யாதகள்ளி இந்தியச் சிறுமான் வனவிலங்கு காப்பகம்
யாதகள்ளி இந்தியச் சிறுமான் வனவிலங்கு காப்பகம் | |
---|---|
இந்தியச் சிறுமான் | |
அமைவிடம் | கருநாடகம், இந்தியா |
பரப்பளவு | 96.3691 km2 (37.2 sq mi) |
நிறுவப்பட்டது | 2016 |
நிருவாக அமைப்பு | வனத்துறை, கருநாடக அரசு |
யாதகள்ளி இந்திய சிறுமான் வனவிலங்கு காப்பகம் (Yadahalli Chinkara Wildlife Sanctuary) என்பது இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு வனவிலங்கு சரணாலயமாகும். இது இந்தியச் சிறுமான்களின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டது.
வரலாறு
[தொகு]2016-ல் நிறுவப்பட்டது, இந்த காப்பகம் கர்நாடகாவின் முதல் இந்தியச் சிறுமான் சரணாலயம் ஆகும்.[1]
அமைவிடம்
[தொகு]இந்த சரணாலயம் இந்தியாவின் கர்நாடகாவில் பாகல்கோட் மாவட்டத்தில் பிலாகி மற்றும் முதோல் வட்டத்தில் அமைந்துள்ளது. இது 96.3691 km2 (37.2083 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது.[2] பிலாகியில் உள்ள யாதகள்ளி கிராமத்தின் காரணமாக இச்சரணாலயம் இதன் பெயர் பெற்றது.
சரணாலயத்தின் தெற்குப் பகுதியில் காட்டபிரபா நதியும், வடக்குப் பகுதியில் கிருஷ்ணா ஆறும் பாய்கின்றன.[2]
தாவரங்களும் விலங்குகளும்
[தொகு]இச்சரணாலயத்தில் உள்ள காடுகளில் 34 குடும்பங்களில் 67 பேரினங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மர வகைகள் உள்ளன. இவற்றில் மூன்று சிற்றினங்கள் தீபகற்ப இந்தியாவில் மட்டுமே காணப்படக்கூடிய அகணிய உயிர்களாகும்.[3] இங்குக் காணப்படும் மரங்களில் நான்கு சிற்றினங்கள் அழிவுக்கு இலக்காகியும், மற்றும் ஒன்று உலக அளவில் அச்சுறுத்தலுக்கு அண்மித்த இனமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளன.[3]
கர்நாடக மாநிலத்தில், யாதகள்ளி வனவிலங்கு சரணாலயத்தைத் தவிர, புக்கபட்னா இந்தியச் சிறுமான் வனவிலங்கு சரணாலயத்தில் மட்டுமே சிறுமான்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[1] சிறுமான்கள் தவிர, இங்குக் காணப்படும் பாலூட்டிகளில் ஓநாய்கள், குள்ளநரிகள், காட்டுப்பூனைகள் மற்றும் வரிக் கழுதைப்புலி ஆகியவை அடங்கும்.[2] இது பல வண்ணத்துப்பூச்சி இனங்கள், தேனீக்கள், பறவைகள், ஊர்வன மற்றும் சிலந்திகளின் தாயகமாகவும் உள்ளது.
அச்சுறுத்தல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
[தொகு]புதர் காடாக இருந்த இச்சரணாலயம் தோட்டங்களால் சேதங்களைக் கண்டது. காடுகளுக்கு வழங்கப்பட்ட வனவிலங்கு சரணாலயத்தின் தகுதி அப்பகுதியின் வணிகச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பப்படுகிறது.[2] வேட்டையாடுபவர்களின் அச்சுறுத்தல் சரணாலயத்திற்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. பல்வேறு நடவடிக்கைகளால் வேட்டையாடுதல் கட்டுப்படுத்தப்பட்டதால், இந்த வரம்பிற்குள் இந்தியச் சிறுமான் மற்றும் பிற பாலூட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.[4] 2016-ல் 85ஆக இருந்த இந்தியச் சிறுமான்களின் எண்ணிக்கை 2022-ல் 92ஆக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Small leap for chinkaras at Bagalkot sanctuary" (in en). Deccan Herald. 13 February 2022. https://www.deccanherald.com/state/top-karnataka-stories/small-leap-for-chinkaras-at-bagalkot-sanctuary-1081180.html.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "State gets first chinkara sanctuary" (in en-IN). The Hindu. 31 December 2015. https://www.thehindu.com/news/cities/bangalore/State-gets-first-chinkara-sanctuary/article13975024.ece.
- ↑ 3.0 3.1 Koti, Maheshwari; Kotresha, K. (2021). "Trees of Yadahalli Chinkara Wildlife Sanctuary, Bagalkot, Karnataka, India: A checklist" (in en). Plant Science Today 8 (4): 1079–1085. doi:10.14719/pst.2021.8.4.1278. பன்னாட்டுத் தர தொடர் எண்:2348-1900. https://horizonepublishing.com/journals/index.php/PST/article/view/1278.
- ↑ Feb 12, Sangamesh Menasinakai /. "Chinkara population is growing in Bagalkot | Hubballi News - Times of India" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/hubballi/chinkara-population-is-growing-in-bagalkot/articleshow/89512652.cms.