ம. வீ. இராமானுஜாச்சாரியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணலூர் வீரவல்லி ராமானுஜாச்சாரியார் (பிறப்பு:1866-இறப்பு:1940), வேத வியாசர் சமசுகிருத மொழியில் எழுதிய மகாபாரத காவியத்தை முதன்முதலில் தமிழ் மொழியில் மொழிபெயர்த்தவர். இவரது தமிழ் மொழிபெயர்ப்பு மகாபாரதத்தை கும்பகோணம் பதிப்பு என்று அழைப்பர்.

கும்பகோணம் அருகில் மணலூர் கிராமத்தில் 1866ல் பிறந்த இராமானுஜரின் சிறு வயதில் தந்தையை இழந்ததால்; தாயாரால் வளர்க்கப்பட்டார். தனது தாய் மாமன் வீரராகவாச்சாரியாரிடம் தமிழ் மற்றும் சமசுகிருதம், இலக்கணம் மற்றும் வியாகரண சூத்திரங்களைக் கற்றார். மேலும் மெட்ரிக்குலேசன் படிப்பு முடித்த இராமானுஜர் சமசுகிருதத்தில் உயர்கல்வி கற்க காசி சென்றார். காசியில் உள்ள குமாரசாமி மடத்தில் (திருப்பனந்தாள் ஆதீனத்துடன் இணைக்கப்பட்டது) தங்கி படிப்பைத் தொடர்ந்தார். இராமானுஜர் பிரம்ம சூத்திரத்தின் சமசுகிருத விளக்க உரையான ஸ்ரீ பாஷ்யத்தை காசியில் எம். வீ. இராமானுஜாச்சாரியர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.[1]

பின்னர் திருவாவடுதுறை ஆதீனத்தின் இளைய தம்பிரான் அம்பலவாண தேசிகரிடம் தமிழில் உயர் கல்வி கற்றார். அவ்வமயம் இராமானுஜருக்கு உ. வே. சாமிநாதய்யரின் நட்பு கிட்டியது.

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக இருந்த உ. வே. சாமிநாதய்யரின் பரிந்துரையின் பேரில், இராமானுஜர் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் 1893-1911 ஆண்டுகளில் சமசுகிருத பண்டிதராக பணிபுரிந்தார். 1911ல் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். 1905 முதல் வேத வியாசர் சமசுகிருத மொழியில் எழுதிய மகாபாரத காவியத்தை முதன்முதலில் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். மகாபாரத மொழிபெயர்ப்புப் பணியை முடித்தார்.

இராமானுஜாச்சாரியார் சென்னைப் பல்கலைக்கழகக் கல்விக் குழுவில் ஏறத்தாழ 21 ஆண்டுகள் உறுப்பினராகப் பணியாற்றினார்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]