உள்ளடக்கத்துக்குச் செல்

மோனிக் ஓசான் பெல்லிபியாவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோனிக் ஓசான் பெல்லிபியாவ்
இந்தியப் பெருங்கடலின் ஆணை,
மொரிசியசின் குடியரசு தலைவர் (பொறுப்பு)
பதவியில்
29 மே 2015 – 5 சூன் 2015
பிரதமர்அனெரூட் ஜக்நாத்
முன்னையவர்கைலாசு புர்யாக்
பின்னவர்அமீனா குரிப்
பதவியில்
31 மார்ச் 2012 – 21 சூலை 2012
பிரதமர்நவின்சந்திரா ராம்கூலம்
முன்னையவர்அனெரூட் ஜக்நாத்
பின்னவர்கைலாசு புர்ரியாக்
மொரிசியசின் துணைக் குடியரசு தலைவர்
பதவியில்
13 நவம்பர் 2010 – 3 ஏப்ரல் 2016
குடியரசுத் தலைவர்அனெரூட் ஜக்நாத்
கைலாசு புர்யாக்
அமீனா குரிப்
முன்னையவர்அங்கிடி செட்டியார்
பின்னவர்பார்லன் வையாபுரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1942 (அகவை 81–82)
அரசியல் கட்சிமொரிசியசின் தொழிலாள கட்சி
துணைவர்ஏவ்சு ஜோசப் பெல்லிபியாவ்

அக்னசு மோனிக் ஓசான் பெல்லிபியாவ் (Agnès Monique Ohsan Bellepeau) (பிறப்பு: 1942) இவர் ஓர் மொரிசிய அரசியல்வாதியாவார். இவர், 2010 நவம்பர் முதல் 2016 ஏப்ரல் வரை மொரிசியசின் துணை க்குடியரசு தலைவராக இருந்தார். [1] [2] அதிபர் அனெரூட் ஜக்நாத் பதவி விலகி கைலாசு புர்யாக் பதவிக்கு வரும் வரை (2012 மார்ச் 31 முதல் 2012 சூலை 21) மொரிசியசின் துணைக் குடியரசு தலைவராக இருந்தார். கைலாசு புர்யாக் பதவி விலகி அமீனா குரிப் பதவியேற்பு வரை இவர் மீண்டும் 2015 மே 29 முதல் 2015 சூன் 5 வரை குடியரசு தலைவராக பொறுப்பிலிருந்தார்.

தொழில்[தொகு]

இவர் ஒரு பத்திரிகையாளராகவும், தேசிய தொலைக்காட்சி நிறுவனமான மொரிசியசு ஒலிபரப்புக் கூட்டு நிறுவனத்தில் செய்தி அறிவிப்பாளராகவும் இருந்தார்.

இவர் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். துணைக் குடியரசு தலைவர் அங்கிடி செட்டியார் இறந்ததைத் தொடர்ந்து 2010 நவம்பர் 12 அன்று துணைக் குடியரசு தலைவராக நியமிக்கப்பட்டார். தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவராலும் மொரிசியசின் முதல் பெண் துணை துணைக் குடியரசுத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மொரிசியசு தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக இருந்தார். பின்னர் கட்சியின் தலைவரானார். இவரது தந்தை பார்தலோமி ஓசான் கட்சியின் நிறுவன உறுப்பினராக இருந்தார்.

2012 மார்ச் 30 அன்று, மொரிசியசு அதிபர் அனெரூட் ஜக்னாத் நாட்டின் பிரதமருடனான மோதலுக்குப் பிறகு பதவி விலகி, அதிபர் பதவி துணை துணைக் குடியரசு தலைவரான இவரிடம் ஒப்படைத்தார். [3] 2012 சூலை 21 அன்று கைலாஷ் புர்ரியாக் முறையான அதிபராக பதவி ஏற்றார்.

2015 மே 29 அன்று, அதிபர் கைலாஷ் புர்ரியாக் பதவி விலகியதை அடுத்து மீண்டும் இவர் பொறுப்பு குடியரசு தலைவராக பதவியேற்றுக் கொண்டார். 2015 சூன் 5 அன்று அமீனா குரிப் முறையான குடியரசு தலைவர் பதவி ஏற்றார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் ஒரு தொழிலதிபராக இருந்த ஏவ்சு ஜோசப் பெல்லிபோ என்பவரை மணந்தார். இவரது கணவர் இவர் துணைக் குடியரசுத் தலைவராக பதவியேற்ற மூன்று நாட்களுக்குப் பிறகு, 2010 நவம்பர் 16 அன்று இறந்தார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Former Vice Presidents" இம் மூலத்தில் இருந்து 1 ஜனவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190101183300/http://vice-president.govmu.org/English/Former%20VPs/Pages/default.aspx. பார்த்த நாள்: 23 November 2019. 
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  3. Mauritius' president quits after row with PM பரணிடப்பட்டது 2012-03-31 at the வந்தவழி இயந்திரம், Channel News Asia, 30 March 2012