் பக்தர்களுக்கு வழிகாட்டிய போல் செயற்பட்டுள்ளது. இந்த கோவில் பல ரிஷிகளால் வழிபட்டுள்ளதால் ரிஷி ஆராதன ஷேத்திரம் என பெயர் உள்ளது.

இங்குள்ள நரசிம்மர் பக்தர்களுக்கு உள்ள தீராத நோயை தீர்ப்பதால் வைத்திய நரசிம்மர் என அழைக்கப்படுகிறார். அதைப்போல் தீய சக்திகளாலும், தீய கிரகங்களாலும் பிடிக்கப் பட்டவர்களை துன்பங்களை அகற்றி, காப்பாற்றி நல்வழி படுத்துபவராகவும் விளங்குகிறார். பல சமயங்களில் பக்தர்களின் கனவுகளில் நரசிம்மர் தோன்றி அவர்களுக்கு தேவையான மருத்துவ முலிகைகளை தருவதும், பக்தர்களை நோயை தீர்ப்பதும், அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லாசியும் வழங்குகிறார்.

ஒரு மண்டல (48 நாள்) விரத முறை மிக விசேஷமானது. இங்கு ஆராதனைகளும், பூஜைகளும் பாஞ்சராத்திரம் நெறிகளின்படி பின்பற்றப்படுகிறது.

விரிவாக்கப் பணிகள்[தொகு]

யாதகிரி லெட்சுமி நரசிம்மர் கோயிலை ஆந்திராவின் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நிகராக மாற்ற தெலங்காணா அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கியது. கடந்த 2016ஆம் ஆண்டு இக்கோயிலின் கட்டுமான பணிகள் தொடங்கின. இதற்கென யாதாத்ரி கோயில் வளர்ச்சி குழுவை முதல்வர் சந்திரசேகர ராவ் அமைத்தார். இந்த குழுவினரின் மேற்பார்வையில் கோயிலை பிரம்மாண்டமாக 14 ஏக்கர் பரப்பளவில் ஆகம விதிப்படியானதாக, காக்கத்தியர் கட்டடக்கலையில் கட்டப்பட்டுவருகிறது.

இக்கோயில் மொத்தம் ஏழு கோபுரங்கள் உள்ளடக்கியதாக விரத பீடம், சுவாமிக்கான பூந்தோட்டம், கல்யாண மண்டபம், சத்திரங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. மேலும் 12 ஆழ்வார்களை குறிக்கும் வகையில் 12 மிகப்பெரிய தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் முகப்பில் ஒரு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவு பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Homam performed at Yadagirigutta". The Hindu. 2010-02-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-03-18 அன்று பார்க்கப்பட்டது.
  2. தெலங்கானாவின் யாதகிரிகுட்டாவில் ஏழுமலையான் கோயிலுக்கு நிகராக ரூ.1,800 கோடியில் கட்டப்படும் லட்சுமி நரசிம்மர் கோயில், கட்டுரை, என் மகேஷ் குமார், 2021 ஏப்ரல் 1, இந்து தமிழ் நாளிதழ்

வெளியிணைப்புகள்[தொகு]